Wheat Rava Adai : கோதுமை ரவை அடை; வித்யாசமான டிஃபன் ரெசிபி! இட்லி, தோசை மாவு இல்லாத நேரத்தில் கவலை வேண்டாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Wheat Rava Adai : கோதுமை ரவை அடை; வித்யாசமான டிஃபன் ரெசிபி! இட்லி, தோசை மாவு இல்லாத நேரத்தில் கவலை வேண்டாம்!

Wheat Rava Adai : கோதுமை ரவை அடை; வித்யாசமான டிஃபன் ரெசிபி! இட்லி, தோசை மாவு இல்லாத நேரத்தில் கவலை வேண்டாம்!

Priyadarshini R HT Tamil
Jan 13, 2025 01:16 PM IST

கோதுமை ரவை அடை செய்வது எப்படி என்று பாருங்கள். உங்களுக்காக மேலும் ஒரு ரெசிபியும் கொடுக்கப்பட்டுள்ளது.

Wheat Rava Adai : கோதுமை ரவை அடை; வித்யாசமான டிஃபன் ரெசிபி! இட்லி, தோசை மாவு இல்லாத நேரத்தில் கவலை வேண்டாம்!
Wheat Rava Adai : கோதுமை ரவை அடை; வித்யாசமான டிஃபன் ரெசிபி! இட்லி, தோசை மாவு இல்லாத நேரத்தில் கவலை வேண்டாம்!

தேவையான பொருட்கள்

சம்பா கோதுமை ரவை – ஒரு கப் (சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

சாதாரண ரவை – 4 ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

வரமிளகாய் – 4

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தேங்காய் துருவல் – அரை கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

வர மிளகாய், சீரகம், உப்பு, புளி, பெருங்காயம் என இவற்றை மட்டும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அதில் கோதுமை ரவையை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவேண்டும். கடைசியாக தேங்காய் துருவல் மற்றும் சாதாரண ரவையை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

இவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானவுடன், அதில் எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை எடுத்து அதில் வைத்து அடைகளாக தட்டி, இரண்டு புறமும் நன்றாக சிவக்கும் வரை வேகவைத்து எடுக்கவேண்டும். இதை இருபுறமும் பொன்னிறமானவுடன் எடுத்தால் சூப்பர் சுவையான அடை தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள எவ்வித சட்னிகள், சாம்பார், குருமாக்கள், கிரேவிகளும் ஏற்றது. பெரிய வெங்காயத்துக்கு பதில் சின்ன வெங்காயம் ஏற்றது. இந்த அடை உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். நீங்கள் ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சாப்பிடவேண்டும் என்று எண்ணுவீர்கள். எனவே இதை கட்டாயம் செய்து பாருங்கள். நீங்கள் இட்லி தோசை மாவு அரைக்கவில்லையென்றால், இது உங்களுக்கு கைகொடுக்கும் உணவாகும்.

மேலும் ஒரு ரெசிபியை தெரிந்துகொள்ளுங்கள்.

முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி என்று பாருங்கள்.

முருங்கை கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள்

எண்ணெய் – 1 ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

சின்ன வெங்காயம் – 15

இஞ்சி – சின்ன துண்டு

பூண்டு – 5 பல்

தக்காளி – 1

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

முருங்கை கீரை – 2 கைப்பிடி (நன்றாக கழுவி சுத்தம் செய்தது)

உப்பு – தேவையான அளவு

மிளகு தூள் – அரை ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து பொரியவிடவேண்டும்.

சின்ன வெங்காயம், இஞ்சி-பூண்டு இடித்தது சேர்த்து வதக்க வேண்டும். இது வதங்கிய பின்னர் தக்காளியை நறுக்கி சேர்த்து நன்றாக வதங்கும் வரை காத்திருக்க வேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள், உப்பு, முருங்கைக்கீரை சேர்த்து தாராளமாக 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக சாறு இறங்கும் வரை கொதிக்க விடவேண்டும். இறுதியாக மிளகுதூள் சேர்த்து இறக்க வேண்டும்.

சூடாக சாப்பிட தலைபாரம், சளி, இருமலுக்கு இதமாக இருக்கும்.கை-கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்னைகளும் இருக்காது.

கட்டாயம் இந்த சூப் செய்து குடித்து பாருங்கள் உங்கள் உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டு, நல்ல மாற்றம் தெரியும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.