Winter Tea : குளிர் காலத்தில் பருக ஏற்ற 5 வகை டீக்கள்! உடலை இதமாக்க உதவுவதாக நம்பப்படுகிறது!
Winter Tea : குளிர் காலத்தில் பருக ஏற்ற சூடான பானங்கள் என்னவென்று பாருங்கள்.

குளிர் காலத்தில் நீங்கள் பருக ஏற்ற மூலிகை பானங்கள் எவை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். குளிர் காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். குளிரும் அதிகம் இருப்பதால், உங்களுக்கு எப்போதும் சூடாக எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும். சூடான ஒரு கப் டீ, உங்களுக்கு குளிருக்கு இதமாக இருக்கும். இதை நீங்களே கட்டாயம் உணர்ந்து இருப்பீர்கள். அது தரும் இதம் உங்களின் குளிரையே விரட்டும். அதிலும் குளிர் காலத்தில் நீங்கள் இந்த 5 மூலிகை தேநீரை பருகினால் குளிரை அடித்து விரட்டுவதுடன், அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளையும் கொடுக்கிறது. அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
துளசி டீ
துளசி ஆயுர்வேத மருத்துவத்தில் சளியைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மூலிகை என்பது அனைவரும் அறிந்ததே. இதில் உள்ள அடாப்டோஜெனிக் குணங்கள் அதற்கு உதவுகின்றன. அடாப்டோஜெனிக் என்றால், மனஅழுத்ததின் தீங்குகளை எதிர்க்கும் தன்மை என்று பொருள். இது உங்கள் உடலின் அழுத்தைப் போக்கி, உங்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. இதன் பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள், உங்கள் சுவாச மண்டல ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
புதினா டீ
புதினாவில் உள்ள புத்துணர்வு தரும் குணம் உங்களுக்கு இதமளிக்கும். இதில் உள்ள மென்தால் எனும் உட்பொருள் உங்களுக்கு மூக்கடைப்பு மற்றும் சுவாச மண்டலத்தில் சளி அடைத்திருப்பதை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. இது குளிர் காலத்தில் சளி என்பது மிகவும் எளிதாக அனைவருக்கும் ஏற்படும் பிரச்னையாகும். இது சுவாச மண்டலத்தைப் பாதுகாப்பதுடன், உங்களின் செரிமான ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. இது உங்களின் வயிற்றில் உள்ள அசவுகர்யங்களைப் போக்குகிறது. இது உங்களுக்கு வயிறு உப்புசத்தை சரிசெய்கிறது.
