‘கொத்துக்கொத்தாக கொட்டும் முடி’ குளிர் காலத்தில் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் என்ன சாப்பிட வேண்டும்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ‘கொத்துக்கொத்தாக கொட்டும் முடி’ குளிர் காலத்தில் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் என்ன சாப்பிட வேண்டும்?

‘கொத்துக்கொத்தாக கொட்டும் முடி’ குளிர் காலத்தில் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் என்ன சாப்பிட வேண்டும்?

Priyadarshini R HT Tamil
Dec 10, 2024 07:00 AM IST

தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்கும் குளிர்கால உணவுகள் என்ன?

‘கொத்துக்கொத்தாக கொட்டும் முடி’ குளிர் காலத்தில் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் என்ன சாப்பிட வேண்டும்?
‘கொத்துக்கொத்தாக கொட்டும் முடி’ குளிர் காலத்தில் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் என்ன சாப்பிட வேண்டும்?

பாதாம்

பாதாமில் பயோட்டின், வைட்டமின் இ மற்றும் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளன. இது உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கிறது. உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களைக் காக்கிறது. தலைமுடியை வலுப்படுத்துகிறது. உங்கள் தலைமுடிக்கு இயற்கை பளபளப்பைக் கொடுக்கிறது. இது உங்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்கான சிறந்த தேர்வாகும்.

முந்திரி

முந்திரியில் சிங்க் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் தலைமுடி வளர்ச்சியின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. உங்கள் தலைமுடியை வலுப்படுத்துகிறது மற்றும் உங்களின் தலைமுடி உதிர்வைக் குறைக்கிறது. குறிப்பாக குளிர் மாதங்களில் தலை முடி உதிராமல் காக்கிறது.

பிஸ்தா

பிஸ்தாவின் பயோடின்கள் அதிகம் உள்ளது. இது தலைமுடி உதிர்வைத் தடுக்கிறது. இது உங்கள் தலைமுடியை வலுப்படுத்துகிறது. உங்கள் ஒட்டுமொத்த தலைமுடி ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. பிஸ்தாக்கள் குளிர்காலங்களில் சிறந்த ஸ்னாக்ஸ் ஆகும். இது உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கிறது.

ஹசல் நட்ஸ்

ஹசல் நட்ஸ்களில் உள்ள வைட்டமின் இ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் தலைமுடி வறண்டு போகாமல் காக்கிறது. உங்கள் தலைமுடி சேதமடையாமல் இருக்கச் செய்கிறது. உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க வைக்கிறது. குறைப்பாக கடும் பனிக்காலங்களில் உங்கள் தலைமுடி ஆரோக்கியம் காக்கப்படுவதற்கு இந்த ஹசல் நட்ஸ்கள் உதவுகின்றன.

பிரேசில் நட்ஸ்கள்

பிரேசில் நட்ஸ்களில் அதிகளவில் செலினியம் உள்ளது. இது உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. உங்களின் வலுவான வேர்க்கால்கள், உங்கள் தலைமுடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை காக்கும்.

வால்நட்ஸ்கள்

வால்நட்ஸ்களில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களை வலுவாக்குகிறது. உங்கள் தலைமுடிக்கும் வலு கொடுக்கிறது. இது உங்கள் தலைமுடி உடைவதைத் தடுக்கிறது. இது குளிர் மாதங்களில் உங்கள் தலைமுடியின் உடையும்போது, மீண்டும் வளரும் திறனை அதிகரிக்கிறது.

கடலை

கடலையில் அதிகளவில் பயோட்டின்கள் உள்ளது. மேலும் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகளும் அதில் நிறைந்துள்ளது. இது உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. இது உங்கள் தலைமுடி உதிர்வைக் குறைக்கிறது. உங்களுக்கு வலுவான மற்றும் பளபளக்கும் தலைமுடியைக் கொடுக்கிறது. குறிப்பாக குளிர்காலங்களில் உங்கள் தலைமுடியின் பளபளப்புக்கு காரணமாகிறது.

பைன் நட்ஸ்

பைன் நட்ஸ்களில் அதிகளவில் ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இதில் உள்ள புரதச்சத்துக்கள் உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. இது உங்கள் தலைமுடியை வலுவாகவும், அடர்த்தியாகவும் மற்றும் ஆரோக்கியமானதாகவும் வைக்க உதவுகிறது.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.