தின்னத்தின்ன தெவிட்டாத சுவை தரும்! தித்திக்கும் தேங்காய்ப்பால் அல்வா! விழாக் காலங்களை அழகாக்கும்!
தேங்காய்ப்பால் அல்வா செய்வது எப்படி?
தேங்காய்ப்பால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாகும். அதை நீங்கள் பழங்களுடன் சேர்த்து சாறு எடுத்தும் பருகலாம். பழங்களில் பால் கலந்து பருகுவதற்கு பதில் தேங்காய்ப்பால் சேர்த்து பழச்சாறுகளை பருகிப்பழகலாம். தேங்காய்ப்பாலில் பொதுவாக சாதம் செய்ய முடியும். அதன் சுவை பிரியாணிக்கே டஃப் கொடுக்கும். அசத்தல் சுவையில் தேங்காய்ப்பால் புலாவ் செய்வது எப்படி என்று பாருங்கள். இது பிரியாணி சுவையிலேயே இருந்தாலும், பிரியாணி செய்யும் முறையில் இருந்து கொஞ்சம் மாறுபடும். இதற்கு தொட்டுக்கொள்ள ரைத்தா மட்டுமே கூடபோதுமானதுதான். தேங்காய்ப்பால் உங்களுக்கு கொடுக்கும் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். தேங்காய்ப்பால் சாதத்தை செய்வதற்கும் கற்றுக்கொள்ளுங்கள்.
தேங்காய்ப்பாலின் நன்மைகள்
தேங்காய்ப்பாலில் ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது லாக்டோஸ் இல்லாததது. தாவர அடிப்படையிலானது. நுண்ணுயிர்களுக்கு எதிரான மற்றும் பூஞ்ஜைகளுக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. அல்சரை குணப்படுத்துகிறது.
ஒரு கப் தேங்காய்ப்பாலில் 169 கலோரிகள் உள்ளது. 1.1 கிராம் புரதம் உள்ளது. 16.9 கிராம் கொழுப்பு, 14.6 கிராம் சாச்சுரேடட் கொழுப்பு, 3.3 கிராம் கார்போஹைட்ரேட், 2.0 கிராம் சர்க்கரை உள்ளது.
தேங்காய்ப்பாலில் கொழுப்பு, சாச்சுரேடட் கொழுப்பு உள்ளது. தேங்காய்ப்பால் கொழுப்பு நீக்கப்பட்டும் கிடைக்கிறது. தேங்காய்ப்பால் உங்கள் உணவுக்கு கிரீமி டெக்ச்ரைக் கொடுக்கும்.
தேங்காய்ப்பாலில் அலர்ஜி ஏற்படுத்தும் குணங்கள் பெரும்பாலும் இல்லை. ஆனால் இது யாருக்காவது அலர்ஜியை ஏற்படுத்தினால் அவர்கள் தவிர்ப்பதே நல்லது. எனினும் தேங்காய்ப்பாலை மிதமான அளவுதான் பயன்படுத்த வேண்டும். அதிகளவு உபயோகித்தால் வயிறு உபாதைகளை ஏற்படுத்தும். தேங்காய்ப்பாலை பயன்படுத்தும்போதும் அதில் தண்ணீர் அதிகம் கலந்து நீர்த்துப்போகச் செய்துதான் உபயோகிக்கவேண்டும்.
தேவையான பொருட்கள்
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
ஏலக்காய் – 2
கார்ன்ஃப்ளார் – ஒரு ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
சர்க்கரை – ஒரு கப்
செய்முறை
தேங்காய் துருவலில் ஏலக்காயை சேர்த்து அரைத்து பால் பிழிந்துகொள்ளவேண்டும். மற்றொரு கிண்ணத்தில் அரை டம்ளர் தண்ணீரில் கார்ன் ஃப்ளார் மாவை கரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
தேங்காய்ப்பால் மற்றும் கார்ன்ஃப்ளார் மாவு கரைத்த தண்ணீர் இரண்டையும் நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.
இப்பொழுது ஒரு அடி கனமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ஐந்து முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக கரைத்து வைத்திருக்கும் மாவு கலவையை அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
அடிக்கனமான பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து இந்தக்கலவையை சேர்த்து கலக்கவேண்டும். நன்றாக கிளறினால் அல்வா திரண்டு வரும். அப்போது சர்க்கரை சேர்த்து கிளறவேண்டும்.
இதில் முந்திரி, பாதாம், பிஸ்தாவை நெய்யில் வறுத்து சேர்த்து அலங்கரிக்கலாம். இவற்றை தேவைப்பட்டால் சேர்க்கலாம். அல்வா பவுடரை வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது குங்குமப்பூவை சேர்த்தும் அல்வாவுக்கு நிறம் கொண்டுவரலாம். நெய் தேவைப்பட்டால் கூடுதலாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த அல்வா வித்யாசமான சுவை நிறைந்ததாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவை நிறைந்ததாக இருக்கும். ஒருமுறை ருசித்தால் இந்த அல்வாவை அடிக்கடி ருசிப்பீர்கள். உங்கள் வீட்டு விழாக்கள், பண்டிகைக்காலங்களிலும் செய்து பரிமாறலாம்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்