Sperm: விந்தணு வெளியேறினால் உயிரணுக்கள் குறையுமா? விந்தணு உற்பத்தியை அதிகரிக்கப் பயன்படும் இந்த வாழ்வியல் மாற்றம்!
Sperm: விந்தணு வெளியேறினால் உயிரணுக்கள் குறையுமா? விந்தணு உற்பத்தியை அதிகரிக்கப் பயன்படும் இந்த வாழ்வியல் மாற்றம் அறிவோம்.

Sperm: விந்தணு உருவாக்கம் என்பது ஒரு மனிதனின் உடலில் விந்தணுக்கள் உற்பத்தி செய்யப்படும் செயல்முறையாகும். விந்தணுக்களை உற்பத்தி செய்ய உடலால் இந்த செயல்முறை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. ஒரு முறை விந்து வெளியேறியவுடன் உடலில் இருந்து வெளியேறிய விந்தணுக்கள், உடலில் மீண்டும் உற்பத்தி செய்ய நேரம் எடுக்குமா? அவை எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை இள வயது ஆண்கள் அறிந்துகொள்வது மிக முக்கியம்.
விந்தணு உருவாக்கம், பொதுவாக விந்தகத்தில் விந்தணுக்கள் உருவாக 50 முதல் 60 நாட்கள் ஆகும். அவை முழுமையாக முதிர்ச்சியடைய இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும். அதாவது, உடலில் விந்தணுக்கள் உருவாக ஆரம்பம் முதல் இறுதி வரை 74 நாட்கள் தேவைப்படுகிறது. இருப்பினும், ஆணின் உடல்நலம் மற்றும் வயதைப் பொறுத்து, ஒரு முழுமையான விந்தணு கிடைக்கும் நேரம், ஒவ்வொரு நபருக்கும் மாறுபடக்கூடும். வயதாக ஆக அது அதிகரிக்கலாம். இதனால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும்.
சுயஇன்பத்திற்குப் பிறகு விந்து வெளியேறுவதால், ஆணின் உடலில் 74 நாட்கள் வரை விந்தணுக்கள் இல்லையா என்றால் அது நிச்சயம் இருக்கும். அது ஒரு முறை ஒரு உடலுறவில் ஈடுபட்டிருந்தாலும் கூட நிச்சயம் இருக்கும். விந்தணு உற்பத்தி என்பது தொடர்ச்சியான செயல்முறையாகும். மேலும் புதியவற்றை மாற்றுவது போன்றது.