கடி ஜோக் : ‘என்ன மனுசனா இருக்க விடமாட்டீங்களா?’ இப்படியெல்லாமா கடிக்கிறது? மகிழ்ந்து சிரிக்க சில ஜோக்ஸ்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கடி ஜோக் : ‘என்ன மனுசனா இருக்க விடமாட்டீங்களா?’ இப்படியெல்லாமா கடிக்கிறது? மகிழ்ந்து சிரிக்க சில ஜோக்ஸ்!

கடி ஜோக் : ‘என்ன மனுசனா இருக்க விடமாட்டீங்களா?’ இப்படியெல்லாமா கடிக்கிறது? மகிழ்ந்து சிரிக்க சில ஜோக்ஸ்!

Priyadarshini R HT Tamil
Published Mar 10, 2025 02:05 PM IST

கடி ஜோக் : உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த இங்க சில ஜோக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை படித்து சிரித்து மகிழ்ச்சியுடன வாழ வாழ்த்துகிறோம்.

கடி ஜோக் : ‘என்ன மனுசனா இருக்க விடமாட்டீங்களா?’ இப்படியெல்லாமா கடிக்கிறது? மகிழ்ந்து சிரிக்க சில ஜோக்ஸ்!
கடி ஜோக் : ‘என்ன மனுசனா இருக்க விடமாட்டீங்களா?’ இப்படியெல்லாமா கடிக்கிறது? மகிழ்ந்து சிரிக்க சில ஜோக்ஸ்!

ஏன்னா, அது சாத்து குடி பழத்தின் சாறாம். ஹாஹாஹா!

இந்த வயசுலயுமா?

• 3 தாத்தா சேர்ந்து கரும்ப தோட்டத்துக்கு போனாங்களாம். அதுல இரண்டு பேர் மட்டும் கரும்பு சாப்டாங்களாம். ஒருத்தர் மட்டும் சப்டலயாம். ஏன்?

ஏன்னா அவர் சுகர் பேஷன்ட்டாம். ஹாஹாஹா!

மருத்துவமனை கடி இல்லாமலா?

• ஹாஸ்பிட்டலுக்கு எப்படி போகணும்?

வேற எப்படி? நோயோடத்தான். ஹாஹாஹா!

நான் வெஜ்னா என்ன?

• நான் வெஜ் காய் எது?

முட்டை கோஸ்தான். வேற எது? அதில் தான் முட்டை உள்ளதே. ஹாஹாஹா!

இதெல்லாம் ஒரு கேள்வியா?

• முட்டைக்கு நடுவுல என்ன இருக்கும்?

மஞ்சள் கருன்னு உங்கள் சயின்டிஸ்ட் மூளை கூறும்,

ஆனா சாரிங்க, முட்டைக்கு நடுவுல ‘ட்’ தான் இருக்கும். ஹாஹாஹா!

அப்பா என்ன ஒரு அறிவு

• தூங்குறதுக்கு முன்னாடி ஏன் குட் நைட் சொல்றோம்?

ஏன்னா தூங்கிட்டா சொல்ல முடியாதுல்ல அதான். ஹாஹாஹா!

• கிணத்துக்குள்ள கல்ல போட்டா ஏன் அந்தக் கல் மூழ்குது?

ஏன்னா, அதுக்குத்தான் நீச்சல் தெரியாதுல்ல. ஹாஹாஹா!

என்ன ஆவி?

• எல்லா ஆவியும் பிடிக்கலாம். ஆனா இந்த ஒரே ஒரு ஆவிய மட்டும் பிடிக்கவே முடியாது. அது என்ன?

வேற என்ன ஆவி கொட்டாவிதான். ஹாஹாஹா!

இது ஸ்கூல் ஜோக்

• ஒரு ஸ்கூல்ல மட்டும் டீச்சர் வந்தா எல்லா மாணவர்களும் சிரிப்பாங்களாம், ஏன்?

ஏன்னா, அந்த வாத்தியார்தான் சொன்னாங்களாம், துன்பம் வரும் வேளையில் சிரிக்கணும்னு. ஹாஹாஹா!

காச பாத்தா காந்தி தாத்தா போல நாம் சிரிப்போம்

• எல்லா பண நோட்டுலையும் காந்தி தாத்தா ஏன் சிரிச்சுக்கிட்டே இருக்காரு தெரியுமா?

ஏன்னா, அழுதா பண நோட்டு நெனஞ்சு போய்டும்ல்ல, அதான். ஹாஹாஹா!

என்ன என்ன கனவு கண்டாயோ

• ஒருத்தர் தூங்கும்போது கண்ணாடி போட்டுக்கிட்டே தூங்குவாராம், ஏன்?

ஏன்னா கண்ணாடி போட்டுக்கிட்டு தூங்குனாதான் கனவு தெளிவா வருமாம்.

குண்டு ஒன்று வெச்சிருக்கேன்

• ஒரு பையன் கடைக்குப்போய் ஊசி வாங்குனானாம். ஆனா அது வெடிச்சுடுச்சாம். ஏன்?

ஏன்னா அவன் வாங்கினது குண்டூசியாம். ஹாஹாஹா!

வாவ், என்ன ஒரு ப்ரைன்?

• ஒரு எறும்ப கட் பண்ணினா என்னவாகும்?

கட்டெறுப்பாகும். ஹாஹாஹா!

• மழை வருவதற்கு முன்னாடி வானம் எப்படி இருக்கும்?

மழை வராம இருக்கும். ஹாஹாஹா!

• ஒருத்தன் திடீர்ன்னு பசிக்கிதுன்னு மொபைலை கடிச்சு சாப்பிட்டானாம், ஏன்?

ஏன்னா அது ஆப்பிள் மொபைலாம். ஹாஹாஹா!

• ஒரு பழத்த சாப்பிடவும் முடியாது, சாறு பிழியவும் முடியாதாம். அது என்ன பழம்?

அது அழுகிய பழம். ஹாஹாஹா!

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.