Vadha Narayanan Keerai: வாத நோய்யை விரட்டி அடிக்கும் வாதநாராயணன் இலை! பயன்படுத்துவம் எப்படி?
வாதநாராயணன் இலை கிடைத்தால், அதிலிருந்து சாறெடுத்து, அதே அளவு விளக்கெண்ணெயையும் கலந்து, காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாதநாராயணன் இலை
கிராமங்களில் மட்டுமே கிடைக்கும் வாதநாராயணன் கீரை. கிராமங்களில் இந்த கீரையை 'வாத இலை' என்று அங்கு கூறுவார்கள். இதை அதிகமாய் சமையலுக்கு பயன்படுத்தமாட்டார்கள். காரணம் உடலுக்கு அதிக சூட்டைத் தரும். இயற்கையாக உடல் சூடாக இருப்பவர்கள் இந்த கீரை சாப்பிட வேண்டாம்.
வாதநாராயணன் இலை மருத்துவப் பயன்கள்
வாத சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் அற்புதமான மூலிகை இது. நாட்டு மருத்துவம், சித்த மருத்துவம், யுனானி இவைகளில் இந்த வாதநாராயணன் இலை, வாத நோய்களுக்கு எ பெரும் பயன் அளிக்கிறது. காலங்காலமாய் இந்நோய்க்கு இந்த இலையை பயன்படுத்தி வருகிறார்கள்.
வாயு சம்பந்தமான வீக்கங்களுக்கும் இந்த இலையைக் இ கொண்டு மருத்துவம் பார்க்கிறார்கள். வாத நாராயணன் இலையை, சற்று விளக்கெண்ணெய் விட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும். பொறுக்கும் சூட்டளவுக்கு, வீக்கங்களுக்கும், கட்டிகளுக்கும் த ஒத்தடம் கொடுத்தால், சீக்கிரத்தில் குணமாகிவிடும்.
● பேதிக்கு
கிராமங்களில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதிக்கு மருந்து கொடுப்பார்கள். இவ்விதம் செய்வதால் வயிறு, மலக்குடல் சுத்தமாகும். இப்போது யாரும் இப்படி செய்வதில்லை. வயிற்றை சுத்தப்படுத்தாததால் ஏகப்பட்ட நோய்கள் நம்மை பீடிக்கின்றன. வாயுக் கோளாறுகளால் நாம் பாதிக்கப்படுவது குடலை சுத்தப்படுத்தாததால் ஏற்படும் விளைவே ஆகும்.
வாதநாராயணன் இலை கிடைத்தால், அதிலிருந்து சாறெடுத்து, அதே அளவு விளக்கெண்ணெயையும் கலந்து, காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த எண்ணெயை முப்பது கிராம் அளவுக்கு இரவு உள்ளுக்குச் சாப்பிட்டுப் படுத்தால் காலை பேதியாகும். ஒரிருமுறை ஆகலாம். இதனால் வயிறு, குடல் சுத்தமாகும். வாயுக்கோளாறுகள் நீங்கும்.
மலச்சிக்கலின் போது 1 ஸ்பூன் அளவு பருகினால் மலச்சிக்கல் தீரும். இளங்கீரையை (அ) இலையை சமைத்தும் சாப்பிடலாம்.

டாபிக்ஸ்