Weight Loss Journey : என்னுடைய எடை குறைப்பு பயணம்…? அனுபவம் பகிர்ந்த இளம் பெண்!
Weight Loss Journey : நிதி என்ற பெண்மணி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தான் உடல் எடையை எப்படி குறைத்தேன் என்று பகிர்ந்துள்ளார். அதுகுறித்த விவரங்கள் இதோ உங்களுக்காக இங்கு வழங்கப்படுகிறது.

வயிறு, தொடை மற்றும் இடுப்புப் பகுதிகளை சுற்றியுள்ள கொழுப்பைக் குறைப்பது என்பது சவாலான ஒன்றாகும். ஆனால் அதை உங்களால் செய்ய முடியும். அதற்கு நீங்கள் பின்பற்றவேண்டியது ஒன்று மட்டும்தான். அது ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் என அவை இருக்கவேண்டும். நிதி குப்தா என் ஃபிட்னஸ் கோச் 33 கிலோ எடையை குறைத்தார். இது உங்களுக்கு உதவும். எனவே அவர் என்ன கூறுகிறார் என்பதைப் பாருங்கள். அவர் தனது அண்மை இன்ஸ்டராகிராம் பதிவில் அவரின் உடல் பருமன் புகைப்படம் மற்றும் உடல் எடையைக் குறைத்த புகைப்படம் இரண்டையும் பகிர்ந்துள்ளார்.
சில வீடியோக்களையும் பகிர்ந்து, உடல் எடையைக் குறைப்பது முடியாத காரியமல்ல, அதை தவிர நீங்கள் வேறு என்ன செய்ய முடியும், தொப்பையில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் உங்களுக்கு நேரமும், முயற்சியும் தேவை என்று தெரிவித்துள்ளார். எனவே உங்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்களை எப்போதும் சரியாகப் பின்பற்றுங்கள். அதில் உங்களின் ஒரு சிறு வெற்றியைக் கூட கொண்டாடி மகிழுங்கள்.
உடல் எடையைக் குறைக்க நீங்கள் செய்ய வேண்டியதாக நிதி கூறுவது என்ன?
அவர் கூறியதாவது,
முழு மற்றும் இயற்கை உணவுகளான புரதம், காய்கறிகள், பழங்கள், கொழுப்பு குறைந்த பால் பொருட்களை சாப்பிடவேண்டும்.
பாதுகாப்பான உடல் எடை குறைப்பை உறுதிப்படுத்துங்கள். அதற்கு வாரத்தில் 1 முதல் 2 பவுண்ட் எடையைக் குறைக்க வேண்டும். அதற்கு ஒரு நாளில் 500 முதல் 1000 கலோரிகளை தவிர்க்கவேணடும்.
அதிகம் நடங்கள். ஒரே இடத்தில அமர்ந்து இருக்காதீர்கள்.
சோடியம் மற்றும் சர்க்கரை அதிகம் சாப்பிடும் பழக்கத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் பெண்ணாக இருந்தால் 1200 கலோரிகளுக்கு கீழும், ஆணாக இருந்தால் 1800 கலோரிகளுக்கு கீழும் உணவைக் குறைத்துவிடாதீர்கள்.
சாலட் அரை தட்டு, முழு தானியங்கள் கால் தட்டு, புரதம் கால் தட்டு என உங்களின் முழு தட்டும் இருக்கவேண்டும்.
தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் 20 நிமிட நடை முக்கியமானது.
இவ்வாறு நிதி தெரிவித்தார்.
அவர் தனது உடல் எடை எப்படி குறைத்தார் தெரியுமா?
மேலும் நிதி கூறுகையில்,
வாரத்தில் 3 நாட்கள் 50 நிமிடங்கள் உடலுக்கு வலு கொடுக்கும் பயிற்சிகள், 2 நாட்கள் கார்டியோ மற்றும் 2 நாட்கள் லைட்டான உடற்பயிற்சிகள் அதில் ஸ்கிப்பிங், படியேறுவது 10,000 ஸ்டெப்ஸ் நடை இருக்கவேண்டும்.
வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடவேண்டும். வெளியில் சாப்பிடும்போது தரமான உணவுகளை மட்டும் சாப்பிடவேண்டும்.
விரைவான, சாத்தியமில்லாத விஷயங்களை எதிர்பார்க்காதீர்கள். எடை குறைத்தல் சாத்தியமில்லாத ஒன்றல்ல. ஒட்டுமொத்தமாக கலோரிகள் குறைப்பது மற்றும் உடற்பயிற்சிகள் உதவும்.
நீங்கள் முதலில் தொப்பை, தொடை மற்றும் இடுப்புப் பகுதிகளில் உள்ள கொழுப்புக்களை முதலில் கரைக்கவேண்டும். கொழுப்பு என்பது உடல் முழுவதிலும் உள்ள கொழுப்பு செல்களில் சேமிக்கப்படுகிறது. சிலருக்கு கொழுப்பு செல்கள் சில இடங்களில் அதிகம் இருக்கும். அதற்கு அந்த இடங்களில் அதிக கொழுப்பு சேரும் என்பது பொருள்.
நீங்கள் உங்களின் கலோரிகள் உட்கொள்ளும் அளவை குறைக்கும்போது, உங்கள் உடல் சேமித்து வைத்துள்ள கொழுப்பை உங்கள் உடலுக்கு ஆற்றலாக மாற்றிக் கொடுக்கிறது. ஆண்களைவிட பெண்களுக்கு அதிகளவில் உடலில் கொழுப்பு சேரும். இடுப்புப்பகுதிகளில் கர்ப்ப காலங்களில் அதிகம் கொழுப்பு சேரும். பெண் என்றால் 35க்கு மேலும் ஆண் என்றால் 40க்கு மேலும் உங்கள் இடுப்பு அளவு இருந்தால், உங்கள் உடலின் உள் உறுப்புக்களில் கொழுப்பு அதிகம் தங்கியுள்ளது. இதனால் உங்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும் என்று பொருள்.
ஆரோக்கியத்தின் வழியில் உடல் எடையைக் குறைக்க முயற்சியுங்கள். ஆனால் குறுக்கு வழியில் செல்ல முயலாதீர்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
Disclaimer: This article is for informational purposes only and not a substitute for professional medical advice. Always seek the advice of your doctor with any questions about a medical condition.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்