Women Empowerment : சாதிக்க துடிக்கும் பெண்களா? உங்களிடம் நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டியது என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Women Empowerment : சாதிக்க துடிக்கும் பெண்களா? உங்களிடம் நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டியது என்ன?

Women Empowerment : சாதிக்க துடிக்கும் பெண்களா? உங்களிடம் நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டியது என்ன?

Priyadarshini R HT Tamil
Updated Aug 01, 2024 11:18 AM IST

Women Empowerment : சாதிக்க துடிக்கும் பெண்களா? உங்களிடம் நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டியது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Women Empowerment : சாதிக்க துடிக்கும் பெண்களா? உங்களிடம் நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டியது என்ன?
Women Empowerment : சாதிக்க துடிக்கும் பெண்களா? உங்களிடம் நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டியது என்ன?

வளர்ச்சி மற்றும் அதிகாரம்

ஒவ்வொருவருக்கும் கோணங்கள் மற்றும் முக்கியத்துவங்கள் மாறுபடும். எனவே, தனிப்பட்ட வளர்ச்சி குறித்த உரையாடல் மிகவும் முக்கியம். எனவே ஒவ்வொரு பெண்ணும் மாற்றிக்கொள்ள வேண்டியது என்று பொதுவாகக் கூறாமல், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு முக்கியமாக என்ன தேவை என்பதை முன்னிலைப்படுத்திவிடலாம்.

சுய அன்பு கொள்ளுங்கள்

உங்களுடன் உங்களுக்கு நேர்மறையான உறவை வளர்த்தெடுங்கள். எனவே உங்களின் மதிப்பு மற்றும் சுய இரக்கம் என்பதை மதிக்க வேண்டியது மிகவும் அவசியம். உங்களை நீங்கள் நேசிக்கும்போதுதான், உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே பெண்களுக்கு சுயஅன்பு மிகவும் அவசியம்.

மனஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

உங்களுக்க தேவைப்படும்போது, மனஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மனஅமைதி மற்றும் நிறைவை பயிற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்வில் மனஅழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். அதற்காக யோகா, தியானம், வெளியூர் பயணம் என்று உங்களுக்கு எது மகிழ்ச்சி தருகிறதோ அதில் ஈடுபடுங்கள்.

தன்னம்பிக்கையை வளர்த்தெடுங்கள்

நம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள். முதலில் சிறிய குறிக்கோள்களை வகுத்து, அதில் சாதித்து காட்டுங்கள். பின்னர், சாதனைகளை புரிய உங்களுக்கு சவுகர்யமான இடத்தில் இருந்து எழுந்து வாருங்கள்.

எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள்

உங்களின் நேரம், ஆற்றல் மற்றும் மனநலன் என அனைத்துக்கும் உதவக்கூடிய ஆரோக்கியமான எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள். எனவே உங்கள் மீது அக்கறை கொள்ள தேவைப்படும் இடத்தில் கட்டாயம் முடியாது சொல்ல பழகுங்கள். உங்களுக்கு உகந்ததை செய்யுங்கள். அதிகப்படியாக செய்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.

கற்றலில் முதலீடு செய்யுங்கள்

காலம் முழுவதும் கற்பதற்கு நேரம் மற்றும் பணத்தை முதலீடு செய்யுங்கள். அது புதிய திறனை பெறுவதாக இருக்கட்டும் அல்லது நாட்டு நடப்புகள் குறித்து அறிந்து வைத்திருப்பதாக இருக்கட்டும். உங்களின் தனிப்பட்ட ஆர்வங்களை வளர்த்துக்கொள்வதில் ஆகட்டும். நீங்கள் எப்போதும் கற்பதில் ஆர்வம் காட்டுபவராக இருங்கள்.

ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தெடுங்கள்

உங்களைச் சுற்றி நேர்மறையான எண்ணங்களை உருவாக்குங்கள். அது மற்றவர்களுக்கு ஆதரவு தரும். உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து அதை வளர்த்தெடுங்கள். அது உங்க்ள வாழ்வுக்கு நேர்மறையாக உதவும். எனவே உங்களைச் சுற்றி நல்ல உறவுகள் சூழ்ந்திருக்கவேண்டும்.

பொருளாதார கல்வி

உங்கள் பொருளாதார அறிவை பயன்படுத்தி, ஒரு பட்ஜெட் போடுவது, சேமிப்பு, எதிர்கால சேமிப்பு என தேவையானவற்றை செய்துகொள்ளுங்கள். சுதந்திரத்திற்கு நீங்கள் பொருளாதாரத்தை சேமிப்பது மற்றும் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள்

ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துங்கள். அதில் வழக்கான உடற்பயிற்சிகள், சரிவிகித உணவுகள் மற்றும் போதியளவு உறக்கம் என அனைத்தும் இருக்கவேண்டும். இந்த பழக்கங்கள் உங்கள் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவும். எனவே மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது உங்களின் முக்கிய தேவையாக இருக்கட்டும்.

தொடர்புகொள்ளும் திறன்

நீங்கள் தொடர்புகொள்ளும் திறனில் சிறந்து விளங்கினால் போதும், அப்போது உங்களை நன்றாக வெளிகாட்டிக்கொள்ளமுடியும். நீங்கள் நன்றாக தொடர்புகொள்ளவேண்டும் என்பது மிகவும் முக்கியம. தனிப்பட்ட மற்றும் பணியில் நீங்கள் நன்றாக தொடர்புகொண்டாலே போதும். உங்கள் பணியில் நீங்கள் மென்மேலும் மிளிரமுடியும்.

இலக்குகள்

உண்மையான, சாதிக்க முடிந்த இலக்குகளை மட்டும் நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அது உங்கள் தனிபட்ட மற்றும் பணிசார்ந்த வளர்ச்சிக்கு உதவும். உங்களின் வளர்ச்சியை தினமும் மதிப்பிடுங்கள். உங்களின் இலக்குகளை அதைப்பொறுத்து வடிவமையுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.