Cleaning Tips: வெள்ளை நிற துணிகள் பளபளவென மின்ன வேண்டுமா? இந்த எளிய டிப்ஸ்களை ஃபாலோ செய்யுங்க
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cleaning Tips: வெள்ளை நிற துணிகள் பளபளவென மின்ன வேண்டுமா? இந்த எளிய டிப்ஸ்களை ஃபாலோ செய்யுங்க

Cleaning Tips: வெள்ளை நிற துணிகள் பளபளவென மின்ன வேண்டுமா? இந்த எளிய டிப்ஸ்களை ஃபாலோ செய்யுங்க

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 19, 2024 05:15 AM IST

Tips To Clean Dirty White Vest: வெள்ளை நிற துணிகள் பளபளவென மின்ன வேண்டுமா?. வெள்ளை உடைகளில் நிறம் மங்குவதை தவிர்க்க இந்த எளிய டிப்ஸ்களை ஃபாலோ செய்தாலே போதுமானது.

வெள்ளை நிற துணிகள் பளபளவென மின்ன ஃபாலோ செய்ய வேண்டிய டிப்ஸ்
வெள்ளை நிற துணிகள் பளபளவென மின்ன ஃபாலோ செய்ய வேண்டிய டிப்ஸ் (Shutterstock )

வெள்ளை நிறத்தில் வேஷ்டியோ, பனியனோ வாங்கிய ஒரே வாரத்தில் அதன் இயல்பு நிறம் மங்கி மஞ்சளாக மாறுவது குறித்து பலர் புகாரும் தெரிவிப்பதுண்டு. இதன் காரணமாக புதிதாக வாங்கிய உடுப்பு கூட பழைய ஆடை போல் மாறிய உணர்வை தருகிறது. வெள்ளை நிற துணிகளை துவைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

அதை துவைப்பதற்கென இயற்கையான சில முறைகளையும் தொடர்ச்சியாக கையாண்டால் மேற்கூறிய பிரச்னைகள் ஏற்படாமலும், நிறம் மாறாமலும் பார்த்து கொள்ளலாம். வெள்ளை நிற துணிகளை சுத்தம் செய்ய பின்பற்ற வேண்டிய எளிய டிப்ஸ்களை பார்க்கலாம்

எலுமிச்சை கொண்டு சுத்தம் செய்யலாம்

வெள்ளை வேஷ்டி மஞ்சள் நிறமாக மாறியிருந்தால், அவை பழையபடி பளபளப்பை பெற எலுமிச்சையை பயன்படுத்தவும். இதற்கு முதலில் 3 முதல் 4 எலுமிச்சையை தண்ணீரில் பிழிந்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.

பின்னர் எரிவாயுவை அணைத்து, தண்ணீரை குளிர்விக்க விடவும். இப்போது வெள்ளை நிறத்திலான உடுப்பை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும். சில மணி நேரம் நன்றாக ஊறியதும் அதி்ல் சோப்பு தேய்த்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை இந்த வழியில் வெள்ளை நிற ஆடையை சுத்தம் செய்வதன் மூலம் பளபளப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்

இண்டிகோ பயன்படுத்தி பளபளப்பை பராமரிக்கலாம்

வெள்ளை ஆடைகளின் பளபளப்பை பராமரிக்க,இண்டிகோவைப் பயன்படுத்தலாம். இதற்கு, ஒரு வாளி தண்ணீரில் 8 முதல் 10 சொட்டு இண்டிகோவை கலக்கவும். பின்னர் துவைத்த வெள்ளை துணி அல்லது வேஷ்டியை இந்த தண்ணீரில் 5 முதல் 7 நிமிடங்கள் வைக்கவும்.

அதன் பின்னர் துணிகளை நன்கு பிளிந்து பிரகாசமான சூரிய ஒளியில் உலர வைக்கவும். இவ்வாறு செய்வதால் ஆடைகள் பளபளப்பதோடு, நீல நிறமும் மறையும்

மஞ்சள் நிறத்தை நீக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடு

ஹைட்ரஜன் பெராக்சைடு என்பது ஆக்ஸிஜன் ப்ளீச்சின் லேசான வடிவமாகும். இது உங்கள் ஆடைகளின் பிரகாசத்தை மீண்டும் கொண்டு வர உதவுகிறது. அதைப் பயன்படுத்த, ஹைட்ரஜன் பெராக்சைடை எடுத்து சலவை இயந்திரம் அல்லது ஈரமான துணிகளில் வைக்கவும்.

சிறிது நேரம் கழித்து, துணிகளை சாதாரணமாக துவைக்கவும். ஹைட்ரஜன் பெராக்சைட்டின் வெப்பநிலை சரியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

இந்த டிப்ஸ்களை தவறாமல் கையாளும்பட்சத்தில் வெள்ளை நிற உடைகளை சரியாக பராமிரப்பதன் மூலம் கறைகள், நிறங்கள் மங்காமல் இருப்பதை பார்த்துக்கொள்வதோடு, பளபளப்பு தன்மையை இழக்காமலும் வைத்துக்கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.