Tamil News  /  Lifestyle  /  What Not To Share With Relatives Ush Listen These Are The Secrets That Should Not Be Told To Relatives

What not to Share with Relatives : உஷ்… காத கொடுங்க! உறவினர்களிடம் கூறக்கூடாத ரகசியங்கள் இவைதான்!

Priyadarshini R HT Tamil
Jan 24, 2024 05:07 PM IST

What not to Share to Relatives : உஷ்… காத கொடுங்க! உறவினர்களிடம் கூறக்கூடாத ரகசியங்கள் இவைதான்!

What not to Share with Relatives : உஷ்… காத கொடுங்க! உறவினர்களிடம் கூறக்கூடாத ரகசியங்கள் இவைதான்!
What not to Share with Relatives : உஷ்… காத கொடுங்க! உறவினர்களிடம் கூறக்கூடாத ரகசியங்கள் இவைதான்!

ட்ரெண்டிங் செய்திகள்

பொருளாதார நிலை

உங்கள் வீட்டின் பொருளாதார நிலையை நீங்கள் உங்கள் உறவினர்களிடம் கூறக்கூடாது. உங்கள் பண வரவு, செலவுகள், முதலீடுகள் அல்லது வேறு வருமானங்கள் எதையுமே நீங்கள் உங்கள் உறவினர்களிடம் சொல்லக்கூடாது. இதுபோன்ற தகவல்களை நீங்கள் பகிரும்போது, அது தேவையற்ற சிக்கவ்களை ஏற்படுத்தி, பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. அது உங்கள் குடும்பத்துக்குள் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

திருமண பிரச்னைகள்

திருமணத்திற்குள் இருக்கும் தனிப்பட்ட விஷயங்களை நீங்கள் உங்கள் உறவினர்களிடம் பகிரக்கூடாது. அவற்றை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். நெருக்கமான விவரங்களை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பிரச்னைகள் ஆகியவற்றை நீங்கள் உறவினர்களிடம் பகிரக்கூடாது. இது உங்களுக்கு ஆரோக்கியமான தீர்வுகள் கிடைக்க வழிவகுக்காது.

தொழில் குறித்து கூறக்கூடாது

நீங்கள் அறிவுரைகளை பெறுவது நல்லதுதான். ஆனால் உங்கள் வேலையில் ஒவ்வொரு நிலையையும் கூறக்கூடாது. உங்கள் எதிர்கால திட்டங்கள், வேலைவாய்ப்புகள், நீங்கள் தேடும் வேலைகள் என எதையும் நீங்கள் கூறக்கூடாது. பணியில் உள்ள பிரச்னைகள் தேவையற்ற கருத்துக்களுக்கு வழிவகுக்கும். தேவையற்ற அறிவுரைகளுக்கு இடம் கொடுக்கும். இந்த விஷயங்களை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள் அல்லது நம்பகமான வழிகாட்டிகளிடம் இருந்து அறிவுரை பெறலாம்.

குடும்ப சண்டைகள்

உங்கள் வீட்டில் ஏற்படும் குடும்ப சண்டைகள் ஒன்றையும் நீங்கள் உங்கள் உறவினர்களிடம் கூறக்கூடாது. இதுபோன்ற விஷயங்களை நாம் கூறும்போது, அது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஒருதலைபட்சமாக கருத்து கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதுவும் பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகளாக அமையும்.

உடல் பிரச்னைகள்

உங்களின் தனிப்பட்ட உடல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகளை உறவினர்களிடம் கூறாதீர்கள். குறிப்பாக உங்கள் மனஆரோக்கியம் அல்லது சென்சிட்டிவான விஷயங்களை கூறாதீர்கள். இவற்றை நீங்கள் மருத்துவரை தவிர வேறு எவரிடமும் கூறக்கூடாது. இவற்றை உங்கள் உறவினர்களிடம் கூறினால், அதுவும் தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். அது தேவையற்ற கற்பனைகளுக்கு அவர்களை அழைத்துச்செல்லும்.

சட்டச்சிக்கல் உள்ள பிரச்னைகள்

சட்டச்சிக்கல் உள்ள பிரச்னைகளை நீங்கள் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டும். உறவினர்களிடம் தெரிவிக்கக்கூடாது. சட்டம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் விரிவாக விளக்கிக்கூறினால், அது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அது இல்லாத கிசுகிசுக்களுக்கு உங்களை அழைத்துச்செல்லும். இதனால் புரிதலின்மை ஏற்படும். குடும்பத்திற்குள்ளே சிக்கல்களை விளைவிக்கும்.

தனிப்பட்ட இழப்புக்கள்

ஒவ்வொருவரும் தவறு செய்கிறார்கள். ஆனால் தனிப்ட்ட இழப்புகளை உறவினர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆனால் உங்களின் ஒவ்வொரு இழப்பையும் நீங்கள் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்வது உங்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும். அதனால் தேவையான விஷயங்களை மட்டும் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். தேவையற்ற முன்முடிவுகளுக்கும், குடும்பத்தில் குழப்பங்களுக்கும் வித்திடாதீர்கள்.

நெருங்கிய உறவுகள்

உங்கள் காதல் வாழ்க்கையில் உறவுகள் குறிப்பாக தனிப்பட்ட உங்களில் இயல்புகளை உங்கள் உறவினர்களிடம் கூறாதீர்கள். அது உங்களுக்கும், உங்கள் பார்ட்னருக்கும் இடையில் மட்டுமே இருக்க வேண்டியவை. அதிகம் பகிர்ந்துகொள்வது உங்களின் உறவை நீர்க்கச்செய்துவிடும். அது நன்றாகவும் இருக்காது. குடும்பத்தில் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

எதிர்கால திட்டங்கள்

உங்களின் எதிர்கால திட்டங்கள் ஒவ்வொன்றையும் கூறிக்கொண்டிருக்காதீர்கள். அவர்கள் பெரிய மாற்றத்தில் இருந்தார்கள் என்றால், அதை கட்டாயம் கூறாதீர்கள். இவையெல்லாம் தேவையற்ற அறிவுரைகளுக்கு வழிவகுக்கின்றன. எனவே அதுபோன்ற தகவல்களை நீங்கள் நம்பும் ஒரு நபரிடம் வேண்டுமானால் கூறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்