தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Why Is There Noise In The Ear When Hitting The Jaw Area

Slap Damage Ear: விட்டான் பாரு ஒரு அறை.. காது ஒய்ங்குன்னு.. - காரணம் என்ன தெரியுமா மக்களே?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 24, 2024 12:20 PM IST

குத்துச்சண்டையில் வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கும் போது ஏற்படக்கூடிய காது பிரச்சினைகள் நீண்ட நாட்களாக தொடரும்.

தாடை பகுதியில் அறைவது எவ்வளவு ஆபத்தானது?
தாடை பகுதியில் அறைவது எவ்வளவு ஆபத்தானது?

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “நமது தலைப்பகுதியின் மூவ்மெண்ட் நேராகவே சென்று கொண்டிருக்கும். நாம் ஒருவரை கன்னத்தில் அடிக்கும் பொழுது, அந்த மூவ்மெண்ட் உடைபட்டு, மூளையானது கலங்கும். அப்போது அங்கே அதிக அதிர்வானது உருவாகும். இதனால் நம்முடைய காது பகுதியில் பிரச்சினைகள் ஏற்படலாம். 

அதுவே குத்துச்சண்டையில் வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கும் போது ஏற்படக்கூடிய காது பிரச்சினைகள் நீண்ட நாட்களாக தொடரும். 

0 முதல் 115 டெசிபல் அளவிலான ஒலியை மட்டுமே நம் காதுகளால் தாங்க முடியும். ஆனால் ஒருவரை நாம் ஓங்கி அடிக்கும் பொழுது, அதனுடைய டெசிபல் 170 ஆக மாறுகிறது. அந்த அதிர்வு நம் காதுக்குள் இருக்கக்கூடிய ட்ரம்மில் சென்று அடிக்கிறது. அப்போது நம்முடைய காது ஜவ்வானது கிழியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இதுவே அதிர்வுகள் இல்லாமல், அளவுக்கு அதிகமாக நேரடியாக ஒலி காதிற்குள் செல்லும் பொழுது, நம்முடைய காதுகளின் கேட்கும் திறன் குறையும்.

பயங்கரமான காது வலி, தலைச்சுற்றல், வாந்தி, காதிலிருந்து இரத்தம், காது கேட்கவில்லை உள்ளிட்ட அறிகுறிகள் இருக்குமாயின் உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுகுங்கள். 

ஒரு வேளை ஜவ்வு கிழிந்து விட்டது என்றால், காதில் நீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், காதை வறட்சியாக வைத்து, காற்றோட்டம் செல்லும் வகையில் பாதுகாக்க வேண்டும். 

அப்படி செய்யும் போது இயல்பாகவே நம்முடைய ஜவ்வு கூடிவிடும்.  கூடவில்லை என்றால்தான் நாம் அடுத்த கட்டமாக அறுவை சிகிச்சை நோக்கி செல்ல வேண்டும்

vertigo போன்ற பிரச்சினைகள் வருவதற்கு உள் காதில் ஏற்படக்கூடிய நீர் நிலைகளே காரணம். இந்த நீர் நிலைகளை நாம் சில பயிற்சிகள் மூலம் சரி செய்து கொள்ள முடியும். அதுவும் முடியாத பட்சத்தில், நாம் அந்த நீர் நிலைகளை குறைக்கக்கூடிய மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.  

வெளியில் இருந்து வரக்கூடிய அதிக பட்ச ஒலியானது அதிர்வாக மாறி, நடுக்காதில் இருக்கக்கூடிய ரிங் போன்ற எலும்பு அமைப்பின் வழியாக சென்று, உள் காதுகளுக்கு செல்லும் நீர் நிலைகளில் சுற்றி, நரம்புகள் வழியாக மூளைக்குச் செல்லும். அப்போது காதுக்குள் ஒய்ங் என்ற சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இது உள் காது பாதிப்பால் வரும்” என்று பேசினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்