Ivy: குளிர்காலத்தில் தொல்லை செய்யும் படர்தாமரை.. பாட்டி வைத்தியம் என்ன?
குளிர்காலத்தில் தொல்லை செய்யும் படர்தாமரை.. பாட்டி வைத்தியம் என்ன?
குளிர்காலத்தில் தொல்லை செய்யும் படர்தாமரை.. பாட்டி வைத்தியம் என்ன?
குளிர்காலம் வந்துவிட்டால் கால் இடுக்கு, பிறப்புறுப்பு அருகே படர்தாமரை வந்து தொல்லை செய்கிறது. பூஞ்சையினால் உண்டாகும் படர்தாமரை பலரை அடிக்கடி சொறிய வைத்து எரிச்சலை உண்டுசெய்து, சாதாரணமாக நம்மை உட்காரவிடாமல் செய்துவிடுகிறது. படர் தாமரையிலிருந்து தப்பிக்க செய்ய வேண்டிய பாட்டி வைத்திய வழிமுறைகள் குறித்துக் காண்போம்.
- படர் தாமரைக்கு சிறந்த மருந்தாக பூண்டு பயன்படுகிறது. பூண்டினை நல்லெண்ணெய் விட்டு வதக்கி விட்டு, அதில் நீர் ஊற்றி மிருதுவாக மாறும் வகையில் காய்ச்சி எடுக்கவும். பின், அவற்றை எடுத்து நசுக்கி குளிப்பதற்கு முன் படர்தாமரை உள்ள இடத்தில் தடவி ஊறவைத்துவிட்டு 30 நிமிடங்கள் கழித்து குளித்துவர விரைவில் குணமாகும்.
- கீழாநெல்லி இலைகளை அரைத்து படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வர படர்தாமரை உடலை விட்டு நீங்கும்.
- ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு குப்பைமேனி, கீழாநெல்லி இலைகளை சேர்த்து சிறிது நீர் விட்டு, தைலம்போல் காய்ச்சவும். பின் அவற்றை ஆறவைத்து படர் தாமரை மேல் தடவிவர அவை எளிதில் சரியாகும்.
- சந்தன மரக்கட்டைகளை அரைத்து, அதில் எலுமிச்சை துளிகளைக் கலந்து கலக்கிவிட்டு, படர்தாமரை பாதித்த இடத்தில் பூசிவர அவை எளிதில் சரியாகும்.
- அருகம்புல்லையும் மஞ்சளையும் சமமாக பகிர்ந்து எடுத்து அரைத்து படர்தாமரையில் பூசிவர அது நீங்கும்.
- அதேபோல் மிளகை பொடியாக்கி, அதில் நெய் சேர்த்து, படர் தாமரை உள்ள இடத்தில் இரவு தூங்கப்போகும் முன் தடவி ஊறவைத்து, காலையில் அதனை சுத்தமாக தோய்த்து கழுவ விரைவில் படர்தாமரை உடலைவிட்டு பறந்து சென்றுவிடும்.
- கற்றாழை ஜெல்லினை படர்தாமரையில் தடவி வர எரிச்சல் குறைந்து விரைவில் அது குணமாகும்.
- தேனில் பூஞ்சை எதிர்ப்பு தன்மை இருப்பதால், படர்தாமரை பாதித்த உடலின் பல இடங்களில் அதனை அப்ளை செய்ய எரிச்சல் குறையும்.
செய்யவேண்டிய புறசுத்தங்கள்:
- அழுக்குத்துணிகளை போட்டவாறே இருப்பது தவறு. குறிப்பாக உள்ளாடைகளை நன்கு சுத்தம் செய்து வெயிலில் உலரவைத்து உடுத்திவந்தால் இப்பிரச்னை வராது.
- வியர்வை அதிகம் ஆவதால் உண்டாகும் தொற்றினால் படர்தாமரை வரலாம். எனவே, படர்தாமரை பாதிப்பின்போது நாளொன்றுக்கு இருமுறை குளிப்பது நல்லது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.