Arai Keerai Benefits: ஆண்களுக்கு ஆனந்த வாழ்வு தரும் அரைக்கீரை.. ஒரு வாரம் சாப்பிட்டால் இந்த நோய் வராதா?
அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி தயாரிக்கப்படும் இந்த சைவ சமையல் பல வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது.

அரைக்கீரை
அரைக்கீரை… பெயருக்கு தான் இது இப்படி சொல்லப்படுகிறதே என்று தவிர இந்த கீரையில் அனைத்துவிதமான சத்துக்களும் நிறைந்து உள்ளது. இது அனைத்துவிதமான மக்களுக்கும் ஏற்ற கீரை ஆகும்.
இது கட்டையான தடிமான வேரில் பல கிளைகள் விட்டு தரை, அரையடியிலிருந்து ஒரு அடி உயரம் வரை புதர்போல் வளரும் இயல்பு தண்மை கொண்டது.
இலையின் மேல்பாகம் பச்சை நிறத்திலும், கீழ்பாகம் சிவப்பும் நீலமும் கலந்தாற் போல இருக்கும். ஒரு முறை இக்கீரையை பயிரிட்டால் அது பல மாதங்களுக்கு விளைச்சலை தரும்.