Weight Loss : ஒரு மாதத்தில் 8 கிலோ எடை குறைக்க வேண்டுமா? இந்த ஒரு பானம் மட்டும் இரவில் எடுங்கள்!-weight loss want to lose 8 kg in a month take this one drink only at night - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Weight Loss : ஒரு மாதத்தில் 8 கிலோ எடை குறைக்க வேண்டுமா? இந்த ஒரு பானம் மட்டும் இரவில் எடுங்கள்!

Weight Loss : ஒரு மாதத்தில் 8 கிலோ எடை குறைக்க வேண்டுமா? இந்த ஒரு பானம் மட்டும் இரவில் எடுங்கள்!

Priyadarshini R HT Tamil
Jun 21, 2024 05:44 PM IST

Weight Loss : ஒரு மாதத்தில் 8 கிலோ எடை குறைக்க வேண்டுமெனில் இந்த ஒரு பானத்தை மட்டும் இரவில் எடுத்துக்கொள்ளுங்கள்.

Weight Loss : ஒரு மாதத்தில் 8 கிலோ எடை குறைக்க வேண்டுமா? இந்த ஒரு பானம் மட்டும் இரவில் எடுங்கள்!
Weight Loss : ஒரு மாதத்தில் 8 கிலோ எடை குறைக்க வேண்டுமா? இந்த ஒரு பானம் மட்டும் இரவில் எடுங்கள்!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

உடல் பருமன் இன்று அனைவரின் தலையாய பிரச்னையாக உள்ளது. இதற்காக மக்கள் பல்வேறு வழிகளில் எடையை குறைக்க முனைகிறார்கள். ஆனால், அவர்கள் ஏதோ ஒரு வழியில் சரியான முறைகளை பின்பற்றாமல் உடல் எடையை முறையாக குறைக்க முடியாமல் தவிக்கிறார்கள். 

ஆனால் அவர்கள் சில எளிய வழிகளை பின்பற்றினாலே போதும். உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான வாழ்வு வாழலாம். எளிய உடல் எடை குறைப்பு முறையை இன்று தெரிந்துகொள்ளுங்கள்.

தினமும் இரவு நீங்கள் இரவு உணவை உட்கொள்ளக்கூடாது. அதற்கு பதில் இந்த பானம் மட்டுமே பருகவேண்டும்.

அதேபோல் உங்களின் வழக்கமான உடற்பயிற்சிகளை நீங்கள் தவிர்க்கக்கூடாது. அவற்றையும் கட்டாயம் செய்துவிடவேண்டும்.

தேவையான பொருட்கள்

கேரட் – 1

கேரட்டை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

கேரட்டில் வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளது. இதற்கு உடலை சுத்தப்படுத்தும் திறன் உள்ளது. அது உடலில் உள்ள நச்சுக்களையும், கொழுப்பையும், கழிவுகளையும் வெளியேற்றுகிறது. மேலும் உடலில் சேரும் கூடுதல் தண்ணீரையும் வெளியேற்றுகிறது.

எலுமிச்சை – 2

இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. வயிற்றின் உள்ளே வீக்கத்தை குறைக்கிறது. உடல் எடை குறைப்பதற்கு முக்கியமான பழமாக எலுமிச்சை உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கொழுப்பை வெளியேற்றுகிறது.

செய்முறை

கேரட், எலுமிச்சை இரண்டையும் தண்ணீருடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதை வடிகட்டி, இரவு உணவுக்குப்பதில் பருகவேண்டும். அவ்வாறு பருகும்போது, அது உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் எடை அதிகம் உள்ளவர்கள். 

இதுபோல் ஒரு மாதம் தொடர்ந்து செய்தால், நீங்கள் கணிசமான அளவு உடல் எடையை குறைக்க முடியும். உடன் சரிவிகத உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியை கட்டாயம் செய்யவேண்டும்.

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இதை ஒரு மாதம் தொடர்ந்து கட்டாயம் செய்யவேண்டும். மற்றவர்கள் இதை அவ்வப்போது ஒரு வாரம் தொடர்ந்து செய்யும்போது, உடலில் சேரும் நச்சுகள் மற்றும் குப்பைகள் உடனுக்குடன் வெளியேற்றப்படும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.