கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ள வேண்டிய உலர் பழங்கள் லிஸ்ட்! தாய் சேய் ஆரோக்கியத்திற்கு இதுவே உறுதி!
ஒவ்வொரு பெண்ணின் கர்ப்பக்காலம் என்பது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாக உள்ளது. இந்தக் காலத்தில் பெண்கள் அடிக்கிகா சத்து மிக்க உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அப்போது தான் தாய் மற்றும் வயிற்றில் சேய் என இருவருக்கும் அது பலத்தை கொடுக்கும்.
ஒவ்வொரு பெண்ணின் கர்ப்பக்காலம் என்பது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாக உள்ளது. இந்தக் காலத்தில் பெண்கள் அடிக்கிகா சத்து மிக்க உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அப்போது தான் தாய் மற்றும் வயிற்றில் சேய் என இருவருக்கும் அது பலத்தை கொடுக்கும். கர்ப்பத்தில் இருக்கும் பெண்களை அவர்களது வீட்டில் உள்ளவர்களும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய தவறும் பின்னாளில் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கும்.
கர்ப்ப காலம்
கர்ப்பம் என்பது ஆரோக்கியமான உணவை மட்டுமே உண்ணும் நேரம் ஆகும். கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாக மற்ற சத்துள்ள உணவுகளுடன் கொட்டைகள் மற்றும் உலர் பழங்களை அளவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் . கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கு எந்த உலர் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
கருவின் வளர்ச்சி
கருவின் மூளை, பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு பாதாம் அவசியம். மேலும் தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சக்தியை கொடுக்கவும் பிஸ்தா உதவுகிறது. இது குழந்தையின் எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
கருவின் மூளை வளர்ச்சிக்கு வால்நட் அவசியம். கர்ப்பிணிகளுக்கு முந்திரி சிறந்த இரும்புச் சத்து கொடுக்கக்கூடிய பருப்பாக இருந்து வருகிறது. கருவின் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திலும் இரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும் இந்த வால்நட் முக்கிய பங்கு வகிக்கிறது.
புரதச்சத்து
வேர்க்கடலையில் ஃபோலிக் அமிலம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது , இது குழந்தையின் எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது . உலர் திராட்சையை முந்தைய நாள் இரவு ஊறவைத்து காலையில் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும் . கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையைத் தடுக்கிறது.
அத்திப்பழம் காலை எழுந்தவுடன் வரும் வாந்தி போன்ற நோயிலிருந்து விடுபடவும், இரத்த சோகையைத் தடுக்கவும் உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமானத்தை அதிகரிக்கவும் பேரிக்காய் உதவுகிறது.
கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் கண்டிப்பாக பழங்களை உணவுடன் சேரத்துக் கொள்ள வேண்டும். இதனால் பிரசவம் எளிதாகும். பேரிச்சம்பழம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சோகையைத் தடுக்கவும், கர்ப்ப காலத்தில் இனிப்பு பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது . மேலும் இதன் உடன் நாள் ஒன்றுக்குத் தண்ணீரும் அதிகம் குடிக்க வேண்டும். தினமும் எளிமையான உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்க வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரைப்படி அனைத்து விதமான தடுப்பூசியையும் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்