Tamil News  /  Lifestyle  /  Weight Loss Tips If You Want To Reduce Body Weight, Here It Is Cinnamon Bark Water!

weight Loss Tips: உடல் உடையை குறைக்க வேண்டுமா இதோ.. லவங்க பட்டை நீர்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 11, 2024 01:30 PM IST

இலவங்கப்பட்டை சரியான செரிமானத்திற்கு உதவுகிறது. இலவங்கப்பட்டை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது எடையை கட்டுக்குள் வைத்திருக்கும். உடல் பருமனை தடுக்கிறது.

உடல் உடையை குறைக்க வேண்டுமா இதோ.. லவங்க பட்டை நீர்!
உடல் உடையை குறைக்க வேண்டுமா இதோ.. லவங்க பட்டை நீர்!

ட்ரெண்டிங் செய்திகள்

உடல் எடை குறைப்பு என்பது உடற்பயிற்சியால் மட்டும் வருவதில்லை. சில உணவுகளை உண்பதும் உடல் எடையை குறைக்க உதவும். இதில் இலவங்கப்பட்டை தண்ணீரை தினமும் குடித்து வந்தால், விரைவில் உடல் எடையை குறைக்கலாம். இலவங்கப்பட்டையை மசாலாப் பொருளாகப் பார்க்கிறோம். பிரியாணி, புலாவ், குருமா போன்ற உணவுகளில் போடுவோம். அதற்கு மேல் பயன்படுத்துவது இல்லை. உண்மையில், இலவங்கப்பட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட பானத்தை குடிப்பதால், ஒரு மாதத்திற்குள் உடல் எடையை குறைக்கலாம். இந்த பானத்தை தினமும் குடித்து ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால், ஒரு மாதத்தில் உடல் எடை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.

இலவங்க பட்டையின் நன்மைகள்

இலவங்கப்பட்டை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. உடல் கலோரிகளை திறம்பட எரிக்கச் செய்கிறது. இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவும். இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையை சமன் செய்வதன் மூலம் அதிகமாக சாப்பிடுவதை குறைக்கலாம். மேலும் மற்ற உணவுப் பொருட்களை உண்ணும் ஆசையும் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.

இலவங்கப்பட்டை பசியை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது. தினமும் இலவங்கப்பட்டை பானங்களை உட்கொள்வதன் மூலம் பசியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதிக கலோரி உணவுகளை உட்கொள்வதை குறைக்கிறது. இலவங்கப்பட்டை சிறந்த செரிமான பண்புகளைக் கொண்டுள்ளது. உணவு எவ்வளவு சிறப்பாக ஜீரணமாகிறதோ, அந்த அளவு ஊட்டச்சத்துக்களை உடலால் உறிஞ்ச முடியும். உணவு செரிக்கப்படாமல் இருந்தால் அது மற்ற பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே இலவங்கப்பட்டை சரியான செரிமானத்திற்கு உதவுகிறது. இலவங்கப்பட்டை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது எடையை கட்டுக்குள் வைத்திருக்கும். உடல் பருமனை தடுக்கிறது.

தயாரிப்பு முறை

இலவங்கப்பட்டை தண்ணீரை எப்படி செய்வது என்று பார்க்கலாம். 2 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் அல்லது ஒரு இலவங்கப்பட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றவும். அந்த தண்ணீரில் இலவங்கப்பட்டை தூள் அல்லது இலவங்கப்பட்டை சேர்த்து கொதிக்க விடவும். குறைந்தபட்சம் அரை மணி நேரம் இந்த பானத்தை கொதிக்க வைத்த பிறகு, அதை வடிகட்டி ஒரு குவளையில் தண்ணீர் வைக்கவும். தண்ணீர் அறை வெப்பநிலை அல்லது சூடு வந்த பிறகு, எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடிக்கவும். சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்க்கக்கூடாது. இந்த தண்ணீரை தினமும் காலையில் குடித்து வந்தால் ஒரு மாதத்திற்குள் பலன் கிடைக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்