தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  What To Do For Children Teeth Growth

Kids Health: குழந்தைகளின் பற்கள் வளர்ச்சிக்கு என்ன தேவை? எதை சாப்பிட வேண்டும்?

I Jayachandran HT Tamil
Mar 16, 2023 07:21 PM IST

குழந்தைகளின் பற்களின் வளர்ச்சிக்கு என்னென்ன தேவை? எதை சாப்பிட வேண்டும்? என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளின் பற்கள் வளர்ச்சி
குழந்தைகளின் பற்கள் வளர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குழந்தைகள் தாயின் வயிற்றில் கருவாக இருக்கையிலே 6-8வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன. கருவில் 14-வது வாரம் நிறைவடையும்போது, ஈறுகளும் பால் பற்களும் குழந்தைகளின் உடலுக்குள் தோன்றிவிடும். அதுபோல 20-வது வாரத்திலே நிரந்திரப் பற்களும் உருவாகின்றன. இப்படி 20-வது வாரத்துக்குள் குழந்தையின் உடலில் பற்கள் தோன்றவில்லை என்றால், அந்தக் குழந்தைகளுக்கு பல் முளைக்கும் வாய்ப்புகள் இல்லை. இந்த நிலையை ‘ஆனோடோன்டியா’ என்பார்கள்.

சில நேரங்களில் சில நிரந்தர பற்கள் மட்டும் முளைக்காது. இந்த நிலையை ‘ஹைப்போடோன்டியா’ என்பார்கள். சில குழந்தைகளுக்கு கடைசி கடைவாய்ப்பற்கள் முளைப்பதில்லை. இது சாதாரணமாகும். ஆனால், நடுத்தர வயதில் இந்தப் பற்கள் முளைக்கும். இந்த 3-வது கடைசி கடைவாய்ப் பற்களை ‘ஞானப்பல்’ என்று அழைக்கின்றனர்.

கிருமித்தொற்று, டவுன் சின்ரோம், கிரவுசன் சின்ரோம் போன்ற நோய்களில் பற்கள் முளைப்பது தாமதமாகும்.

எப்போது பற்கள் முளைக்கும்?

தாயின் வயிற்றிலே தோன்றிவிடும் நிரந்தர பற்கள், பின் குழந்தையாக வெளிவந்ததும் 3 அல்லது 6 மாதங்களில் பற்கள் வெளியே முளைத்து வரத் தொடங்குகின்றன. பற்கள் வருவதன் அறிகுறிகள் வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல் வாயை நரநரவென்று கடித்துக் கொண்டிருத்தல் ஆகியவை ஆகும்.

ஈறின் உள்பகுதியில் உள்ள எம்பிரியானிக் செல்களில் இருந்து பற்கள் தோன்றி, ஈறினைத் துளைத்து வெளிவருகிறது. முடி, நகம் போன்று பற்களும் ஒரு கடினமானத் திசுவாகும். இவை நரம்பு கிளைகளின் வேர்களைப் பிடித்துக் கொண்டு வளருகின்றன.

பற்களில் உள்ள எனாமல், பல்லின் வேர் வரை பிடித்து 4 உறைகளுடன் காணப்படுகின்றன. ‘டென்டான் பாப்பிலா’ என்ற பொருள், பற்களுக்கு தோற்றத்தைத் தருகிறது. பற்களின் கீழே காணப்படும் பாலிக்கல் சிமின்ட் மற்றும் காற்றுத்திசு தசைப் பந்தங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

பல் முளைக்கும் நிலையானது 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு வெளியே வருகின்றன. மொட்டுப்பருவம் தொப்பிப்பருவம் மணிப்பருவம் முதிர்மணிப்பருவம் இப்படி பற்கள் வெளிநோக்கி வளர்ந்து, முழுமையான பற்களாக மாறுகின்றன.

ஏறக்குறைய 11 வயதுக்குள் பற்களின் வளர்ச்சி நிறைவுப் பெற்று, நிரந்திர பற்களின் வளர்ச்சி முழுமையடைகின்றன. குழந்தை பருவத்தில் ஒவ்வொரு 6 மாத இடைவேளியில், குறைந்தது 4 பற்கள் முளைக்கின்றன. பற்களின் வேர் வளரும்போது, பற்கள் மேல் புறமாக வளரும்.

8 மாதம் - 6 வயது வரை, பற்கள் வேகமாக வளருகின்றன. ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு பற்கள் விரைவாகத் தோன்றி, விரைவாக வளர்கின்றன.

பற்களின் வளர்ச்சிக்கு என்னென்ன தேவை?

கால்சியம் பாஸ்பரஸ் விட்டமின்கள் ஏ,சி,டி ஃப்ளூரைட் இவற்றில் விட்டமின் ஏ குறைந்தால், பற்களின் எனாமல் உற்பத்தி குறைந்து பற்கள் வலுவிழக்கும்.

பற்களின் வகைகள்

மூன்று வகையாகப் பற்கள் இருக்கின்றன. முன் பகுதியில் வெட்டுப் பற்கள் நடுப்பகுதியில் கோரை பற்கள் கடைவாய்ப் பகுதியில் கடைவாய்ப்பற்கள் என முளைக்கும். 20 பற்கள் பால் பற்களாகத் தோன்றுகின்றன. மேல் தாடை மற்றும் கீழ்த்தாடையில் 8 வெட்டு பற்கள். 4 கோரைப்பற்கள். 20 கடைவாய்ப்பற்கள் காணப்படுகின்றன. மொத்தம் 32 நிரந்தர பற்கள் உருவாகின்றன. இந்தப் பற்களின் வளர்ச்சி பெரும்பாலும் 25 வயதில் நிரந்தரமாக முழுமையடைந்து விடுகிறது.

பற்கள் எளிதாக முளைக்க உதவும் உணவுகள்

பற்கள் முளைக்கும்போது அதன் ஈறுகளில் அசைவுகள் ஏற்படுவதால், குழந்தைகளுக்கு கோபம் மற்றும் எரிச்சல் உண்டாகும். அச்சமயத்தில் பெற்றோர் தங்களுடைய சுண்டு விரலைக் கொண்டு, குழந்தையின் ஈறுகளை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். ஈறுகள் நன்கு அசைவு பெற, ரஸ்க், கேரட் போன்ற கடினமான உணவுகளை சாப்பிட கொடுக்கலாம். இவற்றைச் சாப்பிடுவதால் ஈறுகளின் அசைவு நன்றாக செயல்பட்டு, பற்கள் எளிதில் முளைக்கும்.

குளிர் நேரங்களில் குழந்தையை வெளியே எடுத்து சென்றால், குளிர் குழந்தையின் ஈறுகளில் படும்போது அவை மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

பற்கள் முளைக்கும் காலம்

6-8 மாதம் - 1வது முன் வாய்ப்பற்கள்

8-10 மாதம் - 2வது முன் வாய்ப்பற்கள்

12-15 மாதம் - 3 மற்றும் 4வது முன் வாய்ப்பற்கள்

16-18 மாதம் - 5 மற்றும் 6-ம் பின்கடை வாய்ப்பற்கள்

18-24 மாதங்கள் - 7 மற்றும் 8-ம் கோரைப்பற்கள்

20-30 மாதங்கள் - 9 மற்றும் 10-ம் பின் கடை வாய்ப்பற்கள் முளைக்கத் தொடங்குகின்றன.

WhatsApp channel

டாபிக்ஸ்