தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Wheat Noodles Dont Tell Children To Eat Now We Can Make Wheat Noodles At Home

Wheat Noodles : குழந்தைகள் கேட்டால் நோ சொல்ல வேண்டாம்! இனி வீட்டிலே செய்யலாம் ‘Wheat’ நூடுல்ஸ்!

Priyadarshini R HT Tamil
Jan 07, 2024 08:53 AM IST

Wheat Noodles : குழந்தைகள் கேட்டால் நோ சொல்ல வேண்டாம்! வீட்டிலே செய்யலாம் ‘Wheat’ நூடுல்ஸ்!

Wheat Noodles : குழந்தைகள் கேட்டால் நோ சொல்ல வேண்டாம்! இனி வீட்டிலே செய்யலாம் ‘Wheat’ நூடுல்ஸ்!
Wheat Noodles : குழந்தைகள் கேட்டால் நோ சொல்ல வேண்டாம்! இனி வீட்டிலே செய்யலாம் ‘Wheat’ நூடுல்ஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

உப்பு -தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

இந்த கோதுமை மாவுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ள வேண்டும். அதை அரை மணி நேரம் நன்றாக ஊறவிடவேண்டும்.

பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, இடியாப்ப குழாயில், பெரிய அச்சு சேர்த்து அந்த கொதிக்கும் நீரில் பிழிந்துவிடவேண்டும்.

அதை 8 நிமிடங்கள் அதிகமான தீயில் வேகவிட்டு மற்றொரு பாத்திரத்தில் சாதாரண தண்ணீர் சேர்த்து அதில் வெந்த கோதுமை நூடுல்ஸை சேர்த்து உடனடியாக எடுத்துவிடவேண்டும்.

இதை தண்ணீர் வடிக்கும் பாத்திரத்தில் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். கோதுமை மாவில் பிழிவது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். ஆனாலும் பிழிய முடியும்.

நூடுல்ஸ் செய்ய தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு – 8 பல் (மிகப்பொடியாக நறுக்கியது)

இஞ்சி – சிறிது (மிகப்பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (மிகப்பொடியாக நறுக்கியது)

வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கியது)

குடை மிளகாய் – அரை (நீளமாக நறுக்கியது)

கேரட் – 1 (நீளமாக நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

சர்க்கரை – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

சோயா சாஸ் – அரை ஸ்பூன்

ஸ்பிரிங் ஆனியன் – கைப்பிடியளவு

செய்முறை

(கோதுமையில் செய்த நூடுல்ஸை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்)

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் என அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் நீளமாக நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய் மற்றும் கேரட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் தேவையான அளவு உப்பு, சர்க்கரை, மிளகாய் தூள், சோயா சாஸ் ஆகிய அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள கோதுமை நூடுல்ஸை சேர்த்த நன்றாக பிரட்ட வேண்டும்.

கடைசியாக ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து இறக்கினால் சுவையான கோதுமை நூடுஸ் தயார்.

இனி குழந்தைகள் கேட்டால் நூடுஸ்க்கு நோ சொல்ல தேவையில்லை. இப்படி செஞ்சு அசத்திவிடலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்