உறங்கச்செல்லும் முன் உள்ளங்கால்களில் எண்ணெய் மசாஜ் செய்வதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உறங்கச்செல்லும் முன் உள்ளங்கால்களில் எண்ணெய் மசாஜ் செய்வதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன?

உறங்கச்செல்லும் முன் உள்ளங்கால்களில் எண்ணெய் மசாஜ் செய்வதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil
Nov 26, 2024 10:51 AM IST

உறங்கச்செல்லும் முன் உள்ளங்கால்களில் எண்ணெய் மசாஜ் செய்வதால் என்னவாகும் என்று பாருங்கள்.

உறங்கச்செல்லும் முன் உள்ளங்கால்களில் எண்ணெய் மசாஜ் செய்வதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன?
உறங்கச்செல்லும் முன் உள்ளங்கால்களில் எண்ணெய் மசாஜ் செய்வதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன?

பாதத்துக்கு ஏற்ற சிறந்த எண்ணெய்

பாதத்துக்கு மசாஜ் செய்வதற்கு ஏற்ற சிறந்த எண்ணெய்களாக நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் மூலிகை எண்ணெய்கள் உள்ளன.

உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது

உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலில் உள்ள முக்கிய புள்ளிகளைத் தூண்டுகிறது. இதனால் உங்களுக்க உறங்கி அடுத்த நாள் எழுந்தவுடன் புத்துணர்வு கிடைக்கிறது.

நல்ல உறக்கத்தைத் தூண்டுகிறது

நீங்கள் உங்கள் பாதங்களில் இரவு உறங்கச்செல்லும் முன் மசாஜ் செய்யும்போது, அது உங்கள் உடலுக்கு ஓய்வு கொடுக்கிறது. உங்கள் மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. உங்களுக்கு ஓய்வு நிறைந்த, ஆழ்ந்த உறக்கத்தைத் தருகிறது. இதில் நீங்கள் எசன்சியல் எண்ணெய்களான லாவண்டர் எண்ணெய், போன்றவற்றை கலந்துகொள்வது மேலும் நிறைய நல்ல பலன்களைத் தருகிறது. குறிப்பாக மேலும் இதமூட்டுகிறது.

மனஅழுத்தத்தைப் போக்குகிறது

காலில் நீங்கள் எண்ணெய் வைத்து மசாஜ் செய்யும்போது, அது உங்கள் மனதை இதமாக்குகிறது. உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. உங்களுக்கு ஏற்படும் பதற்றத்தைப் போக்குகிறது. உங்கள் ஒட்டுமொத்த மனஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

நீங்கள் பாதங்களில் மசாஜ் செய்வதை வழக்கமாக்கிக்கொண்டால், அது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அது உங்கள் நரம்பு மண்டலத்தை இதமாக்குகிறது. இதனால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது.

உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது

நீங்கள் அன்றாடம் பாதங்களுக்கு மசாஜ் செய்யும்போது, அது உங்கள் உடலின் இயற்கை கழிவு நீக்க உறுப்புக்களை தூண்டுகிறது. இந்த இயற்கை குணம், உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. உடலின் எண்ணற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.

சருமத்தை மிருதுவாக்குகிறது

உங்கள் பாதங்களில் நீங்கள் எண்ணெய் வைத்து மசாஜ் செய்யும்போது, அது உங்கள் பாதங்களை மிருதுவாக்குகிறது. இது அவை உலர விடாமல் காக்கிறது. இதனால் பாதங்களில் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

தசைகளின் இறுக்கத்தைப்போக்குகிறது மற்றும் வலியைக் குறைக்கிறது

உங்களுக்கு தசை பிடிப்புகள் ஏற்பட்டிருந்தால் அந்த வலியைப் போக்குகிறது. உங்கள் பாதங்கம் மற்றும் முழு உடலையும் அமைதிப்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு நல்ல உறக்கம் கிடைக்கிறது.

தொற்றுக்களைப் போக்குகிறது

பாதங்களில் நீங்கள் மசாஜ் செய்வதை வழக்கமாகக் கொண்டால், அது உங்களுக்கு பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்ஜை தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

மூட்டு வலியைப்போக்குகிறது

தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை நீங்கள் வலி உள்ள இடங்களில் தடவும்போது அது உங்களின் வலியைப் போக்குகிறது. இதனால் உங்களுக்கு மூட்டு வலி மற்றும் மூட்டு இறுக்கம் ஆகியவை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இது உங்களுக்கு நாள்பட நாள்பட நல்ல பலனைத்தருகிறது.

ரத்த ஓட்டத்தை பராமரிக்கிறது

தினமும் நீங்கள் மசாஜ் செய்யும்போது அது உங்கள் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் உங்கள் உடலின் ரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. இது உங்கள் உடல் முழுவதுக்கும் சுறுசுறுப்பைத் தருகிறது. இதனால் உங்கள் வலிகள் மற்றம் டென்சன் ஆகியவை குறைகிறது.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.