International Translation Day: தகவல் பரிமாற்றத்திற்கான ஆதாரம் மொழி பெயர்ப்பு! மொழிப்பெயர்ப்பு நாளின் நோக்கம்!-what is the important and purpose of international translation day - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  International Translation Day: தகவல் பரிமாற்றத்திற்கான ஆதாரம் மொழி பெயர்ப்பு! மொழிப்பெயர்ப்பு நாளின் நோக்கம்!

International Translation Day: தகவல் பரிமாற்றத்திற்கான ஆதாரம் மொழி பெயர்ப்பு! மொழிப்பெயர்ப்பு நாளின் நோக்கம்!

Suguna Devi P HT Tamil
Sep 30, 2024 07:21 AM IST

International Translation Day: உலக அளவில் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்தது, மொழிப்பெயர்ப்பு எனும் அற்புதமான கருவி தான். ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு கருத்துக்களை பரிமாறிக்கொள்ள இந்த கருவி உதவுகிறது.

Photo: UNO 
International Translation Day: தகவல் பரிமாற்றத்திற்கான ஆதாரம் மொழி பெயர்ப்பு! மொழிப்பெயர்ப்பு நாளின் நோக்கம்!
Photo: UNO International Translation Day: தகவல் பரிமாற்றத்திற்கான ஆதாரம் மொழி பெயர்ப்பு! மொழிப்பெயர்ப்பு நாளின் நோக்கம்!

மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை கொண்டாடு விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 அன்று சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் வழியாக சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் என்பது மொழி வல்லுனர்களின் பணிக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பாகும், இது நாடுகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, உரையாடல், புரிதல் மற்றும் ஒத்துழைப்பை எளிதாக்குகிறது, வளர்ச்சிக்கு பங்களிக்கிறது மற்றும் உலக அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.

மொழிப்பெயர்ப்பின் அவசியம் 

ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு தொழில்நுட்பப் பணி உட்பட இலக்கியம் மற்றும் விஞ்ஞானப் பணி தொடர்பான கருத்துக்களை மாற்றுவதற்கு மொழிபெயர்ப்பு முறை மிகவும் உதவிகரமனதாக இருக்கு. விளக்கம் மற்றும் கலைச்சொற்கள் உள்ளிட்ட தொழில்முறை மொழிபெயர்ப்பு என்பது சர்வதேச பொது உரையாடல் மற்றும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதில் தெளிவு, நேர்மறையான காலநிலை மற்றும் உற்பத்தித்திறனைப் பாதுகாக்க இன்றியமையாதது ஆகும். 

கடந்த 2017 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சபை சார்பாக பொதுச் சபை நாடுகளை இணைப்பதிலும், புரிதல் மற்றும் மேம்பாட்டை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றும் மொழிப்பெயர்ப்புக்கு ஒரு சிறப்பு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 இந்நாளாக கொண்டாடப்படுகிறது.  

மொழிப்பெயர்ப்பு நாள் காரணம் 

செப்டம்பர் 30, மொழிபெயர்ப்பாளர்களின் புரவலராகக் கருதப்படும் பைபிள் மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோமின் நினைவாக இந்த நாள் கொண்டாடுகிறது. புனித ஜெரோம் வடகிழக்கு இத்தாலியைச் சேர்ந்த ஒரு பாதிரியார் ஆவார், அவர் புதிய ஏற்பாட்டின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளிலிருந்து லத்தீன் மொழியில் பைபிளின் பெரும்பகுதியை மொழிபெயர்க்கும் முயற்சியில் பெரும்பாலும் அறியப்பட்டவர்.

எபிரேய நற்செய்தியின் சில பகுதிகளையும் கிரேக்க மொழியில் மொழிபெயர்த்தார். அவர் இலிரியன் வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் அவரது தாய்மொழி இல்லியன் பேச்சுவழக்கு மொழியாகும் . அவர் பள்ளியில் லத்தீன் மொழியைக் கற்றுக்கொண்டார் மற்றும் கிரேக்கம் மற்றும் ஹீப்ரு மொழிகளில் சரளமாக பேசி வந்தார். ஜெரோம் 30 செப்டம்பர் 420 அன்று பெத்லகேம் அருகே இறந்தார். உலகின் முதல் மொழிப்பெயர்ப்பாளராக அறியப்படும் ஜெரோம் இறந்த தினத்தை சர்வதேச மொழிப்பெயர்ப்பு நாளாக கொண்டாடப்படுகிறது. 

ஒவ்வொரு நாட்டின் மொழியினை பாதுகாக்கவும், மற்ற மொழிகளை அந்நாட்டின் மீது தினிக்காமல் இருக்கவும் மொழிப்பெயர்ப்பு மிகவும் தேவைப்படுகிறது. அசுர வேகத்தில் வளர்ந்து வரும் உலகளாவிய வளர்ச்சியில் பல நாடுகளுக்கு செல்லவும், அங்கு இயல்பான ஒரு வாழ்வை வாழவும் இந்த மொழிப்பெயர்ப்பை ஒரு வாசலை அமைக்கிறது. இதனை உணர்ந்த மொழியின் உண்மையான ஆழத்தை பாதுகாக்க வேண்டும். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.