மக்களின் சட்ட உரிமைகளை உறுதி செய்யவேண்டியது யார்? சமூக செயற்பாட்டாளர் கேள்வி!
ஜுன் 6ல் (2025) விசாரணைக்கு வந்த வழக்கில், தலைமைச் செயலாளர்கள் அறிக்கை தாக்கல் செய்யாததால், நீதிமன்றம், கோபமும், மிகந்த மனவேதனையும் அடைந்ததாக நீதிபதி. பட்டு தேவானந்த் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடர்பான தனது உத்தரவை நிறைவேற்றாத 2 தமிழக தலைமை செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் 1972-2023 வரை உள்ள 4 மனுக்கள் மீது, கருணை அடிப்படையிலான பணி நியமனம் 2023 சட்டப்படி, இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் பதிந்த வழக்கில் தனது உத்தரவை 2 மாதத்திற்குள் மாநில அரசு தனது குழுவின் அறிக்கைப்படி இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் அளித்த மனுவின் அடிப்படையில் பட்டியல் தயார் செய்து வைக்கவும், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை 3 மாதத்திற்குள் நீதிமன்றம் முன் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி முதல் தற்போது வரை நீதிமன்ற உத்தரவை மதித்து செயல்படுத்தாத 2 தமிழக அரசு தலைமை செயலாளர்கள் (முருகானந்தம், சிவதாஸ் மீனா) மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971, அரசியல் சாசனப் பிரிவு 215ன் படியும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு (நீதிப் பிரிவு) உத்தரவிட்டு, அதற்கான காரணங்களை இருவரும் ஜுன் 20 தேதிக்குள் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது.