குழந்தைகளிடம் பொறுமையை இழக்காமல் இருக்க பெற்றோர் என்ன செய்யவேண்டும்? இந்த 10 வழிகள் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குழந்தைகளிடம் பொறுமையை இழக்காமல் இருக்க பெற்றோர் என்ன செய்யவேண்டும்? இந்த 10 வழிகள் போதும்!

குழந்தைகளிடம் பொறுமையை இழக்காமல் இருக்க பெற்றோர் என்ன செய்யவேண்டும்? இந்த 10 வழிகள் போதும்!

Priyadarshini R HT Tamil
Jan 07, 2025 06:00 AM IST

குழந்தைகளிடம் பொறுமையை இழக்காமல் இருக்க பெற்றோர் என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.

குழந்தைகளிடம் பொறுமையை இழக்காமல் இருக்க பெற்றோர் என்ன செய்யவேண்டும்? இந்த 10 வழிகள் போதும்!
குழந்தைகளிடம் பொறுமையை இழக்காமல் இருக்க பெற்றோர் என்ன செய்யவேண்டும்? இந்த 10 வழிகள் போதும்!

உங்களை கண்காணிப்பதுபோல் நடியுங்கள்

உங்களை யாரோ பார்த்துக்கொண்டிருகிறார் என்பதைப் போல் நடியுங்கள். இதனால் நீங்கள் உங்கள் எல்லையை இழ்க்க மாட்டீர்கள். அமைதியாக இருப்பீர்கள். உங்களுக்கு விரக்தி ஏற்படும்போது, உங்களிடம் கூறிக்கொள்ளுங்கள், உங்களின் ரியாக்ஷன்கள் அனைத்தும் பார்க்கப்படுகிறது என்று, இதனால் உங்களின் குணம் மாறும்.

மெதுவாகப் பேசுங்கள், சத்தமாக அல்ல

நீங்கள் எப்போதும் உங்கள் குழந்தைகளிடம் பேசும்போது பொறுமையாகப் பேசுங்கள். சத்தமாகப் பேசாதீர்கள். அவர்களிடம் கத்தாமல் நீங்கள் இருக்கும்போது, உங்களுக்கு அதிக மரியாதை கிடைக்கும். அவர்களின் கவனத்தைப் பெறுவீர்கள். உங்கள் குழந்தைகளிடம் கத்துவதற்கு பதில், இதுபோல் நீங்கள் நடந்துகொள்வது குறித்து நாம் பேசுவோம் என்று கூறுங்கள்.

விவாதங்களை தவிருங்கள்

நீங்கள் விவாதங்களைத் தவிர்த்தாலே போதும், அது உங்களின் டென்சனைக் குறைக்கும். எடுத்துக்காட்டாக விவாதங்களைத் தவிர்த்து வேலைகளை செய்யுங்கள். உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை அமைதியான முறையில் கூறுங்கள். அதில் ஏற்படும் சிக்கல்களை விவாதிக்காமல் தீர்க்க முயற்சியுங்கள்.

ஏதேனும் தவறாக நடக்கும்போது கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்

உங்களின் உணர்வுகள் அதிகமாக இருக்கும்போது, நீங்கள் மற்றொரு அறைக்குள் சென்று சில நிமிடங்கள் அமைதியாக அமருங்கள். இப்படி நீங்கள் நேரம் எடுத்துக்கொள்ளும்போது, அது நீங்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு முன்னர் உங்களின் நினைவுகளை ஒன்றிணைக்க உதவும். மேலும் உங்கள் குழந்தைகள் கோவப்பட்டால், நீங்கள் ஆழ்ந்த சுவாசம் எடுத்துக்கொண்டு, ஒரு தெளிவான மனநிலைக்கு வாருங்கள்.

