அதிகாலையில் எழுந்து படிக்கவேண்டும் என்பது ஏன் வற்புறுத்தப்படுகிறது? வெற்றி உறுதி என்பதாலா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அதிகாலையில் எழுந்து படிக்கவேண்டும் என்பது ஏன் வற்புறுத்தப்படுகிறது? வெற்றி உறுதி என்பதாலா?

அதிகாலையில் எழுந்து படிக்கவேண்டும் என்பது ஏன் வற்புறுத்தப்படுகிறது? வெற்றி உறுதி என்பதாலா?

Priyadarshini R HT Tamil
Jan 07, 2025 09:13 AM IST

அதிகாலையில் எழுந்து படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

அதிகாலையில் எழுந்து படிக்கவேண்டும் என்பது ஏன் வற்புறுத்தப்படுகிறது? வெற்றி உறுதி என்பதாலா?
அதிகாலையில் எழுந்து படிக்கவேண்டும் என்பது ஏன் வற்புறுத்தப்படுகிறது? வெற்றி உறுதி என்பதாலா?

மூளையின் இயக்கம்

காலையில்தான் மூளையால் நன்றாக சிந்திக்கவும், எச்சரிக்கையுடன் இருக்கவும் முடிகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே பெற்றோர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வலியுறுத்துகிறார்கள். காலையில் அதிகளவில் இருக்கும் மூளையின் திறன்களை பயன்படுத்தி கடினமான பாடங்களை படித்துவிட வற்புறுத்துகிறார்கள். இதனால் சிக்கலான பிரச்னைகள் கூட எளிதாகிவிடும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

ஒழுங்கான பழக்கம்

காலையில் நீங்கள் எழுந்திருக்கும்போது, அது உங்களுக்கு ஒரு ஒழுக்கத்தைக் கற்பிக்கிறது. இதனால் பெற்றோர் சில பழக்கங்களை தங்கள் குழந்தைகளுக்கு கற்றுகொடுக்கவேண்டும். இது அவர்களுக்கு நேர மேலாண்மைக்கு உதவுகிறது. மேலும், குழந்தைகள் கல்விகளில் சிறந்து விளங்குகிறார்கள். இது கல்வியில் சிறக்கவும், மற்ற பொறுப்புக்களை திறனுடன் கையாளவும் உதவுகிறது. இதனால் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்லப் பழக்கம் ஏற்படுகிறது.

தகவல்களை எளிதாக நினைவில்வைத்துக்கொள்கிறார்கள்

காலையில் எழுந்து குழந்தைகள் அமைதியான சூழலில் படிக்கும்போது, அவர்கள் படித்தவற்றை அதிகளவில் நினைவில் வைத்துக்கொள்கிறார்கள். இரவு நல்ல உறக்கத்துக்குப்பின்னர் காலையில் எழுந்து இவர்கள் படிக்கும்போது, அவர்களின் கற்கும் திறனை அது மேம்படுத்துகிறது. இதனால் அவர்கள் பள்ளி கல்விகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

சுறுசுறுப்பான காலை துவக்கம்

காலையில் எழுந்து படித்தவுடனே உங்களுக்கு சிறப்பான செயலை செய்துவிட்ட திருப்தி மனநிலை ஏற்படுகிறது. மேலும் காலையில் நீங்கள் படிக்கும்போதும் காலையிலேயே சாதித்துவிட்ட உணர்வைக் கொடுக்கிறது. மேலும் இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. இது உங்களின் நாளை நேர்மறையாகவும், உற்சாகமாகவும் மாற்றுகிறது. மேலும் உங்களின் திறனை அதிகரிக்க இது உதவுகிறது.

உடல் நலம்

காலையில் எழுவதால் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இது உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பரிசளிக்கிறது. மேலும் நல்ல உறக்கம், உங்களுக்கு காலையிலேயே உற்சாகத்தைக் கொடுக்கிறது. இது உங்களுக்கு காலையில் சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள உதவுகிறது. மேலும் காலையில் நல்ல காலை உணவு சாப்பிட நேரம் கொடுக்கிறது. உங்களுக்கு நல்ல மனத்தெளிவு பிறக்கிறது. அந்த நாளின் பணிகளுக்குள் செல்லும் முன்னர் உங்களுக்கு உற்சாக மனநிலை இருப்பது உங்களுக்கு நல்லதுதானே.

உங்களுக்கு படித்தவற்றை மீண்டும் படிக்க நேரம் கிடைக்கிறது

காலையில் உங்களுக்கு எந்த இடையூறும் இருக்காது என்பதால், நீங்கள் படித்தவற்றை மீண்டும் படிப்பதற்கு உங்களுக்கு நேரம் கிடைக்கிறது. மேலும் இது உங்களின் கற்றலை ஒருங்கிணைக்க உதவுகிறது. கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த நேரத்தில் படித்தவற்றை நீங்கள் மீண்டும் நினைவுபடுத்தி பார்ப்பதற்கு இது சிறந்த நேரமாகக் கருதுகிறார்கள். அவர்கள் முக்கிய கான்செப்ட்களை படிக்கவும், தேர்வுகளுக்கு பயிற்சி செய்யவும், வேலைகளை பரபரப்பின்றி முடிக்கவும் உபயோகித்துக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

அமைதியான சூழல்

காலையின் அமைதியான மற்றும் ரம்யமான சூழல், சில வீட்டு வேலைகள் செய்யும் சத்தத்துடன் உங்களை உற்சாகமாக்கும் என்று பெற்றோர் நம்புகிறார்கள். மேலும் பெற்றோர் காலையில் இந்த அமைதியான சூழலை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் உங்களின் திறனில் நீங்கள் முழுக்கவனம் செலுத்த முடிகிறது. இது உங்களுக்கு சிறந்த முடிவுகளைக் கொடுக்கிறது. உங்களால் அமைதியாகவும் இருக்க முடிகிறது.

தள்ளிப்போடுதல் கூடாது

காலையில் எழுந்து படிக்கும்போது படிப்பில் சில விஷயங்களை தள்ளிப்போடுவது குறைக்கப்படுவதாக பெற்றோர் உணர்கிறார்கள். காலையிலே நீங்கள் சில வேலைகளை துவங்கிவிட்டால் போதும். இதனால் உங்களுக்கு பல வேலைகளில் தாமதம் ஏற்படாது. இதனால் குழந்தைகள் அவர்களின் குறிக்கோள்களை எட்டுவதில் எப்போதும் முன்னிலையில் இருப்பதை உறுதி செய்கிறார்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.