Iyarkkayin Pokkisham: விஷத்தை முறிக்கும் அகத்தி கீரை.. இதை யாரெல்லாம் சாப்பிட கூடாது?.. அற்புத பலன்கள் என்னென்ன?-what are the health benefits of agathi keerai - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Iyarkkayin Pokkisham: விஷத்தை முறிக்கும் அகத்தி கீரை.. இதை யாரெல்லாம் சாப்பிட கூடாது?.. அற்புத பலன்கள் என்னென்ன?

Iyarkkayin Pokkisham: விஷத்தை முறிக்கும் அகத்தி கீரை.. இதை யாரெல்லாம் சாப்பிட கூடாது?.. அற்புத பலன்கள் என்னென்ன?

Aarthi Balaji HT Tamil
Jan 29, 2024 07:20 AM IST

அகத்திக் கீரையின் அற்புத பலன்கள் என்னென்ன என பார்க்கலாம்.

அகத்திக் கீரை
அகத்திக் கீரை

இந்த கீரையை முன்பு எல்லாம், மூலிகை வைத்தியம், சித்த வைத்தியத்திற்கு பயன்படுத்தப்பட்டது. அகத்திக் கீரையில் காணப்படும் வேர், பட்டை, பூ, காய், இலை யாவுமே மருந்தாகப் பயன்படுகிறது.

அகத்திக் கீரை, சிற்றகத்தி, செவ்வகத்தி, வெவ்வகத்தி என மூன்று வகைகள் உள்ளது. இதில் சிற்றகத்தி, செவ்வகத்தி இவையிரண்டும் சமையலுக்குப் பயன்படுத்த முடியாது. வெவ்வகத்தி தான் சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குளிர்ச்சியான சுபாவம் கொண்டது இந்த கீரை. இதனை தினமும் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. வாரத்திற்கு இரண்டு முறை அகத்திக் கீரை சாப்பிட்டால் நல்லது. மாத்திரை சாப்பிடுமும் நபர்கள் இந்த கீரையை தவிர்த்துவிடுவது உடலுக்கு நல்லது. ஏனென்றால் அகத்திக் கீரை மருந்துகளின் செயல்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாமல் செய்துவிடும்.

அகத்திக் கீரையின் மருத்துவ பயன்கள்

  • மூளைக் கோளாறுகள் நீங்கும்
  • இருதயப் படபடப்பு நீங்கம்

தாய்ப்பால் சுரக்க

தாய்ப் பால் சுரப்பு குறைந்துவிடும். அகத்திக் கீரையுடன் வெள்ளைப் பூண்டு, பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு வைத்து தாய்மார்கள் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். அது குழந்தைகளுக்கும் வலுவடைய உதவும்.

எலும்பு பலமடைய

ஒரு சிலருக்கு எலும்பு பலமற்று போகும். லேசாக தட்டினாலே எலும்புப் பகுதி வலி எடுக்கும். இப்படிப்பட்டவர்கள் அகத்திக் கீரையை உணவோடு சாப்பிட்டு வந்தால், எலும்பு பலமடையும்.

மார்பு வலி நீங்கும்

அகத்திக் கீரையைப் பறித்து, அதனைச் சுத்தப்படுத்தி, இளம் வெயிலில் காயவைக்க வேண்டும். இரண்டு நாட்கள் நன்றாக காய்ந்த கீரையை பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். இதனை காலை, மாலை இருவேளைகளில் சிறிதளவு எடுத்து வாயில் போட்டு, நீரைப் குடித்தால் பல நாட்களாக கஷ்டப்படுத்தி வந்த,மார்பு வலி நீங்கும் .

குடல் சுத்தம் 

அகத்திக் கீரையை வேக வைக்கும் போது அந்த நீரை குடித்துவந்தால், குடல் சுத்தமாகும்.

அகத்திக் கீரை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்

  • மூளைக் கோளாறுகள்.
  • மலச்சிக்கல்
  • இரத்தக் கொதிப்பு
  • பித்தம்
  • உடல் உஷ்ணம்

● சளி

  • இருமல்
  • தொண்டைவலி, தொண்டைப்புண்
  • மார்புவலி
  • காய்ச்சல்.
  • பெரியம்மை நோய்

பல்வேறு நோய்களைப் போக்கும் அகத்திக் கீரையை வாரத்தில் இரு நாட்களாவது சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக வாழ்க்கையை வாழலாம். வளரும் குழந்தைகளுக்கு அவசியம் அகத்திக் கீரையை கொடுங்கள். இது அவர்களின் எலும்பு வளர்ச்சியடைய பெரும் உதவி புரிகிறது என்பதை. நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.