Women Health: உடல் பாதிப்பை வெளிப்படுத்தும் உஷார் அறிகுறிகள்! அலட்சியம் இல்லாமல் மருத்துவ ஆலோசனை பெறுங்கள்
உடல் சார்ந்த சில பிரச்னைகளின் வெளிப்பாடு நோய் அல்லது உடல் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுகளாக இருக்கலாம். எனவே அதிகமாக உழைப்பை வெளிப்படுத்தும் பெண்கள் எந்தவொரு அறிகுறிகளையும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும்.
வீடு, அலுவலகம் என இரண்டு இடங்களிலும் தொடர்ச்சியாக பணிகளை செய்வதில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக உழைப்பை வெளிப்படுத்துகிறார்கள். இதன் காரணமாக உடலில் ஏற்படும் உபாதைகளை பெரிதாக எடுத்து கொள்ளாமல் பலரும் அலட்சியமாக இருந்து விடுகிறார்கள்.
அந்த வகையில் அதிக பணி செய்வதன் காரணமாக ஏற்படும் தலைவலி, உடல் எடை மாற்றம், மூச்சுத் திணறல் போன்றவை நாளைடைவில் மிகப் பெரிய பிரச்னையை உண்டாக்கலாம். எனவே உடலில் எந்த விதமான பாதிப்பு தென்பட்டாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று அதன் பாதிப்பை பற்றி முழுமையாகவும் தெரிந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அதிகப்படியாக வேலை செய்யும் பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் பிரச்னைகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
சுவாசிப்பதில் திணறல்
ஆண்களைப் போல் அல்லாமல் பெண்களுக்கு மாரடைப்பானது எந்த விதமான வலியும் வெளிப்படையான அறிகுறியையும் காட்டாமல் அமைதியாக ஏற்படக்கூடும். குறிப்பாக பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுத்துவதற்கான அறிகுறியாக மார்பு வலிக்கு பதிலாக மூச்சுத் திணறல், அதீத சோர்வு போன்றவை உள்ளது. ரத்த சோகை அல்லது நுரையிரல் நோய் தொற்று காரணமாகவும் மேற்கூறிய அறிகுறிகளில் ஏதேனும் ஏற்படலாம்.
மார்பு வலி அல்லது விரைவான இதயதுடிப்பு
மார்பு வலி, விரைவான இதயதுடிப்பு, கைகள் அல்லது தோல்பட்டை அல்லது தாடையில் வலி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை இதய நோய் பாதிப்புக்கான சிக்னலாக இருக்கலாம். அரிதாக நிகழும் இருதய தசை தமனிகளின் தன்னிச்சையான துடிப்பு இளவயதினருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆண்களை விட பெண்கள்தான் இந்தப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
திடீர் பலவீனம்
முகம் மற்றும் கைகால்களில் திடீரென பலவீனம் ஏற்படுவது. இது பக்கவாதத்துக்கான அறிகுறியாக இருக்கலாம். திடீர் குழப்பம், மந்தமான பேச்சு, மங்கலான பார்வை, நடப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளும் பக்கவாதம் பாதிப்பு ஏற்படுவதை குறிக்கிறது. இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்ய வேண்டும்.
மாதவிலக்கு சுழற்ச்சியில் மாற்றம்
பணிக்கு செல்லும் பல பெண்களுக்கு இதுவொரு பொதுவான பிரச்னையாகவே உள்ளது. இருப்பினும் மாதவிலக்கு சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டலோ, ரத்த கசிவின் அளவு, வலி போன்றவற்றில் மாற்றத்தை உணர்ந்தலோ உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
இவை மெனோபாஸ் தொடர்புடையாதாகவோ அல்லது பாலிசிஸ்டிக் கருப்பை நோய் அல்லது கருப்பை நார் திசுக்கட்டிகள் போன்றவற்றை குறிப்பதாக இருக்கலாம்.
அதேபோல் தீவிரமான உடல் நல பிரச்னைகளான இடுப்பு பகுதியில் தொற்று, யோணி புற்றுநோய் பாதிப்புகளாகவும் இருக்கலாம். எனவே இதுபோன்ற தருணங்கள் கண்டிப்பாக மருத்துவரை பார்த்து ஆலோசனை பெறுவதை தவிர்க்ககூடாது.
