நோயாளிகளின் உரிமைகள் என்ன? ‘கட் தி காட்’பிரச்சனை; அதிகரிக்கும் சிசேரியன்! – மருத்துவர் புகழேந்தி பேட்டி!
நோயாளிகளின் உரிமைகளாக மருத்துவர் புகழேந்தி கூறுவது என்ன?
சிகிச்சை சரியில்லை என்று மருத்துவருக்கு கத்திக்குத்து, மருத்துவர் கொலை என்ற செய்திகளை நாம் அன்றாடம் கடக்கிறோம். இது அனைத்து செய்திகளையும்போல் அந்த நேரங்களில் ஒரு சென்சேஷனை கிரியேட் செய்துவிட்டு, பின்னர் அந்த பிரச்னை தீர்ந்தவுடன் மறக்கப்பட்டுவிடுகிறது. பின்னர் மீண்டும் சம்பவங்கள் நடைபெறும்போது நாம் இதை மீண்டும் மேற்கோள் காட்டுகிறோம். அண்மையில் கூட சென்னையில் மருத்துவருக்கு கத்திக்குத்து என்ற செய்தி பரபரப்பானது. உண்மையில் நோயாளிகளின் உரிமைகள் என்ன என்று மக்கள் மருத்துவர் கல்பாக்கம் புகழேந்தி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியை பார்க்கலாம்.
இதுகுறித்து மருத்துவர் புகழேந்தி கூறியதாவது,
’நோயாளிகளின் உரிமைகள் என்பது, மருத்துவர்கள் அவர்களிடம், அதாவது அவர்களின் உறவினர்கள், ஏனெனில் நோயாளிகளிடம் நாம் சில விஷயங்களை நேரடியாகத் தெரிவிக்க முடியாது. அவர்கள் மனம் உடைந்து அது சிகிச்சை பாதிக்கும். எனவே அவர்களுக்கு நெருக்கமான உறவினர்களிடம், நோய், அதன் தீவிரத்தன்மை மற்றும் அதற்கு நாம் அளிக்கப்போகும் சிகிச்சை ஆகியவை குறித்து தெளிவாக முதலிலே விளக்கிவிடவேண்டும். அதில் நோயின் தன்மை, தீவிரம், செய்யவேண்டிய சிகிச்சைகள், ஆகக்கூடிய செலவுகள் என அனைத்து விவரங்களையும் தெரிவிக்கவேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இவையனைத்தும் தெரிந்த பின்னர், அவர்கள் முடிவெடுக்கவேண்டும். ஆனால் மருத்துவர்களால் தங்களில் வேலைப்பளு காரணமாக சில விவரங்களை நோயாளிகளிடம் தெரிவிக்க முடியாமல் போது துரதிஷ்டவசம்தான். எனினும் நோயாளிகளை சார்ந்தவர்களிடம் அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துக்கூறவேண்டும் என்றுதான் சட்டம் கூறுகிறது. இன்னும் ஒரு மருந்தை அவர்கள் வழங்கும்போதே, அதன் பக்கவிளைவுகளையும் தெரிவித்துவிடவேண்டும் என்பதும் சட்டம். ஆனால் இங்கு மருத்துவர்கள் அதை கூறுகிறார்களா? என்றால் அதற்காக பதில் நமக்கு தெரிந்ததுதான். எனினும், நோயாளி தரப்புக்கு அவர்களின் சந்தேகங்களை தீர்க்கவேண்டும் என சட்டம் பாதுகாப்புக் கொடுக்கிறது. அது நடைமுறையில் பின்பற்றப்படாதபோது, இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன’
கட் தி காட்
‘இந்தப்பிரச்னை குறித்து பேசுகையில் அண்மையில் ஒரு பிரபல யூடியூபர் தனது மனைவிக்கு தொப்புள் கொடியை வெட்டியபோது, அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசியல் நெருக்கம்தான் இதற்கு காரணம் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் பிரசவ அறையில் கணவர் இருக்கவும், மருத்துவர் கண்காணிப்பில் அவர் அதை செய்வதில் எந்த தவறும் கிடையாது. இது மேலை நாடுகளில் பல காலமாகவே நடைபெறும் ஒன்றுதான். இந்தியாவுக்கு இது புதிது என்பதால், மக்கள் இதுகுறித்து அறியாமல் இருக்கிறார்கள். யூடியூப் பார்த்து வீட்டிலே பிரசவம் போன்றவற்றைதான் நாம் கேள்விக்கு உள்ளாக்கவேண்டுமேயொழிய, அந்த தொப்புள் கொடியையும், அதேபோல்தான் அந்த மருத்துவரும் வெட்டப்போகிறார். யார் வெட்னாலும், வெட்டும், தனது மனைவி மற்றும் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வித்யாசமான அனுபவத்தை தந்தைகக்கும் கொடுக்கும். அதைச் செய்வதால் தவறில்லை’
அதிகரிக்கும் சிசேரியன்கள்
‘இந்த பிரச்னையில் நாம் கவனம்செலுத்தவேண்டியது, உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி 15 சதவீதம் சிசேரியன்கள்தான் செய்யப்படவேண்டும். அது அதிகரிக்கும்போது அது களையப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அந்நிறுவனம் அறிவுறுத்துகிறது. ஆனால் தமிழகத்தில் தாய்-சேய் நலன் என்ற பெயரில் அரசு மருத்துவமனைகளிலே கிட்டத்தட்ட 50 சதவீதமும், தனியார் மருத்துவமனைகளில் 60 சதவீதமும் சிசேரியன்கள் நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே அவற்றைதான் நாம் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமேயொழிய, தொப்புள் கொடி பிரச்னைகளையெல்லாம் பெரிதுபடுத்தி, பிரசவங்களுக்குப் பின்னால் உள்ள உண்மை பிரச்னைகளை நாம், விட்டுவிடக்கூடாது. மக்கள் எதை வலியுறுத்துவது நாட்டுக்கு நல்லது என்பதில் கவனமாக இருக்கவேண்டும்’
இந்த கருத்துக்களை மக்கள் மருத்துவர் புகழேந்தி வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்