பொங்கல் சாப்பிட்டால் ஏன் தூக்கம் வருகிறது தெரியுமா? இது தான் காரணமா!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பொங்கல் சாப்பிட்டால் ஏன் தூக்கம் வருகிறது தெரியுமா? இது தான் காரணமா!

பொங்கல் சாப்பிட்டால் ஏன் தூக்கம் வருகிறது தெரியுமா? இது தான் காரணமா!

Suguna Devi P HT Tamil
Nov 06, 2024 10:48 AM IST

இந்தியாவின் தென் மாநிலங்களில் பரவலாக சாப்பிடப்படும் உணவாக பொங்கல் இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ் நாட்டில் இது இன்றியமையாத உணவாகவு இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் பொங்கல் ஒரு வழக்கமான உணவாக மாறி விட்டது.

பொங்கல் சாப்பிட்டால் ஏன் தூக்கம் வருகிறது தெரியுமா? இது தான் காரணமா!
பொங்கல் சாப்பிட்டால் ஏன் தூக்கம் வருகிறது தெரியுமா? இது தான் காரணமா!

பொதுவான காரணங்கள் 

பொங்கல் சாப்பிடும் போது தூக்கம் வருவதற்கு பொதுவான காரணங்கள் சில கூறப்படுகின்றன. அதில் முக்கியமானதாக வெண்பொங்கலில் சேர்க்கப்படும் பொருட்களால் அதனை சாப்பிடு போது வயிறு முழுவதும் நிறைந்து விடுகிறது. இதன் காரணமாக பசி எதுவும் ஏற்படுவதில்லை. எனவே ஒரு மந்தமான உணர்வு உண்டாகிறது. இதனால் தூக்கம் வருகிறது எனக் கூறப்படுகிறது. மேலும் வெண்பொங்கலில் அதிக அளவிலான கார்போஹைட்ரேட் உள்ளது. உடலில் கார்போஹைட்ரேட் சேரும் பொது தூக்கம் வருவது இயல்பான ஒரு நிலை என நம்பப்படுகிறது. 

உண்மையான காரணங்கள் 

பொங்கல் அதிக   கார்போஹைட்ரேட்டுகளை கொண்டுள்ளதால் உடலில் நுழைந்த உடன் செரிமானம் அடைகிறது. இது செரிமானம் அடைவதால் அதிகமான இன்சுலின் சுரக்கிறது. குறிப்பாக இந்த இன்சுலின் தூக்கத்தை தடுக்கும் ஒரக்ஸின் எனும் சுரப்பியை பாதிக்கிறது. இதன் காரணமாக தூக்கம் வருகிறது. மேலும் உடலில் இன்சுலின் அதிகரித்தால், அது மூளையின் ஹைபோதலாமஸில் உள்ள MCH (Melanin-concentrating hormone) ஹார்மோனை வெளியீட்டு தூக்கத்தை உண்டாக்குகிறது. 

பாசிப்பருப்பு 

பொங்கல் செய்ய பயன்படுத்தும் பாசிப்பருப்பு நமது தூக்கத்திற்கு முக்கியமான காரணமாகும். இந்த பாசிப்பருப்பு Triptophan என்ற அமினோ ஆசிட்டைக் கொண்டுள்ளது.இந்த வகை Triptophan அமினோ ஆசிட் நிறைந்த உணவுடன் கார்போஹைட்ரெட் அதிகம் உள்ள உணவான அரிசி போன்றவற்றுடன் கலந்து சாப்பிடும் போது,  இந்தஅமினோ அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது.  இந்த அதிகரிப்பால் செரட்டோனின் ஹார்மோன் உற்பத்தியையும், தூக்க சுழற்சியை கட்டுப்படுத்தும் மெலட்டோனின் ஹார்மோன் உற்பத்தியையும் நேரடியாக பாதிக்கிறது. இதன் காரணமாகவே பொங்கல் சாப்பிட்டால் நமக்கு தூக்கம் வருகிறது.

குறைவாக சாப்பிட வேண்டும்

வெண்பொங்கலை தவிர எண்ணெய், டால்டா, நெய் போன்றவை அதிகமாக சேர்த்து சமைக்கப்பட்ட மற்ற உணவுகலை சாப்பிட்டாலும், தூக்கம் வருவது போலவே தோன்றும்.  ஏனெனில் இந்த உணவு வகைகள் செறிப்பதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. மேலும் இவை செரிமானம் அடைவதற்கு அதிக அளவிலான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதன் காரணமாக மூலைக்குச் செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. மூளை ஆகிசிஜன் பற்றாக்குறையால் மந்தமாக செயல்படுகிறது. 

இதுமாதிரியான நேரங்களில்தான் அதிக களைப்பாக இருப்பது போலவும், தூங்கினால் நன்றாக இருக்கும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. உண்ட மயக்கம் என்று சொல்வதும் இதைத்தான். பிரச்னை பொங்கலில் மட்டுமே இல்லை. அந்த உணவு தயாராகும் முறையினாலும், உண்ணும் அளவினாலும் தான் இந்த தூக்க நிலை மாறுபடுகிறது. எனவே குறைவான நெய் பயன்படுத்துவது சிறந்த வழியாகும். 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.