இந்த 10 பழங்களை சாப்பிடுவதால், உங்கள் உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் என்ன? அத்தனை ஆரோக்கியம் தரும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இந்த 10 பழங்களை சாப்பிடுவதால், உங்கள் உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் என்ன? அத்தனை ஆரோக்கியம் தரும்!

இந்த 10 பழங்களை சாப்பிடுவதால், உங்கள் உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் என்ன? அத்தனை ஆரோக்கியம் தரும்!

Priyadarshini R HT Tamil
Updated Dec 13, 2024 11:02 AM IST

இந்த 10 பழங்களை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைககும் நன்மைகள் என்ன? உடல் எடை குறைப்பு முதல் ஆரோக்கியம் வரை எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.

இந்த 10 பழங்களை சாப்பிடுவதால், உங்கள் உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் என்ன? அத்தனை ஆரோக்கியம் தரும்!
இந்த 10 பழங்களை சாப்பிடுவதால், உங்கள் உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் என்ன? அத்தனை ஆரோக்கியம் தரும்!

ஆப்பிள்

ஆப்பிள்களில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் இருக்கும். இதில் கலோரிகள் குறைவு. இது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத்தரும். இதனால் உங்கள் உடலில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்படும். இதில் உள்ள பெக்டின் உங்களின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரித்து, பசியைக் கட்டுப்படுத்தும்.

பெரிகள்

ஸ்ட்ராபெரிகள், ப்ளூபெரிகள் மற்றும் ராஷ்பெரிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் இந்த பழங்கள் வயிறு உப்புசத்தைக் குறைக்கும். அதனுடன், கொழுப்பு வளர்சிதையையும் மேம்படுத்தும். இது லோ கிளைசமிக் இண்டக்ஸ் உணவுகளுள் உள்ளது. எனவே உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தின் உற்ற தோழனாக இந்தப்பழம் இருக்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழங்களில் கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம். ஆரஞ்சு பழங்கள் உங்கள் உடலின் வளர்சிதையை மேம்படுத்தும். இது உங்கள் உடல் கொழுப்பைக் குறைக்க உதவும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரித்து, உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத்தரும்.

அவகேடோ

அவகேடோக்களில் உள்ள ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள், உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தரும். மேலும் உங்கள் கொழுப்பைக் குறைக்கு ஹார்மோன்களை முறைப்படுத்த உதவும். இது உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்து, வீக்கத்தை போக்குகிறது.

பப்பாளி

பப்பாளியில் பப்பைன் உள்ளது. இது உங்கள் உடலில் செரிமானத்தைத் தூண்டும் ஒரு எண்சைம் ஆகும். இது வயிறு உப்புசத்தைக் குறைக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள், உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது.

கிரேப் ஃப்ரூட்

இதில் உள்ள கொழுப்பை குறைக்கும் குணங்களுக்காக இந்தப்பழம் அறியப்படுகிறது. மேலும் இதில் எண்சைம்கள் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. இன்சுலின் அளவை குறைக்கிறது. மேலும் வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது.

தர்ப்பூசணி

தர்ப்பூசணியில் கலோரிகள் குறைவு, அதிக நீர்ச்சத்துக்கள் கொண்டது. இது தர்ப்பூசணி பழத்தை நீங்கள் உட்கொள்ளும்போது, உங்களுக்கு அதிக நீர்ச்சத்தைக் கொடுக்கிறது. இதனால் உங்களுக்கு பசி கட்டுப்படுத்தப்படுகிறது. இது வயிற்றுப்பகுதிகளில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இதில் உள்ள அமினோ அமிலங்கள், அர்ஜினைன், உங்கள் கொழுப்பைக் குறைக்க அதிகளவில் உதவுகிறது.

மாதுளை

மாதுளை பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதனால் மாதுளை பழம் வீக்கத்தை எதிர்த்து போராடுகிறது. மேலும் கொழுப்பு வளர்சிதையை மேம்படுத்துகிறது. இதில் உள்ள பாலிஃபினால்கள், கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது உங்கள் தொப்பையில் உள்ள கொழுப்பைக் கரைக்கிறது.

அன்னாசி

அன்னாசிப் பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்ற எண்சைம்களால், செரிமான மண்டலம் சீரடைகிறது. வயிறு உப்புசம் குறைகிறது. இதில் உள்ள இயற்கை இனிப்புகள் உங்களின் இனிப்பு தேவையை பூர்த்தி செய்கிறது. இது உங்களின் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. எதிர்க்கும் ஸ்ட்ர்ச்சகளும் உள்ளது. இது உடலில் தண்ணீர் தேங்குவதைக் குறைத்து, கொழுப்பு எரிக்கப்படும் அளவை மேம்படுத்துகிறது. இதில் உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. ஒட்டுமொத்த உடல் எடை குறைப்புக்கும் உதவுகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.