என்ன மாணவர்களே? தேர்வுக்கான தயாரிப்புகள் துவங்கிவிட்டதா? ஸ்மார்ட்டாகப் படிக்க உதவும் செல்ஃப் ஸ்டெடி குறிப்புகள்!
தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான குறிப்புகள் என்னவென்று பாருங்கள்.

தேர்வுக்காலங்கள் துவங்கிவிட்டது. ஸ்மார்ட்டாகப் படிக்க பழகுங்கள். அதற்கு ஏற்ப நீங்களாகவே படிக்கும் முறைகளைப் பின்பற்றுங்கள். நீங்களாகவே படிப்பது உங்களுக்கு நன்றாக கற்றுக்கொள்ள உதவுகிறது. இது உங்களின் திறனை அதிகரிக்கும். அதற்கு நீங்கள் எப்படி படிக்கவேண்டும் என்று சில வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த குறிப்புகளை பின்பற்றினால் நீங்கள் நன்றாகப்படித்து தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெறலாம்.
முடிந்த அளவு படியுங்கள்
நீங்கள் தெளிவான மற்றும் எட்ட முடிந்த இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். இதனால் உங்களின் டாஸ்குகளை எளிதாக மேலாண்மை செய்ய முடியும். இது உங்களுக்கு மனஅழுத்தத்தைக் குறைக்கும்.
பல்வேறு படிப்பு உபகரணங்கள்
நீங்கள் படிப்பதற்கு வெறும் புத்தகங்களை மட்டும் சார்ந்து இருக்காமல், இபுத்தகங்கள், வீடியோக்கள் மற்றும் பாடங்களை பார்த்து படிக்கவும், கற்றுக்கொள்ளவும் முயற்சியுங்கள். இது உங்கள் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும். கற்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டும்.