Healthy Tips: இல்லத்தரசிகளே உஷார்.. தக்காளி அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன நோய்கள் வரும் தெரியுமா?
தக்காளியை உணவில் அதிகளவு பயன்படுத்தும் போது என்னென்ன ஆபத்துக்கள் வரும் என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

நாம் சமைக்கும் அனைத்து உணவுகளிலும் தக்காளி இடம்பெறும் வாய்ப்புகள் அதிகம் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு தக்காளி தவிர்க்க முடியாத உணவாக மாறி இருக்கிறது. தக்காளியில் உள்ள பொட்டாசியம், இரும்புச் சத்து , விட்டமின் சி, கே, நார்சத்து என எண்ணற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை தக்காளியில் இருந்தாலும் அதிகளவு எடுத்துக்கொள்ளும் போது சில ஆபத்துக்களும் உள்ளன. இந்த கட்டுரையில் தக்காளி அதிகமாக உட்கொண்டால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பார்ப்போம்.
தக்காளியின் புளிப்புச் சுவை அவற்றின் அமிலத் தன்மையைத் தூண்டுகிறது. எனவே, அவற்றை அதிக அளவில் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் அமில வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும், தக்காளியில் அதிகளவு உள்ள சிட்ரிக் ஆசிட், வயிற்றில் அதிக கேஸ் மற்றும் எரிச்சலை உண்டாக்கி ஜீரண சக்தியை குறைத்துவிடும்.
தக்காளியில் அதிகமாக காணப்படும் அல்கலாய்டு உடலில் கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்தி, எலும்புகளில் தேய்மானம் மற்றும் மூட்டுகளில் வலியை உண்டாக்கும். தக்காளியில் காணப்படும் சோலனின் என்ற உறுப்பு உடலின் திசுக்களில் கால்சியத்தை உருவாக்குகிறது. இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தை அதிகரிக்கிறது.
ஆக்ஸலேட், கால்சியம் நிறைந்த உணவு வகைகளில் ஒன்றான தாக்காளியை அதிக அளவு உட்கொண்டால் மட்டுமே சிறுநீரக கற்களை உருவாக்கும். இது மிகவும் ஆபத்தான ஒன்று.
அதிகளவு அமிலங்கள் இருப்பதால் தக்காளி உங்கள் வயிற்றில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் வயிற்றுப்போக்கு பிரச்னை ஏற்படலாம். தக்காளியில் உள்ள சலாமெனல்லா உங்களுக்கு அதிகளவு வயிற்றுப்போக்கை ஏற்படுத்த கூடிய ஒன்றாகும்.
தக்காளியில் அதிகளவு உள்ள ஹிஸ்டமைன் என்ற கலவை அவற்றிலிருந்து ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது. அடிக்கடி தக்காளியை சாப்பிட்டால் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனையை உருவாக்கும். எனவே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழிக்குகேற்ப தக்காளியை அளவோடு உட்கொண்டு வளமாக வாழ்வோம்..!
பொறுப்பு துறப்பு:
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.

டாபிக்ஸ்