பூஜைக்கு பயன்படுத்திய மலர்களை என்ன செய்வது? எப்படி மீண்டும் பயன்படுத்தலாம் பாருங்கள்!
பூஜைக்கு பயன்படுத்திய மலர்களை என்ன செய்வது? எப்படி மீண்டும் பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பூஜையில் நாம் அதிகளவு மலர்களை சில நேரங்களில் உபயோகிக்கிறோம். அவற்றை காய்ந்தவுடன் எடுத்து தூக்கி வீசுகிறோம். ஆனால், மாறாக அந்த மலர்களை நாம் மீண்டும் பயன்படுத்த முடியும். உங்கள் வீட்டில் செம்பருத்தி செடி உள்ளது என்றால், அதன் மலர்களைப் பறித்து பூஜைக்கு வைத்துவிட்டு, அவற்றை மீண்டும் தூக்கி வீசாமல் சேகரித்து, காயவைத்து பொடி செய்து தலைக்கு ஹேர் மாஸ்க் போட்டுக்கொள்ள உபயோகிக்கலாம். இதனால் மலர் புதிதாக இருக்கும்போது பூஜைக்கும், உலர்ந்தவுடன் தலைமுடிக்கும் போட்டுக்கொள்ள உதவும். நாம் எண்ணற்ற மலர்களை பூஜைக்கு உபயோகிக்கிறோம். சில நேரங்களில் பலவகை மலர்களை நாம் காசு கொடுத்து வாங்குகிறோம். அவை பண்டிகை காலங்களில் அதிக விலைக்குத்தான் விற்கப்படுகின்றன. ஆனால், அவற்றை ஒருமுறை மட்டுமே பூஜைக்கு பயன்படுத்திவிட்டு தூக்கி வீச மனசு வராது. எனில் அந்த எஞ்சிய மலர்களை வைத்து என்ன செய்வது? நீங்கள் அவற்றை மீண்டும் பயன்படுத்த விரும்பினால், எப்ப பயன்படுத்தலாம் என்று இங்கு சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி மலர்களை மீண்டும் உபயோகித்துவிடுங்கள்.
உரமாக்குதல்
பூஜைக்கு பயன்படுத்திய மலர்களை உரமாக்குவது என்பது பொதுவான வழிகளுள் ஒன்று. இவற்றை உரத்தொட்டிகளில் சேகரித்து, அவற்றி ஊட்டச்சத்துக்களை எடுத்து அல்லது மட்கச்செய்து, உங்கள் தாவரங்களுக்கு உரமாக்கலாம். காய்ந்த அல்லது ஃபிரஷ் மலர்களின் இதழ்கள் மற்றும் இலைகள் என தனித்தனியாக பறித்து உரம் தயாரிக்கும் கலனில் சேகரித்து, அப்படியே சில வாரங்கள் விட்டுவிட்டால் அவை மட்கி நல்ல உரமாகிவிடும். இதை நீங்கள் உங்கள் வீட்டில் வளர்க்கும் தாவரங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
பூச்சாடி
பூக்களின் இதழ்களை மட்டும் பறித்து வெயிலில் உலர்த்தவேண்டும். அவை நன்றாக காய்ந்தவுடன் ஒரு பவுலில் சேர்த்து அதில் மேலும் சில மூலிகைகளை கலந்து, பட்டைப்பொடி தூவி, ஒரு அறையில் வைத்துவிட்டால், அந்த அறையே மணக்கும்.