Weight Loss With Chia : மளமளவென உடல் எடையை குறைக்க வேண்டுமா? தினமும் காலையில் இந்த ஒரு பானம் மட்டும் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Weight Loss With Chia : மளமளவென உடல் எடையை குறைக்க வேண்டுமா? தினமும் காலையில் இந்த ஒரு பானம் மட்டும் போதும்!

Weight Loss With Chia : மளமளவென உடல் எடையை குறைக்க வேண்டுமா? தினமும் காலையில் இந்த ஒரு பானம் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Updated Jun 15, 2024 10:06 AM IST

Weight Loss With Chia : மளமளவென உடல் எடையை குறைக்க வேண்டுமா? தினமும் காலையில் இந்த ஒரு பானம் மட்டும் போதும். உடல் எடை குறைப்பதுடன், பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

Weight Loss With Chia : மளமளவென உடல் எடையை குறைக்க வேண்டுமா? தினமும் காலையில் இந்த ஒரு பானம் மட்டும் போதும்!
Weight Loss With Chia : மளமளவென உடல் எடையை குறைக்க வேண்டுமா? தினமும் காலையில் இந்த ஒரு பானம் மட்டும் போதும்!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

தேவையான பொருட்கள்

சியா விதைகள் – 1 ஸ்பூன்

இதயம் மற்றும் மூளைக்கு நல்லது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. உடல் எடையை விரைந்து குறைக்கிறது. ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.

எலுமிச்சை – அரைப்பழம்

வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு நல்லது. உங்கள் உடலை நன்றாக சுத்தம் செய்கிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது.

தேன் – ஒரு ஸ்பூன்

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த முறையில் உதவுகிறது.

ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை

உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. செரிமானத்துக்கு சிறந்தது.

சூடான தண்ணீர் – ஒரு டம்ளர்

செய்முறை

சூடான தண்ணீரில் ஒரு ஸ்பூன் சியா விதைகளை சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவேண்டும். இது ஒரு ஜெல்போல் வரும்.

பின்னர் அதில் எலுமிச்சை பழத்தை பிழிந்துவிடவேண்டும். தேன் ஒரு ஸ்பூன், ஏலக்காய்ப் பொடி சேர்த்து கலந்துவிடவேண்டும்.

இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். இதை பருகிய பின் அரை மணி நேரம் கழித்துதான் எதையும் உண்ணவோ அல்லது பருகவோ வேண்டும்.

சியா விதைகளின் நன்மைகள்

முழு புரதம் நிறைந்தது

நார்ச்சத்துக்கள் நிறைந்தது

சியா விதைகளில், நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் செரிமானத்தை அதிகரித்து ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. தண்ணீரில் கலந்து பருகினால், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுப்பவை சியா விதைகள்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபினால்கள் நிறைந்தது

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்தது

இதயத்துக்கு நன்மை தரும் கொழுப்புகள்

மினரல்கள் நிறைந்தது

கலோரிகள் குறைவானது

சியா விதைகளில் கலோரிகள் குறைவாக இருக்கும். ஒரு ஸ்பூன் விதையில் 138 கலோரிகள் உள்ளது. இது நார்ச்சத்துக்கள் நிறைந்தது. இதை கலோரிகள் குறைந்த விதைகளை உணவில் சேர்த்து சாப்பிடும்போது உங்களுக்கு நீண்டநேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது.

கொழுப்பை குறைக்கிறது மற்றும் ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது

சியா விதைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் கரையக்கூடியவை. இதுதான் இந்த விதைகளில் ஏற்படும் பிசுபிசுப்புத்தன்மைக்கு காரணமாகின்றன. இந்த நார்ச்சத்துக்கள் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றன.

செரிமானத்தை தாமதமாக்குகிறது, இதனால் சாப்பிட்டவுடன் அதிகரிக்கும் ரத்த சர்க்கரை உயர்வைக் தடுக்கிறது. இதனால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இதை ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.