Weight Loss : உளைச்சதை, தொங்கும் தொப்பை கரைக்கவேண்டுமா? இதோ இந்த இரண்டு பொருள் மட்டும் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Weight Loss : உளைச்சதை, தொங்கும் தொப்பை கரைக்கவேண்டுமா? இதோ இந்த இரண்டு பொருள் மட்டும் போதும்!

Weight Loss : உளைச்சதை, தொங்கும் தொப்பை கரைக்கவேண்டுமா? இதோ இந்த இரண்டு பொருள் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Jun 14, 2024 02:00 PM IST

Weight Loss : உளைச்சதை, தொங்கும் தொப்பை கரைக்கவேண்டுமா? அதற்கு இஞ்சி - தேன் ஊறல் எப்படி செய்து பயன்படுத்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Weight Loss : உளைச்சதை, தொங்கும் தொப்பை கரைக்கவேண்டுமா? இதோ இந்த இரண்டு பொருள் மட்டும் போதும்!
Weight Loss : உளைச்சதை, தொங்கும் தொப்பை கரைக்கவேண்டுமா? இதோ இந்த இரண்டு பொருள் மட்டும் போதும்!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

உடல் பருமன் 

உடல் பருமன் பிரச்னைகளால் இன்று பெரும்பாலானவர்கள் அவதிப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உடலில் தங்கும், கெட்ட கொழுப்புக்களே காரணமாகின்றன. 

இதனால் அவர்கள் உடலில் ஊளைச்சதை எனப்படும், தேவையற்ற சதை உருவாகி உடலின் ஆரோக்கியத்தையே கெடுக்கிறது. இதனால் உடலில் பல்வேறு வியாதிகள் ஏற்படுகின்றன.

எனவே உடல் பருமனைக் குறைப்பது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. அதற்கு கட்டாயம் உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு மட்டும்தான் உதவும். 

நீங்கள் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் உணவுகளும் சிறப்பான பலனைத்தரும். உடலின் ஊளைச்சதையையும், தொங்கும் தொப்பையையும் கரைக்கும் இஞ்சி, தேன் ஊறல் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

இஞ்சி - 50 கிராம்

தேன் – 100 கிராம் அல்லது தேவையான அளவு

செய்முறை

இஞ்சியை நன்றாக தோல் சீவி அலசி நிழலிலே நன்றாக காயவைத்து ஈரமில்லாமல் எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதை ஒரு கண்ணாடி பாட்லில் சேர்த்து, இஞ்சி மூழ்கும் அளவுக்கு தேனை ஊற்றவேண்டும். பின்னர் அந்த பாட்டிலை காற்று புகாமல் அடைத்துவைத்துவிடவேண்டும்.

காற்று மற்றும் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இரண்டும் பட்டால் இந்த கலவையில் பூஞ்ஜை படர்ந்துவிடும்.

ஸ்பூனில் நன்றாக கலந்து, இரண்டு துண்டு இஞ்சி மற்றும் ஒரு ஸ்பூன் தேனையும் சேர்த்து உட்கொள்ளவேண்டும்.

இஞ்சி ஊறஊற சுவை நன்றாக இருக்கும். காலையில் இதை வெறும் வயிற்றில் மட்டும்தான் சாப்பிடவேண்டும். பின்னர், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் பருகவேண்டும்.

இதை தினமும் செய்து வர உங்கள் உடலில் உள்ள ஊளைச்சதை குறையும், தொங்கும் தொப்பை சுருங்கும். மலச்சிக்கல் நீங்கிவிடும். குடல் ஆரோக்கியமாக இருக்கும். கல்லீரலின் செயல்பாடு அதிகரிக்கும். எனவே கட்டாயம் செய்து சாப்பிட்டு பயன்பெறுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.