Benefits of Snake Gourd : பிசிஓஎஸ்ஐ அடித்து விரட்டி, கருப்பை ஆரோக்கியத்தை அதிகரிக்கும் புடலங்காயில் நன்மைகள் எத்தனை?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Snake Gourd : பிசிஓஎஸ்ஐ அடித்து விரட்டி, கருப்பை ஆரோக்கியத்தை அதிகரிக்கும் புடலங்காயில் நன்மைகள் எத்தனை?

Benefits of Snake Gourd : பிசிஓஎஸ்ஐ அடித்து விரட்டி, கருப்பை ஆரோக்கியத்தை அதிகரிக்கும் புடலங்காயில் நன்மைகள் எத்தனை?

Priyadarshini R HT Tamil
Jul 01, 2024 05:00 AM IST

Benefits of Snake Gourd : பிசிஓஎஸ்ஐ அடித்து விரட்டி, கருப்பை ஆரோக்கியத்தை அதிகரிக்கும் புடலங்காயில் உள்ள நன்மைகள் எத்தனை என்று பாருங்கள்.

Benefits of Snake Gourd : பிசிஓஎஸ்ஐ அடித்து விரட்டி, கருப்பை ஆரோக்கியத்தை அதிகரிக்கும் புடலங்காயில் நன்மைகள் எத்தனை?
Benefits of Snake Gourd : பிசிஓஎஸ்ஐ அடித்து விரட்டி, கருப்பை ஆரோக்கியத்தை அதிகரிக்கும் புடலங்காயில் நன்மைகள் எத்தனை?

100 கிராம் புடலங்காயில் 86.2 கலோரிகள் உள்ளது. 3.9 கிராம் கொழுப்பு, 0.5 கிராம் சாச்சுரேடட் கொழுப்பு, 12.5 கிராம் கார்போஹைட்ரேட், 0.6 கிராம் நார்ச்சத்துக்கள், 2.9 கிராம் புரதம், கொழுப்பு 0 கிராம், சோடியம் 33.0 மைக்ரோகிராம், பொட்டாசியம் 359.1 மைக்ரோகிராம் உள்ளது.

வைட்டமின் ஏ 9.8 சதவீதம், வைட்டமின் பி6 11.3 சதவீதம், வைட்டமின் சி 30.5 சதவீதம், வைட்டமின் இ 1.1 சதவீதம் உள்ளது. கால்சியம் 5.1 சதவீதம், மெக்னீசியம் 6.7 சதவீதம், பாஸ்பரஸ் 5.0 சதவீதம், சிங்க் 7.2 சதவீதம், மாங்கனீஸ் 12.5 சதவீதம், அயோடின் 5.9 சதவீதம் உள்ளது.

புடலங்காயின் நன்மைகள்

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

கலோரிகள் குறைவான காய் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. நீங்கள் டயட் பின்பற்றுபவராக இருந்தால் புடலங்காயை நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அன்றாடம் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகளுள் ஒன்றாக புடலங்காய் உள்ளது. 

புடலங்காயில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அவை வயிற்றில் எளிதாக செரிமானமாகிவிடும். ஒருவருக்கு வயிறு நிறைந்த உணர்வை நீண்டநேரத்திற்கு தரும். இதனால் நீங்கள் அதிகம் சாப்பிட மாட்டீர்கள் மற்றும் உங்களுக்கு கொழுப்பை விரைவாகக் குறைக்கவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

புடலங்காயில் கொழுப்பு அதிகம் உள்ளது. இதை உங்கள் உணவில் அன்றாடம் சேர்க்கும்போது, அது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதய தசைகள் சரியாக இயங்குவதை உறுதிசெய்கிறது.

சிறுநீரகத்தை சுத்தப்படுத்துகிறது

உடலில் உள்ள கழிவுகள் மற்றும் சிறுநீரகக் கற்களை இயற்கை முறையில் வெளியேற்றுகிறது. உடலின் வெளியேற்றும் முறை அதற்கு உதவுகிறது. சிறுநீரகத்திற்குள் தண்ணீர் சுரப்பதை மேம்படுத்துகிறது. உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றுகிறது. அதே நேரத்தில் உடலுக்கு தேவையான தண்ணீர் சத்தையும் உள்ளுறுப்புகளுக்கு வழங்குகிறது. புடலங்காயின் சாறு சிறுநீரகம் மற்றும் வயிற்றின் அன்றாட பிரச்னைகளை தீர்க்கிறது.

செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

புடலங்காயில் குறிப்பிட்ட அளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இது மலச்சிக்கல், வயிறு உப்புசம் மற்றும் வயிற்று வலியைப் போக்குகிறது. நீங்கள் வயிறு முட்ட சாப்பிட்டபின் ஏற்படும் உபாதைகளைப் போக்குகிறது. இதன் மலமிளக்கும் தன்மை, இயற்கை முறையில் குடல் இயக்கத்தை தூண்டுகிறது. இதனால் குடலில் எவ்வித பிரச்னைகளும் ஏற்படாமல் தடுக்கிறது.

