தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  What We Say And What We Mean: The Dangers Of Indirect Communication In Relationships How To Handle It

HT Love Education: உங்கள் காதலர் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து தாக்கும் நபரா?.. இது சரியா?.. எப்படி கையாள்வது?

Kalyani Pandiyan S HT Tamil
Mar 30, 2024 07:02 AM IST

ஆம், இவை ஒருவரையொருவர் தொடர்பு கொள்வதற்கு கொடுத்திருக்கும் அதிகப்படியான ஸ்பேஸ், நெகட்டிவான விஷயங்களுக்கும் வழி வகுத்து இருக்கிறது. அதில் ஒன்று Indirect communication. அதவாது தன்னுடைய உணர்ச்சிகளை நேரடியாக சொல்லாமல், மறைமுக பார்ட்னரிடம் வெளிப்படுத்துவது.

ரிலேஷன்ஷிப் சண்டையில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் சரியா?
ரிலேஷன்ஷிப் சண்டையில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் சரியா?

ட்ரெண்டிங் செய்திகள்

நினைத்த நொடியில் தன்னுடைய பார்ட்னரை தொடர்பு கொண்டு பேச, பார்க்க போனை தாண்டியும் வாட்ஸ் ஆப், இன்ஸ்டா என பல ஆப்கள் வந்து விட்டன. இது ஒரு பக்கம் பாசிட்டிவாக அமைந்தாலும், இதிலும் சிக்கல் இல்லாமல் இல்லை. 

ஆம், இவை ஒருவரையொருவர் தொடர்பு கொள்வதற்கு கொடுத்திருக்கும் அதிகப்படியான ஸ்பேஸ், நெகட்டிவான விஷயங்களுக்கும் வழி வகுத்து இருக்கிறது. அதில் ஒன்று Indirect communication. அதாவது தன்னுடைய உணர்ச்சிகளை நேரடியாக சொல்லாமல், மறைமுக பார்ட்னரிடம் வெளிப்படுத்துவது.

இன்றைய நாட்களில், இந்த மாதிரியான கம்யூனிகேஷன் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ், இன்ஸ்டா ஸ்டோரி, ரீல்ஸ் என பல வகைகளாக வலம் வருகின்றன. இது சரியா, தவறா, இதனை சரிவர எப்படி கையாள்வது உள்ளிட்டவை குறித்து அப்பல்லோ மருத்துவனையின் உளவியல் நிபுணர் மருத்துவர் பார்கவ் ஸ்ரீவேலுவை தொடர்பு கொண்டு பேசினேன்.

அவர் பேசும் போது, “ இதற்கு Indirect communication (மறைமுகமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது) என்று பெயர். Indirect communication என்பது உண்மையில் ஆபத்து நிறைந்தது. ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், இந்த கம்யூனிகேஷனில் இருக்கும் அந்த நபருடைய உண்மையான மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை நாம் அதில் தெரிந்து கொள்ள முடியாது. 

அதை பார்க்கும் பார்ட்னர், அதனை வேறுமாதிரியாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. Indirect communication -ல் பாசிட்டிவான விஷயங்களை விட, நெகட்டிவான விஷயங்களே அதிகம். 

இதனை ஏன் சக பார்ட்னர் செய்கிறார் என்பதை பார்ப்போம். ரிலேஷன்ஷிப்பிற்குள் ஏதாவது பிரச்சினை வரும் போது பார்ட்னர்களில் ஒருவர், இன்னொருவரை சரியாக புரிந்து கொள்ளாத பட்சத்திலும், அவரிடம் நான் அப்படி இல்லை என்பதை தெரியப்படுத்த வேண்டும் எத்தனிப்புமே அவர்கள் அப்படி செய்வதற்கான காரணம். 

அவர்கள் இதன் மூலம் ஒரு விதமான அங்கீகாரத்தை பெற முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சியில் சம்பந்தப்பட்ட நபர் அதற்கு போதுமான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றாலும், சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் அது குறித்து கமெண்ட்டை பதிவிடுவார்கள் அல்லது அதை லைக்கோ அல்லது டிஸ்லைக்கோ செய்வார்கள்.

இதன் மூலமாக அந்த நபருக்கு ஒரு விதமான ரிலாக்ஸ் கிடைக்கும். அதன் வழியாக அந்த பார்ட்னர், ஆமாம் நான் செய்வது சரிதான் என்ற மனநிலைக்கு வருவார்.

ஒரு ரிலேஷன்ஷிப்பிற்குள் கம்யூனிகேஷன் சரியாக இல்லை என்றாலும், அவர்கள் இப்படித்தான் செய்வார்கள். இந்த மாதிரியான Indirect communication ரிலேஷன்ஷிப்பில் தவறான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

ஆம், உங்களுக்கு இடையேயான கம்யூனிகேஷன் அங்கு நின்றுவிடும். நீங்கள் சொல்ல வந்ததையும் முழுவதுமாக சொல்ல முடியாது. இன்னொன்று, நீங்கள் சொல்ல நினைத்த விஷயம் தவறாக புரிந்துகொள்ளப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் இதனை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது”என்று பேசினார்.

மருத்துவர் விபரம்:

Dr.Bhargav Sirivelu

Consultant psychiatrist

Veeras hospital and Apollo hospital

bharghavsirivelu@gmail.com

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்