நாள்தோறும் ஆளி விதைகள் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
ஆளி விதைகள் நார்ச்சத்து நிறைந்தது. இதில் உடலுக்கு அத்தியாவசியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆல்போ-லினோலெனிக் அமிலங்கள் நிறைந்துள்ளது. உடலின் ஒட்டுமொத்த பகுதிகளையும் ஊக்குவிக்கும் பங்கு ஆளி விதைகளுக்கு இருப்பதாக பல்வேறு ஆய்வுகளின்படி தெரியவந்துள்ளது.

தாவர அடிப்படையிலான இந்த ஆளி விதைகள் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடனட்களை வழங்குகிறது. பலருக்கு தெரியாத ஆளி விதையின் ஆரோக்கிய நன்மைகள் சில
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாடு
ஆளி விதைகள் இருக்கும் அதிகபட்ச நார்ச்சத்து ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
கொழுப்பு அளவு கட்டுப்பாடு
ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு அதிகம் ஆகிவிடாமலும், அதை சீரான அளவில் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
உடல் சூட்டை தணித்தல்
கோடை காலத்தில் உடல் எளிதாக சூடாகி உஷ்ணத்தை கிளப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். நாள்தோறும் இரண்டு டீஸ்பூன் ஆளி விதைகளை சாப்பிடுவது உடல் சூட்டை தணிக்க உதவும்.
உடல் எடை குறைப்பு
நொறுக்கு தீனி சாப்பிடுவதற்கு பதில் ஆளி விதைகளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் பெறுவதுடன், பசியின்மை உணர்வை ஏற்படுத்தும். இதனால் அளவாக சாப்பிட தூண்டுவதுடன் உடல் எடையை குறைக்கவும் பேருதவி புரிகிறது.
ரத்த அழுத்ததத்தை குறைக்கிறது
ஆளி விதைகள் ரத்த அழுத்தத்தை மிகவும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. தொடர்ந்து ஆறு மாதம் 30 கிராம் அளவு ஆளி விதைகளை உட்கொண்டால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும் என கனடா நாட்டின் ஆய்வுகள் கூறுகின்றன.
மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது: நாள்தோறும் ஆளி விதையை எடுத்துக்கொள்வதினால் இதய ஆரோக்கியம் மேம்படுவதுடன், மாரடைப்பு அபாயத்தை வெகுவாகக் குறைக்கும் என பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்: ஆளி விதையில் இருக்கும் அதிகபட்ட நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
