Tamil News  /  Lifestyle  /  What Can Be Done To Reduce Belly Fat

Belly Fat: தொப்பையைக் குறைக்க என்ன செய்யலாம்?

Marimuthu M HT Tamil
Jan 19, 2024 09:50 AM IST

தொப்பையைக் குறைக்க என்ன செய்யலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.

தொப்பையைக் குறைக்க என்ன செய்யலாம்?
தொப்பையைக் குறைக்க என்ன செய்யலாம்?

ட்ரெண்டிங் செய்திகள்

  • காலையில் எழுந்ததும் தினமும் ஒரு கிளாஸ் நீரில் எலுமிச்சைப் பழ சாறினை கலந்து ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடிக்க தொப்பைக் குறையும். மேலும் எலுமிச்சையில் இருக்கும் பெக்டின் என்னும் நார்ச்சத்து, கொழுப்பினை கரைக்க உதவுகிறது.
  • அலுவலகம் மற்றும் கல்லூரி செல்லும் நபர்கள், அதிகாலையில் நார்ச்சத்துமிக்க உணவுகளையும், புரதச்சத்துமிக்க உணவுகளையும் எடுத்துக்கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு மெல்ல குறையத் தொடங்கும். குறிப்பாக, காலையில் சுண்டல் போன்ற புரதச்சத்துமிக்க உணவுகளோ, முட்டை மற்றும் தயிர் போன்ற உணவுகளையோ உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
  • ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் நீரையாவது குடிக்க முயற்சியுங்கள். இது உடலில் வயிற்றின் தொப்பையில் இருக்கும் கொழுப்பினைக் குறைக்க உதவும்.
  • தினமும் அரைமணி நேரம் ஒதுக்கி 30 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி, ரன்னிங், ஜாகிங், நீச்சல் பயிற்சி, சைக்கிளிங் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றினை செய்யலாம். அதேபோல் உட்கார்ந்து எழுதல், படுத்துக்கொண்டே வயிறுடன் கூடிய உடலை எழச்செய்தல், படுத்துக்கொண்டே பெடல் செய்வதுபோல் கால்களை இயக்குதல், தண்டால் போடுவது, கால்களை மேல் இருந்து கீழாக இயக்குவது போன்றவற்றைச் செய்யலாம்.
  • அன்னாசிப்பழத்துண்டுகள், 4 தேக்கரண்டி ஓமம், ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க தொப்பைக் குறையும். 
  • வெள்ளரிக்காயை அடிக்கடி உண்ணவும். அதில் இருக்கும் அல்கலைன் தொப்பையைக் குறைக்கும்.
  • நெல்லிக்காய் மற்றும் இஞ்சி கலந்த சாறினை எடுக்க தொப்பைக் குறையும். உணவில் தயிர் சேர்ப்பது எடையைக் குறைக்க உதவும்.
  • இரவில் ஜங்க் புட் மற்றும் ஃபாஸ்ட் புட் எனப்படும் சிக்கன் ரைஸ், பீட்சா,பர்கர் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது, நமக்கு தொப்பை வராமல் காக்கும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்