முடக்கத்தான் இருந்தால் மூட்டு வலிக்குமா? என்ன நன்மைகள் பாருங்கள்! இதோ விவரம்!
மூட்டுவலி, வீக்கம், சளி, இருமல் ஆகிய தொல்லைகளைப் போக்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். உள்புறம் மற்றும் வெளிப்புறம் இரண்டிலும் உபயோகிக்கலாம்.

முடக்கத்தான் கீரை பலூன் வைன் என்று அழைக்கப்படுகிறது. இது அதிகப்படியான நன்மைகள் கொண்ட மூலிகையாகும். இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் வழங்குகிறது. மூட்டுவலி, வீக்கம், சளி, இருமல் ஆகிய தொல்லைகளைப் போக்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். உள்புறம் மற்றும் வெளிப்புறம் இரண்டிலும் உபயோகிக்கலாம்.
நன்மைகள்
எண்ணற்ற ஆரோக்கிய குறைபாடுகளுக்கு தீர்வாகிறது. இது மூட்டுவலிக்கு சிறந்த நிவாரணம் தருகிறது. இது சளி மற்றும் இருமலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சரி செய்கிறது. இதன் சாறு காது வலியை சரிசெய்கிறது. இதன் இலையை அரைத்து அனைத்து வலிகளுக்கும் பூசலாம். இதன் சாறில் மஞ்சள் தூள் கலந்து பூசினால் அது சரும நோயான எக்சைமாவை குணப்படுத்துகிறது.
மூட்டுவலி
முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணம் தரும் மூலிகையாகும். அதற்கு நீங்கள் தோசை மாவுடன் இரண்டு கைப்பிடியளவு முடக்கத்தான் கீரை, சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த தோசை நீங்கள் தேங்காய் சட்னியுடன் சாப்பிட அது ஆர்த்ரிட்டிஸ் மற்றும் மூட்டு வலிக்கு தீர்வாகும்.