தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  What Is The Modern Buzzword Of The Digital Age, 'Fexting'? Do You Know The Effects It Can Have On A Relationship

Relationship: டிஜிட்டல் யுகத்தின் நவீன வார்த்தை ‘Fexting’ என்றால் என்ன? அது உறவில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Jan 09, 2024 03:00 PM IST

Relationship: டிஜிட்டல் யுகத்தின் நவீன வார்த்தை ‘Fexting’ என்றால் என்ன? அது உறவில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் தெரியுமா?

Relationship: டிஜிட்டல் யுகத்தின் நவீன வார்த்தை ‘Fexting’ என்றால் என்ன? அது உறவில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் தெரியுமா?
Relationship: டிஜிட்டல் யுகத்தின் நவீன வார்த்தை ‘Fexting’ என்றால் என்ன? அது உறவில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

டெக்ஸ் செய்திகளின் மூலம் சண்டையிட்டுக்கொள்வது காதலர்களுக்கு மிகவும் சவுகர்யமான ஒன்று. ஏனெனில், அது அருகில் உள்ளவர்களுக்கு நாம் சண்டையிடுகிறோம் என தெரியாது. உங்களை சுற்றி ஆட்கள் இருக்கும்போது இது பாதுகாப்பான வழி. இது உங்கள் உறவில் கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

நேராக பார்த்து பேசுவதைவிட இந்த ஃபெக்ஸ்டிங்கில் சூடான வார்த்தைகள் அதிகம் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. உங்களின் உணர்வுகள் எழுத்து வடிவில் டிஜிட்டல் செய்திகளாக செல்கிறது. ஃபெக்ஸ்டிங், உறவுகள் பிரச்னையில் வெளிச்சத்தை பரப்புகிறது. திரைகள் மூலம் தொடர்புகொள்ளப்படுகிறது. நேரடி உரையாடல் இல்லாமல் போகிறது.

ஃபெக்ஸ்டிங்கின் பிரச்னைகள்

தொழில்நுட்பம் சந்தேகமின்றி நமது உரையாடலுக்கு வழிவகுக்கிறது. அதேபோல் சில சவால்களையும் கொண்டுள்ளது. சண்டை ஏற்படும்போது குறிப்பாக அது பாதகமாகிவிடுகிறது. ஃபெக்ஸ்டிங்காலே கூட பிரச்னைகள் பெரிதாக வாய்ப்புள்ளது. நாம் அனுப்பும் செய்திகளில் உள்ள அர்த்தம் புரிதலின்மையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இதனால் அவர்களுக்கிடையே பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஃபெக்ஸ்டிங் இருவரிடையே உணர்வு ரீதியான தொடர்பை போக்கிவிடும். இதில் உணர்வுகளின் தாக்கத்தை அறியமுடியாது. அதுவே பிரச்னையை அதிகரித்துவிடும். மற்றவர்களின் பதில் புரிதலின்மை, அனுதாபத்தை ஏற்படுத்தாமல், ஒரு ஆரோக்கியமான உறவை பாதிக்கும்.

உங்கள் காதலருடன் நீங்கள் நல்லுறவை பேண விரும்பினால் நீங்கள் பெக்ஸ்டிங்கை தவிர்க்க வேண்டும். திறந்த மற்றும் நேர்மையான உரையாடலை செய்யுங்கள். நேரிலோ அல்லது ஃபோனிலோ கூட அந்த உரையாடல் நடைபெறலாம். 

எனவே பொறுமை, அனுதாபம், நேர்மை எல்லாம் உறவில் அவசியம். உங்களுக்கு அன்பானவர்களிடம் நீங்கள் பேசும்போது, மரியாதையான வார்த்தைகளை பேசி பழகுங்கள். இது உங்கள் சிந்தனைகள் மற்றும் நோக்கங்களை அவர்களுக்கு விளக்கிக்கூறுவதற்கு உதவும். 

உங்கள் மீது தவறு இருந்தால் நேர்மையாகவே மன்னிப்பு கேளுங்கள். இது உங்கள் காதலருடன் உணர்வு ரீதியான நெருக்கத்தை மறுசீரமைக்கும்.

நவீன உறவுகளில் ஃபெக்ஸ்டிங் என்பது பெரும்பாலான காதலர்கள் இப்போது செய்துகொண்டிருப்பது. எனினும், திறந்த மற்றும் நேர்மையான உரையாடல்தான் சிறந்தது. உங்கள் இணையருடன் நல்ல உரையாடல் இருக்கும்போது, தேவையற்ற பிரச்னைகள் ஏற்படாது. அவர்களுடன் நல்லுறவே பேணப்படும்.

WhatsApp channel

டாபிக்ஸ்