Weight Loss Tips : ஒரு ஸ்பூன் பவுடர்! வாரத்தில் 3 நாள்! உடல் எடை குறைக்கும் மாயம் தெரியவேண்டுமா?
Weight Loss Tips : ஒரு ஸ்பூன் பவுடர்! வாரத்தில் 3 நாள்! உடல் எடை குறைக்கும் மாயம் தெரியவேண்டுமா?
தேவையான பொருட்கள்
கொள்ளு – 4 டேபிள் ஸ்பூன்
(நீண்ட தூரம் சளைக்காமல் ஓடும் அளவுக்கு பலத்தை கொடுக்கக்கூடியது கொள்ளு. இதனால்தான் குதிரைக்கான உணவாக கொடுக்கப்படுகிறது. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும். ஊளைச்சதையை குறைக்கும்.
கொழுப்பை குறைக்கும். மலச்சிக்கலை சரிசெய்யும். வயிற்றுப்பொருமல் அஜீரண கோளாறு பிரச்னைகளை சரிசெய்யும். எலும்புகள் மற்றும் நரம்பு சோர்வை நீக்கும். உடலுக்கு வலு சேர்க்கும். உடலுக்கு சூட்டை தரும். இதனால் இந்தப்பொடியில் வெந்தயம் சேர்க்கிறோம்)
வெந்தயம் – 1 ஸ்பூன் (அதிகம் சேர்த்தால் பொடி கசக்கும்)
மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
(சுவை, மணம் தரும். அழற்சிக்கு எதிரானது. கெட்ட கொழுப்புக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது)
சீரகம் – ஒன்றரை ஸ்பூன்
(கொழுப்பை குறைக்கும், அஜீரண கோளாறை சரிசெய்யும், மலச்சிக்கலை நீக்கும். உடல் எடையை குறைக்க உதவும்)
இந்துப்பு – அரை ஸ்பூன்
(வயிற்றுப்பகுதியில் உள்ள ஊளைச்சதையை குறைக்கும்)
பூண்டு – 2 பல்
செய்முறை
குறைவான தீயில் கடாயில் கொள்ளு சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.
சீரகம், மிளகு, வெந்தயம் என ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து சூடாக்கி எடுத்துக்கொள்ளவேண்டும். இவை அதிகம் வறுபடவேண்டிய அவசியம் இல்லை. சூடானாலே போதும்.
வறுத்த அனைத்தையும், ஆறவிட்டு காய்ந்த மிக்ஸிஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பானம் தயாரிப்பது எப்படி?
ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, அதில் பொடியை சேர்த்து, 2 பல் பூண்டை தட்டி சேர்த்து, 5 நிமிடங்கள் கொதித்தவுடன் வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை குடித்த பின்னர் முக்கால் மணி நேரம் கழித்து உங்களின் வழக்கமான பானங்களை பருகிக்கொள்ளலாம்.
தினமும் பருகக்கூடாது ஒரு நாள்விட்டு ஒருநாள் என வாரத்தில் 3 நாட்கள் மட்டும் பருகவேண்டும். ஊளைச்சதை அதிகம் இருந்தால் இந்தப்பொடியை இட்லி, தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
உடல் எடை குறையும்வேளையில், உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். எலும்புகளுக்கும் வலு கிடைக்கும். வயிற்றுப்பொருமல், அஜீரணகோளாறு போன்ற எந்த பிரச்னைகளும் இருக்காது. உடல் எடை 3 முதல் 4 கிலோ வரை குறையும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். கெட்ட நீர் மற்றும் கெட்ட கொழுப்பை வெளியேற்றும்.
டாபிக்ஸ்