Women Health : கருப்பை கட்டிகள் முதல் மனஅழுத்தம் வரை பெண்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு - மருத்துவர் கூறுவது என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Women Health : கருப்பை கட்டிகள் முதல் மனஅழுத்தம் வரை பெண்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு - மருத்துவர் கூறுவது என்ன?

Women Health : கருப்பை கட்டிகள் முதல் மனஅழுத்தம் வரை பெண்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு - மருத்துவர் கூறுவது என்ன?

Priyadarshini R HT Tamil
Jan 29, 2025 05:24 AM IST

Women Health : பெண்களின் பல்வேறு உடல், மனப்பிரச்னைகளுக்கு தீர்வாக மருத்துவர்கள் கூறுவது என்ன?

Women Health : கருப்பை கட்டிகள் முதல் மனஅழுத்தம் வரை பெண்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு - மருத்துவர் கூறுவது என்ன?
Women Health : கருப்பை கட்டிகள் முதல் மனஅழுத்தம் வரை பெண்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு - மருத்துவர் கூறுவது என்ன?

இதற்காக திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

பெண்களை மிரட்டும் நோய்களில் சர்க்கரை நோய், தைராய்டு நோய், கை, கால், இடுப்பு, மூட்டுவலி நோய், ரத்த சோகை, உடல் பருமன், முடி உதிர்தல், மார்பு கட்டிக், மாதவிடாய், வெள்ளைப்படுதல், கருப்பைக் கட்டிகள் சினைப்பை நீர்க்கட்டி மன அழுத்தம் முசுப்பரு. மலக்கட்டு, தூக்கமின்மை போன்றவை மிகவும் முக்கியமானது ஆகும்.

மேற்கண்ட நோய்கள் வருவதற்கு என்ன காரணங்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் தற்கால உணவுமுறை பழக்கம், உழைக்கும் நோமாற்றம், குடும்ப சூழ்நிலை மற்றும் மன அழுத்தமே ஆகும். இவற்றை சரியாக கையாளத்தெரிந்த பெண்கள் தான் மேற்கண்ட நோய்கள் வராமல் பாதுகாப்பாக உள்ளனர். கையாளத் தெரியாமலும், கடைபிடிக்க முடியாமலும் இருக்கும் பெண்கள் தான் பல்வேறு இன்னல்களை சந்தித்து குடும்ப அமைதியை, ஆரோக்கியத்தை, சுய ஆரோக்கியத்தை இழந்து தவிக்கின்றனர்.

எனவே பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகளை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

கருப்பை கட்டிகள் நீங்க

பெண்களின் கருப்பைக் கட்டி, சினைப்பை நீர்க்கட்டி தீர, கருப்பை நலமுடன் இருக்க அசோகப்பட்டை சூரணத்தை 2 கிராம் 2 வேளை (காலை, இரவு) உணவிற்குப் பின்னர் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர கருப்பை சம்பந்தமான நோய்கள் தீரும். வெள்ளை கரிசலாங்கன்னி, மஞ்சள் கரிசலாங்கன்னி, குப்பை மேனி, வல்லமை, நீவி, கரந்தை சம அளவு சேர்த்து நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 2 கிராம் சாப்பிட்டடால் நல்லது.

நாட்பட்ட வெள்ளைப்படுதல் தீர

படிகாரம் பொரித்தது 35 கிராம், நெல்லிவற்றல் 35 கிராம், கற்கண்டு 35 கிராம் மூன்றையும் தனித்தனியாக இடித்து, பின் ஒன்றாக கலந்துவைத்துக்கொண்டு, 2 கிராம் வீதம் காலை, இரவு உணவுக்கு முன், இளநீர் அல்லது மோரில் கலந்து சாப்பிட்டுவர பெண்களுக்கான நாட்பட்ட வெள்ளைப்படுதல், நீர்க்கட்டு, நீர்எரிச்சல் தீரும்.

கர்ப்பம் தரிக்க

பெண்கள் கர்ப்பம் தரிக்க, மஞ்சள் 10 கிராம், தருப்பை 10 கிராம், கருஞ்சீரகம் 10 கிராம், பனை வெல்லம் 30 கிராம் எடுத்து, அனைத்தையும் இடித்து, சலித்து வைத்துக்கொண்டு பின் பனை வெல்லம் கலந்து பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாதவிடாய் ஏற்பட்ட, 3ம் நாள், குளித்துவிட்டு பின்னர், காலை வெறும் வயிற்றில் 20 கிராம் எடுத்து சாப்பிட்டு தண்ணீர் குடிக்கவேண்டும். 4ம் நாளும், 5ம் நாளும் இதேபோல் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து 3 முதல் 5 மாதங்கள் இம்முறையை கடைபிடிக்க பெண்கள் கர்ப்பம் தரிக்க முடியும்.

சர்க்கரை நோய் மற்றும் ரத்தக்கொதிப்பு தீர

சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு நோய் தீர மருத்து ஆவாரம் பூ ஞாணம், செம்பருத்தி சூரணம், அருகம்புல் சூரணம், சீந்தில் சூரணம், சிறுகுறிஞ்சான் சூரணம், திரிகடுகு சூரணம், தத்தை சூசி சூரணம், திரிபலா சூரணம், மல்லி சூரணம், இலைகள் அனைத்தும் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு நோய் தீர்க்கும் சித்த மருந்துகள்.

மனஅழுத்தம்

பெண்கள் தங்களுக்கு ஏற்படும் மனது மற்றும் உடல் ரிதியான பிரச்சனைகளை எனிய பல சித்த மருந்துகள் மூலமும். பல்வேறு பயிற்சிகள் மூலமும், உணவு முறை மாற்றங்கள் மூலமும் எளிதில் தீர்க்க முடியும். நோய்கள் வராமல் தடுக்கமுடியும். எனவே உங்களுக்கு தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவர்களை அணுகி தீர்வுகளைப் பெறலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.