Erectile Dysfunction: விறைப்புத்தன்மை எதனால் வருகிறது? விறைப்புத்தன்மையில் இருந்து மீள என்ன செய்யலாம்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Erectile Dysfunction: விறைப்புத்தன்மை எதனால் வருகிறது? விறைப்புத்தன்மையில் இருந்து மீள என்ன செய்யலாம்?

Erectile Dysfunction: விறைப்புத்தன்மை எதனால் வருகிறது? விறைப்புத்தன்மையில் இருந்து மீள என்ன செய்யலாம்?

Marimuthu M HT Tamil Published Jul 12, 2024 02:40 PM IST
Marimuthu M HT Tamil
Published Jul 12, 2024 02:40 PM IST

Erectile Dysfunction: விறைப்புத்தன்மை எதனால் வருகிறது மற்றும் விறைப்புத்தன்மையில் இருந்து மீள என்ன செய்யலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.

Erectile Dysfunction: விறைப்புத்தன்மை எதனால் வருகிறது? விறைப்புத்தன்மையில் இருந்து மீள என்ன செய்யலாம்?
Erectile Dysfunction: விறைப்புத்தன்மை எதனால் வருகிறது? விறைப்புத்தன்மையில் இருந்து மீள என்ன செய்யலாம்?

 ஆண்களில் ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்னை:

ஆண்களில் விறைப்புத்தன்மை பிரச்னை பெரும்பாலும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற நிலைமைகளால் ஏற்படுகிறது. இது சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கடுமையான நீண்டகால சுகாதார விளைவுகளை ஏற்படுத்தும்.

மேலும், விறைப்பின்மைப் பிரச்சனை உடல் பருமன், மோசமான உணவு மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற வாழ்க்கை முறை காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இந்த நிலைமைகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. விறைப்பின்மைப் பிரச்னை, மனிதனின் தொழில் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். விறைப்புத்தன்மைப் பிரச்னையில் உள்ள ஆண்கள் வேலையில் உற்பத்தித்திறன் குறைவதை அனுபவிக்கலாம்.

விறைப்புத்தன்மைப் பிரச்னையை சரிசெய்யவேண்டிய உணவுகள், தவிர்க்க வேண்டிய உணவுகள்:

இதனைத் தவிர்க்க நாம் சேர்க்க வேண்டிய உணவுகள் குறித்தும் நீக்க வேண்டிய உணவுகள் குறித்தும், செய்யவேண்டிய மருத்துவ நடைமுறைகள் குறித்தும் இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

கீரைகள்: தெருக்களில் விற்பனை செய்துவரப்படும் கீரைகளில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே, தினசரி ஒரு கீரையினை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக, முருங்கைக்கீரையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

காபி: ஒரு நாளைக்கு இந்தியர்கள் குறைந்தபட்சம் இரண்டில் இருந்து மூன்று முறை காபி குடிக்கின்றனர். காபியில் இருக்கும் காஃபினால் விறைப்புத்தன்மை குறைகிறது. எனவே, அதனை குறைவாக எடுத்துக்கொள்ளலாம்.

வெள்ளைப்பூண்டு: வெள்ளைப்பூண்டு, ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்பினைக் கரைத்து, ரத்தம் சீராக உதவும். வெள்ளைப்பூண்டில் இருக்கும் s-அல்லில் சிஸ்டைன் என்னும் மூலப்பொருள், விறைப்புத்தன்மையை அதிகரிக்க உதவும்.

தர்பூசணி: தர்பூசணி விறைப்புத்தன்மை பிரச்னை நிகழாமல் இருக்க உதவும் உணவுப்பொருளாகும். தர்பூசணியில் இருக்கும் லைகோபீன் ஊட்டச்சத்து விறைப்புத்தன்மையை அதிகரிக்கும்.

வால்நட்ஸ்: வால்நட்ஸ் என்னும் உலர் பழங்களில் போலிக் அமிலம், வைட்டமின் ஈ, அர்ஜினைன், நார்ச்சத்து நிரம்பியுள்ளது. அர்ஜினைன், உடலில் நைட்ரிக் ஆக்சைடை தயார் செய்து விறைப்புத்தன்மையை அதிகரிக்கிறது.

பாதாம்: பாதாமில் வைட்டமின் இ, செலினியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இதனை தினசரி எடுத்துக்கொள்வதன் மூலம் விறைப்புப்பிரச்னை சரியாகும்.

இஞ்சி: இஞ்சியில் பொட்டாசியம், வைட்டமின் பி6, மாங்கனீசு போன்ற சத்துக்கள் உள்ளன. இவை விறைப்புத்தன்மை அதிகரிக்க செய்யும்

மாதுளை ஜூஸ்: மாதுளையினை தொடர்ந்து குடித்து வந்தால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் விறைப்புத்தன்மை அதிகரிக்கும்.

தவிர்க்க வேண்டியவை: கண்டிப்பாக புகை மற்றும் மது அருந்தக்கூடாது. இரவில் நீண்ட நேரம் தூங்காமல் இருக்கக்கூடாது. தேவையில்லாமல் எதையும் போட்டு யோசிக்கக்கூடாது; ரிலாக்ஸாக இருக்கவேண்டும். முடிந்தளவு கொழுப்பு உணவுப்பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

வாரத்திற்கு மூன்று முறையாவது உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு பிற்காலத்தில் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.