கோதுமை லட்டு : பாரம்பரிய மிருதுவான கோதுமை சுர்மா லட்டு; இதை செய்வது எப்படி என்று பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கோதுமை லட்டு : பாரம்பரிய மிருதுவான கோதுமை சுர்மா லட்டு; இதை செய்வது எப்படி என்று பாருங்கள்!

கோதுமை லட்டு : பாரம்பரிய மிருதுவான கோதுமை சுர்மா லட்டு; இதை செய்வது எப்படி என்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Published Mar 10, 2025 07:00 AM IST

கோதுமை லட்டு : பாரம்பரிய மிருதுவான கோதுமை சுர்மா லட்டு, இது ராஜஸ்தானில் பிரபலமானது. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு படைக்கப்படுவது. இதை எப்படி செய்வது பாருங்கள்.

கோதுமை லட்டு : பாரம்பரிய மிருதுவான கோதுமை சுர்மா லட்டு; இதை செய்வது எப்படி என்று பாருங்கள்!
கோதுமை லட்டு : பாரம்பரிய மிருதுவான கோதுமை சுர்மா லட்டு; இதை செய்வது எப்படி என்று பாருங்கள்!

தேவையான பொருட்கள்

• கோதுமை மாவு – ஒரு கப்

• நெய் – ஒரு கப்

• வெல்லம் – கால் கிலோ

• ஏலக்காய் – ஒரு ஸ்ழுன்

• கசகசா – ஒரு ஸ்பூன்

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொள்ளவேண்டும். நெய்யை சேர்த்து நன்றாக கைகளால் பிரட்டவேண்டும். கோதுமை மாவும், நெய்யும் நன்றாக கலக்கவேண்டும். அடுத்து சூடான தண்ணீரை ஊற்றி நன்றாக பிசையவேண்டும். நல்ல கெட்டியான மாவாக்கிக்கொள்ளவேண்டும். இதுபோல் ஒரு 5 நிமிடங்கள் பிசைந்தால் மாவு நல்ல பதத்துக்கு கெட்டியாகி, கலந்து வரும்.

2. சிறு சிறு பகுதிகளாக பிரித்துக்கொள்ளவேண்டும். பிடி கொழுக்கட்டைபோல் பிடித்துக்கொள்ளவேண்டும். அடுத்து ஒரு கடாயில் நெய் சேர்த்து அது சூடானவுடன், இந்த பிடித்து வைத்துள்ள கோதுமை மாவை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவேண்டும். அனைத்தையும் வறுத்துக்கொள்ளவேண்டும். அளவாகத்தான் நெய் சேர்த்த ஷேலோ ஃப்ரை செய்துகொள்ளவேண்டும்.

3. இதை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளளவேண்டும். அடுத்து வெல்லத்தை பொடித்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி பாகுஎடுத்துக்கொள்ளவேண்டும். மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள கோதுமை கலவையில் ஏலக்காய்த் தூள் சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். அடுத்து உருக்கிய வெல்லப்பாகை சேர்த்து கலந்து நெய் சேர்த்து நன்றாக கலந்து லட்டுகளாக பிடித்துக்கொள்ளவேண்டும்.

4. ஒரு கிண்ணத்தில் கசகசாவை கொட்டி வைத்து, லட்டுக்களை அதில் சேர்த்து உருட்டி எடுக்கவேண்டும். கோதுமை மாவில் செய்யப்பட்ட பாரம்பரிய மிருதுவான சுர்மா லட்டு தயார். இதை பாதாம் அல்லது முந்திரி வைத்து விரும்பினால் அலங்கரிக்கலாம். இது ராஜஸ்தானில் கணபதி போக் தால் என்று அழைக்கப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த லட்டை விரும்பி சாப்பிடுவார்கள். இது ஒரு வித்யாசமான ஸ்னாக்ஸ் ரெசிபியாகும். இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும் சாப்பிட விரும்பிவீர்கள் என்பதால், ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.