Weight Loss : உடல் எடையை குறைக்கவேண்டுமா? தினமும் காலையில் இந்த 2 ஸ்மூத்திகள் மட்டும் போதும்!-weight loss want to lose weight just 2 of these smoothies every morning is enough - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Weight Loss : உடல் எடையை குறைக்கவேண்டுமா? தினமும் காலையில் இந்த 2 ஸ்மூத்திகள் மட்டும் போதும்!

Weight Loss : உடல் எடையை குறைக்கவேண்டுமா? தினமும் காலையில் இந்த 2 ஸ்மூத்திகள் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Aug 20, 2024 11:59 AM IST

Weight Loss : உடல் எடையை குறைக்கவேண்டுமா? தினமும் காலையில் இந்த 2 ஸ்மூத்திகள் மட்டும் போதும்!

Weight Loss : உடல் எடையை குறைக்கவேண்டுமா? தினமும் காலையில் இந்த 2 ஸ்மூத்திகள் மட்டும் போதும்!
Weight Loss : உடல் எடையை குறைக்கவேண்டுமா? தினமும் காலையில் இந்த 2 ஸ்மூத்திகள் மட்டும் போதும்!

நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

உடல் பருமன்

உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது உடல் எடை அதிகரிக்கிறது. உடல் பருமனை நாம் அழகு பிரச்னையாக மட்டும் பார்க்கக்கூடாது. இது மருத்துவ பிரச்னையும் ஆகும். இது பல நோய்கள் மற்றும் உடல் உபாதைகளை அதிகரிக்கிறது.

இது இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, கல்லீரல் கோளாறுகள், உறக்கப் பிரச்னைகள் மற்றும் சிலவகை புற்றுநோய்களையும் இது ஏற்படுத்துகிறது.

சிலருக்கு உடல் எடையை குறைப்பது மிக சவாலான ஒன்றாக இருக்கலாம். உடல், சூழல், உணவு, உடற்பயிற்சியின்மை, மரபு என உடல் பருமனுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கொஞ்சம் அளவு எடையைக் குறைத்தாலும் அது உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்கள் ஆகிய யாவும் உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் பருமனுக்கு சிகிச்சையளிப்பதில் மருந்து மாத்திரைகளும் இடம் பெறுகின்றன.

ஆனால் இயற்கை வழிகளிலும் உடல் எடையை குறைக்க முடியும். அதற்கு சில பானங்கள் உதவுகின்றன. அவை உங்கள் உடல் எடையை குறைப்பதுடன், உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கின்றன. அதில் ஒன்றை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

பாதாம் பால் – ஒரு கப்

கேரட் – 2

ஓட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்

வாழைப்பழம் – 1

பட்டைப்பொடி – கால் ஸ்பூன்

பாதாம் பட்டர் – ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் பாதாம் பால், கேரட், ஓட்ஸ், வாழைப்பழம், பட்டைப்பொடி, பாதாம் பட்டர் என அனைத்தையும் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும். அதை அப்படியே தினமும் காலையில் காலை உணவுக்குப் பதில் பருகவேண்டும்.

தேவையான பொருட்கள்

தேங்காய்ப் பால் – ஒரு டம்ளர்

அன்னாசிப் பழம் – ஒரு கப் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)

கிரீக் யோகர்ட் – 2 டேபிள் ஸ்பூன்

சியா விதைகள் – ஒரு ஸ்பூன்

வாழைப்பழம் – 1

செய்முறை

தேங்காய்ப்பால், அன்னாசிப்பழம், கிரீக் யோகர்ட், சியா விதைகள், வாழைப்பழம் என அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அடிக்கவேண்டும். அதை அப்படியே தினமும் காலையில் காலை உணவுக்கு பதில் பருகிவந்தால் உடல் பருமன் குறையும்.

இந்த இரண்டு ஸ்மூத்திகளையும் தினமும் காலையில் மாற்றி, மாற்றி பருகவேண்டும். இவையிரண்டும் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் பானங்கள் ஆகும். இவை சுவையானவையும் என்பதால், உங்களின் உடல் எடை குறைப்பு பயணத்தை நீங்கள் மகிழ்ச்சியாகச் செய்யலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.