தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  What Are The Benefits Of Manathakkali Keerai And Usage

Iyarkkayin Pokkisham: வாய் புண், வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் மணத்தக்காளிக் கீரை..காய், பழம், வேர் பயன்கள் என்னென்ன?

Aarthi Balaji HT Tamil
Feb 06, 2024 06:50 AM IST

மணத்தக்காளிக் கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன் கொண்டது.

மணத்தக்காளிக் கீரை
மணத்தக்காளிக் கீரை

ட்ரெண்டிங் செய்திகள்

மணத்தக்காளிக் கீரையின் காய், பச்சை மணியைப் போல தெ இருக்கின்ற படியால் மணித்தக்காளி என்று அழைப்பார்கள். ஆக மிளகுபோல இருப்பதால் மிளகு தக்காளி என்றும் சொல்வார்கள். வறண்ட இடத்திலும் விளையும் மணத்தக்காளிக் கீரை, நீருள்ள இடங்களிலும் ஏராளமாய் செழித்து வளரும். வெள்ளை நிறத்தில் மரு பூக்கள் பூக்கும்.

இந்தக் மணத்தக்காளிக் கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, தண்டு, காய், கனி, வேர் அனைத்துமே உபயோகப்படக்கூடியது. கசப்புத்தன்மை கொண்டது  மணத்தக்காளிக் கீரை.

மணத்தக்காளிக் கீரை பல பெயர்களைக் கொண்டதாகும்.

• கறிஞ்சிக்கட்டி

● செஞ்சுக்கட்டி

• சுக்கிட்டுக்கீரை

• விடைக்கந்தம்

• வாயகம்

• காசிமாசி

  • வைட்டமின் ஈ
  • வைட்டமின் டி
  • சருமத்தில் ஏற்படும் பிரச்னைகள் நீங்கும்

மணத்தக்காளிக் கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவையே. இதில் அதிகளவு புரதம், மாவுச்சத்து, தாதுப்உப்புக்கள் நிறைந்துள்ளன. மணத்தக்காளிக் கீரையைப் பருப்பு சேர்த்து கூட்டு, பொரியல், குழம்பு வைக்கலாம்.

இதன் மருத்துவப் பயன்கள்

வாய்ப்புண் ஆற

மணத்தக்காளிக் கீரையினை சாறெடுத்து வாயிலிட்டு சிறிது நேரம், தொண்டையில் வைத்து, கொப்புளித் துவந்தால் வாய்ப்புண் ஆறும். கூடவே வாய் துர்நாற்றமும் நீங்கும்.

வயிற்றுப்புண் ஆற

தீராத வயிற்றுப்புண் ஆற எவ்வளவோ மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டும் ஆறவில்லையா? மணத்தக்காளிக் கீரையின் சாறை எடுத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் பருகிவந்தால் வயிற்றுப்புண் சீக்கிரம் ஆறிவிடும். குறைந்தது பத்து நாட்களாவது பருக வேண்டும்.

இதயம் பலவீனம்

இதய பல வீனம் கொண்டவர்கள் வாரம் மூன்று முறை இந்த மணத்தக்காளிக் கீரையுடன் இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு கலந்து சமையல் செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலமாகும்.

காய் தரும் பயன்கள்

* உடல் வலி தீரும்.

* களைப்பை அகற்றும்.

• உடலிலுள்ள நச்சுநீரை வெளியேற்றும்.

• வாந்தியைப் போக்கும்

• இக்காயை வற்றலாக்கி வறுத்து உண்ணலாம் .

பழம் தரும் பயன்கள்

• காது வலியைப் போக்கும்.

• வயிற்றுப் பொருமலை தணிக்கும்.

• காய்ச்சலைப் போக்கும்.

• கருப்பப்பைக்கு வலிமை தரும்.

• பிரசவத்தை எளிமையாக்க உதவுகிறது.

வேரின் பயன்கள்

• மலச்சிக்கலைப் போக்கும்.

மணத்தக்காளிக் கீரையின் வேர், மூலிகை மருந்துகள் தயாரிக்க பெரும் பங்காற்றுகிறது.

பொதுவாய் மணத்தக்காளிக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டுப் வந்தால், உடல் நலம் பெறுகிறது. ரத்தம் சுத்தமாகி முகம் வசீகரமாகிறது. மணத்தக்காளிக் கீரை சிறந்த மருத்துவ உணவாக நமக்கு பயன்படுகிறது. எனவே மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி பயன்படுத்துங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்