ஸ்ட்ரெஸ் பால் மற்றும் தியானம் போன்ற வழிகளை கடைபிடியுங்கள்

இதனால் உங்களின் மன அமைதி மேம்படும். நீங்கள் ஸ்ட்ரெஸ் பாலை கையில் வைத்து அழுத்தும்போது, உங்களின் மனம் அமைதி பெறுகிறது. இதனால் உங்களின் டென்சன் குறையும். உதாரணமாக, நீங்கள் விரக்தியுடன் இருக்கும்போது, நீங்கள் சில வீட்டு வேலைகளை மனதை செலுத்துங்கள். எந்த பதிலையும் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் முன்னர் சிறிது நேரம் அந்த பாலை அழுத்தி, மனதை அமைதிப்படுத்துங்கள்.

நேர்மறையான வார்த்தைகளுடன் துவங்குங்கள்

உங்களின் வார்த்தைகளை எப்போதும் நேர்மறையாக பேசுங்கள். இது உங்களுக்கு நல்ல புரிதல் மற்றும் தொடர்பை ஏற்படுத்தும். உதாரணமாக, நீங்கள் எப்போதும் எத்தனை உதவிகரமாக இருக்கும் விதத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் என்னை கண்டுகொள்ளாதபோது, அது எனது உணர்வுகளைக் வாட்டுகிறது. இந்த அணுகுமுறை உங்களை நன்றாக நடந்துகொள்ள உதவுகிறது. இது உங்களின் குழந்தைகளின் தன்னம்பிக்கையை குலையாமல் பார்த்துக்கொள்கிறது.

நீண்ட நாள் விளைவுகள் குறித்து யோசியுங்கள்

இன்றைய உங்களின் செயல்கள், உங்கள் குழந்தைகளின் நாளைய செயல்பாட்டை பாதிக்கிறது. அவர்களின் உணர்வுகளிர் தாகத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் அவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டால், அவர்கள் அதை நினைவில் வைத்திருக்கிறார்கள். பிற்காலத்தில் அது அவர்களை எதிர்மறையாக பாதிக்கிறது. மனஅழுத்தம் நிறைந்த சூழலில் நீங்கள் கத்தாமல், நீங்கள் உங்களின் பேரன்டிங் ஸ்டைலை எப்படி அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

கொஞ்சம் ஓய்வு எடுங்கள்

உங்களுக்கு தேவையான அளவு உறக்கம் உள்ளதை உறுதி செய்யுங்கள். நீங்கள் சோர்வாக இருக்கும்போது, உங்களுக்கு அதிகமான எரிச்சல் ஏற்படுகிறது. குழந்தைகள் எப்படி சோர்வாக இருக்கும்போது, கொஞ்சம் கோவப்படுகிறார்களோ, அதேபோல் பெரியவர்களுக்கும் அவர்கள் போதிய ஓய்வு எடுத்துக்கொள்ளாதபோது சோர்வு ஏற்படுகிறது. அனைவரும் போதிய அளவு ஓய்வு எடுத்துக்கொண்ட பின்னர், குடும்பத்தில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள். இதனால் உங்களின் மனநிலை மாறும்.

எப்போதும் அன்போடு நடந்துகொள்வதை உறுதி செய்யுங்கள்

நீங்கள் விரக்தியில் இருக்கும்போது, எப்போதும் அன்பை தேர்ந்தெடுங்கள். குழந்தைகள் சிறப்பான நேரங்களில் எப்படி உணர்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்கிறார்கள். குழந்தைகள் அவர்களுக்கு நீங்கள் லன்ச் கட்டிக்கொடுக்காத நாட்களையும், அவர்களின் பொருளை தவறி வைத்துவிடும் பொழுதுகளையும் மறந்து விடுகிறார்கள். ஆனால் அவர்கள் உங்களின் ரியாக்ஷன்களை எப்போதும் மறப்பதில்லை. அவர்களும் அதே வழியில் ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.

பேசும் குச்சி

ஒரு குச்சி போன்ற பொருளை வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஏற்காத சில விஷயங்கள் குறித்து பேசும்போது, ஒருவர் அந்த குச்சியை வைத்திருக்கவேண்டும். அப்போது அவர்களுக்கு இடையூறின்றி பேச முடிகிறது. இதனால் புரிதல் மற்றும் கவனம் அதிகரிக்கிறது. மேலும் மற்றவர்களின் கோணத்தை முறையான உணர முடிகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.