Women Health : உடல் எடையைக் குறைக்க முடியாமல் பெண்கள் தவிக்க காரணம் - பிரத்யேக பிரச்னைகள் - மருத்துவர் என்ன சொல்கிறார்?
Women Health : பெண்கள் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவதற்கு காரணம் என்னவென்று பார்க்கலாம். அவர்களுக்கு பிரத்யேகமான பிரச்னைகள் உள்ளன.

பெண்கள் உடல் எடையைக் குறைக்க முடியாமல் தவிக்க காரணம் என்ன என்றும், அவர்களின் பிரத்யேக பிரச்னைகள் என்னவென்றும் பாருங்கள். பெண்களுக்கு மட்டுமே உரிய தனிப்பட்ட உடல் எடை குறைப்பு சவாலாக அது உள்ளது. பெண்கள் உடல் எடையைக் குறைக்க விரும்புவது சவாலான ஒன்றுதான். அதற்கு அவர்களின் உடல், ஹார்மோன்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இருக்கலாம். பெண்கள் உடலின் வளர்சிதை மாற்றம் முதல் சமூக அழுத்தம் வரை பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளை புரிந்துகொண்டால் அவர்களுக்கென சிறப்பான மற்றும் பிர்யேகமான உடல் எடை குறைப்பு திட்டங்களை வகுக்கலாம்.
ஹார்மோன் மாற்றங்கள்
மாதவிடாய்க் காலங்கள், கர்ப்பம் மற்றும் மெனோபாஸ் ஆகிய காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். அது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும். பசியை அதிகரிக்கும், கொழுப்பு சேர்வதைத் ஊக்கப்படுத்தும். இந்த இயற்கை மாற்றங்கள், பெண்களுக்கு உடல் எடை குறைப்பை தொடர்ந்து செய்வதில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
உணர்வின் அடிப்படையில் சாப்பிடுவது
மனஅழுத்தம், பதற்றம் அல்லது உணர்வு ரீதியான சவால்கள் என பெண்களை உணர்வு ரீதியாக சாப்பிடுவதைத் தூண்டும். இதனால் அவர்கள் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை உட்கொள்வார்கள். இது அவர்களின் ஆரோக்கியமான சாப்பிடும் பழக்கத்தை அழிக்கும். இது விரக்தியை உண்டாக்கும். இதனால் அவர்கள் தொடர்ந்து உடல் எடையை இழப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.