சுவாசத்தை பலப்படுத்துகிறது

புடலங்காக்கு உடலின் உள்ளார்ந்த சளியை நீக்கும் தன்மை உள்ளது. இது உடலில் உள்ள சளியை கரைத்து வெளியேற்றுகிறது. சளி உருவாகும்போது, அதை சுவாசப்பாதைகளில் இருந்து நீக்குகிறது. இது நுரையீரல் இயக்கத்துக்கு நல்லது. அலர்ஜியைத் தடுக்கிறது. ஆஸ்துமா போன்ற சுவாசக்கோளாறுகள் ஏற்படுவதையும், அலர்ஜியையும் போக்குகிறது.

டயட்டுக்கு உதவுகிறது

டயட்டில் இருப்பபவர்கள், புடலங்காயை தங்கள் உணவில் சேர்க்கும்போது, அது அவர்களுக்கு உதவுகிறது. ஏனெனில் புடலங்காயில் இயற்கை சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்கள் குறைவு. இது கார்போஹைட்ரேட்களை தடுத்து நிறுத்துவதன் மூலம் கலோரிகள் அதிகம் உட்கொள்வதை குறைக்கிறது. புடலங்காயை வெட்டி, வேகவைத்து உப்பு, மிளகுத்தூள் தூவி தினமும் மதிய உணவுடன் சேர்த்து சாப்பிடும்போது, அது உங்கள் டயட்டுக்கு உதவுகிறது.

பதற்றத்தைப் போக்குகிறது

இயற்கை அமைன்கள் மற்றும் ஃப்ளேவனாய்ட்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது நரம்பியல் இயக்கங்களைக் தூண்டுகிறது. மூளை மற்றும் நரம்பு செல்களின் ஆக்ஸிடேசனைத் தடுக்கிறது. ஃப்ரி ராடிக்கல்களை உடலில் இருந்து அடித்து விரட்டுகிறது. புடலங்காயில் காலிக் அமிலம் அதிகம் உள்ளது. 

இது நரம்பியல் மற்றும் மனஅமைதியை ஏற்படுத்தும் குணங்கள் கொண்டது. இந்தக்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவதால், உங்களின் டென்சன் குறையும், படபடப்பு, பயம், பதற்றம், மனஅழுத்தம் என அனைத்தும் விலகும். இது உங்கள் மன ஆரோககியத்தை மேம்படுத்தும். மனஅழுத்தத்துக்கு சிறப்பாக சிகிச்சையளிக்கிறது.

ஆசிட் எதிர்ப்பை குறைக்கிறது

அதிகளவில் நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதில் கொழுப்பு குறைவு, கொழுப்பு சுத்தமாக இல்லை. செரிமான பிரச்னைகளை சரிசெய்வதில் புடலங்காய் பெரும் பங்கு வகிக்கிறது. செரிக்காத உணவு பின்னோக்கிச் சென்று, வயிற்றில் அமில சுரப்பை தூண்டும். இதனால் வலி மற்றும் வயிற்றில் அசவுகர்யங்கள் ஏற்படும். 

வயிறு உபாதைகள் மற்றும் அசிடிட்டி ஆகியவை நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். எனவே ஒரு நாளில் ஒருமுறையேனும் புடலங்காய் சாறை பருகும்போது, அது உங்கள் வயிற்றில் உள்ள ஆசிட்களை முறைப்படுத்துகிறது. இது உங்களுக்கு அல்சர், வாயுத்தொல்லை மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளில் இருந்து தீர்வு தருகிறது.

பிசிஓஎஸ் பிரச்னைகளைத் தீர்க்கிறது

நீர்க்காய் என்பதால், புடலங்காய் கலோரிகள் குறைந்த உணவாகிறது. இதனால் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. எனவே பெண்கள் குறிப்பாக பிசிஓஎஸ் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் இந்த காயை கட்டாயம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பிசிஓஎஸ் இருந்தால் உடலின் எடை கடுமையாகக் கூடும். 

இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஃபைட்டோநியூட்ரியன்ட்கள் உள்ளது. இது உடலின் ஆற்றல் வளர்சிதையை ஊக்குவித்து, செரிமானத்தை குறைக்கிறது. மாதவிடாய் வலிகளைப் போக்குகிறது. இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இது ஹார்மோன்கள் சமநிலையை முறைப்படுத்துகிறது.

மேலும் புடலங்காய் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. நீரிழிவு நோய் அறிகுறிகளைப் போக்குகிறது. சருமத்தொற்றுகளை நீக்கி, பளபளப்பாக்குகிறது. தலைமுடியை ஆரோக்கியத்தை அதிகரித்து பொடுகைப் போக்குகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.