சருமத்தில் மாற்றங்கள்
திடீரென உங்களது சருமங்களில் மாற்றங்கள் உண்டாகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். உங்களது அக்குல், கழுத்தின் பின்புற பகுதிகளில் கருப்பாக நிறம் படிதல் போன்றவை சர்க்கரை நோய்க்கான ஆரம்பநிலை அறிகுறியாக இருக்கலாம். மேலோடு, செதில் போன்ற அமைப்பு ஏற்படுவது ஆக்டினிக் கெராடோஸிஸ் என்ற தோல் சார்ந்த நோய் பாதிப்பாக இருக்கலாம்.
அதேபோல் உடலில் இருக்கும் மச்சங்களின் அளவு, நிறம் அல்லது புதிதாக எதுவும் உருவாகிறதா என்பதை நன்கு கவனிக்க வேண்டும்.
அசாதாரணமான மார்பக கட்டி
பெண்களின் மார்பகங்கள் இயற்கையாகவே சிறிய கட்டிகளோடு இருக்கும். அதேசமயம் மார்பக சுவர் பகுதியில் ஏதேனும் கட்டி, மார்பக பகுதியின் மேலோட்டமான தோல்களில் மாற்றம், முனை பகுதி தோற்றத்தில் மாற்றம் போன்றவற்றை காண நேரிட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவை மார்பக புற்றுநோய் அறிகுறியாகவும் இருக்கலாம்.
குறட்டை மற்றும் அதிகப்படியான தூக்கம்
நீங்கள் உட்கார்ந்த இடத்தில் தூங்கினாலோ அல்லது கார் ஓட்டும்போதோ என நேரம் காலம் தெரியாமல் தூங்கினாலோ தூக்கத்தில் மூச்சுத்திணறல் தடையாக வாய்புப உள்ளது. அதேபோல் நீங்கள் இரவு முழுவதும் மூச்சு விடுவதில் சிரமம் அடைந்து தொடர்ச்சியாக அதிக சத்தத்துடன் குறட்டை விட நேரிட்டால் இருதய பிரச்னை அல்லது எடை அதிகரிப்பு பாதிப்பு உண்டாகலாம்.
அதிகபட்ச சோர்வு
நீங்கள் சோர்வு அடைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உங்களது ஆற்றல் தொடர்ச்சியாக வெளியேறியதாக உணர்ந்தால் வளர்சிதை மாற்ற கோளாறு அல்லது தீவிரமான அழற்சி நிலையான புற்றுநோய், டிமென்ஷியா அல்லது பார்கின்சன் நோய் பாதிப்பாக இருக்கலாம்.
பார்வை குறைபாடு
ஒரு குறிப்பிட்ட வயதில் உங்கள் கண் பார்வை மங்கலாக தோன்றலாம். ஆனால் திடீரென உங்களுக்கு இரு கண்களிலும் அப்படி தோன்றினால் பக்கவாதம் ஏற்படுவதற்கான விளைவு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒளிரும் விளக்குகள் அல்லது வண்ணமயமான ஆராக்களை பார்ப்பதன் மூலம் ஒற்றை தலைவலி ஏற்படலாம்.
உங்கள் கண்விழித்திரை கிழந்தாலோ அல்லது தொங்கவிடப்பட்டாலோ இதே அறிகுறிகள் தென்படும். இவற்றை முறையாக கவனிக்காத பட்சத்தில் நிரந்தரமாக பார்வை இழக்க நேரிடும்.
அதிகபட்ச மனஅழுத்தம் மற்றும் கவலை
எல்லோரது வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. அதனால் இதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்ற அர்த்தமில்லை. மனஅழுத்தத்தை கையாள்வது மிகவும் கடினமாகவும், உங்களது அன்றாட வேலைகள் மேற்கொள்வதில் தடையாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உதவியை நாட வேண்டும். மனநல ஆரோக்கியத்தில் எந்த விதமான புறக்கணிப்பும் காட்ட கூடாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://www.facebook.com/HTTamilNews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்