Weight Loss Journey : உடல் எடை குறைப்பு பயணத்தில் வெற்றியடைய வேண்டுமா? இதோ இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும்!
Weight Loss Journey : உடல் எடை குறைப்பு பயணத்தில் வெற்றியடைய வேண்டுமெனில், இதோ இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும்.
வகைவகையான வண்ணமயமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்பது மிகவும் அவசியம். உங்கள் உணவில் 50 சதவீதம் காய்கறிகள் மற்றும் பழங்களாக இருக்கவேண்டும். 25 சதவீதம் முழு தானியங்கள், 25 சதவீதம் புரதச்சத்துக்கள் நிறைந்த உணவும் எடுத்துக்கொள்ளவேண்டும். நார்ச்சத்துக்கள் 30 கிராம் அளவு கட்டாயம் எடுக்கவேண்டும். கொழுப்புக்களை குறைத்துவிட்டு, ஃபேட்டி ஆசிட் உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
காய்கறிகள், பழங்கள், மீன், பருப்பு வகைகள், நட்ஸ்கள், விதைகள், முழுதானிய உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
எண்ணெய், வெண்ணெய், சர்க்கரை, சிவப்பு இறைச்சி, பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், வெள்ளை பிரட், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உங்கள் உணவில் திடீரென சில உணவுகளை தவிர்த்தால், அது உங்கள் உடலில் முக்கிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் குறைபாட்டை ஏற்படுத்தும். எனவே ஊட்டச்சத்து நிபுணர் அல்லது சுகாதார அலுவலரின் அறிவுரைப்படி நீங்கள் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் பொதுவானவை. ஆனால் தனிநபர் தேவைக்கு ஏற்ப உணவுகளை நிபுணர்கள் பரிந்துரைப்பார்கள். அவற்றை எடுத்துக்கொண்டு பலன்பெறவேண்டும்.
உணவு மற்றும் எடை டைரியை பராமரியுங்கள்
நீங்கள் வெற்றிகரமாக உங்கள் உடல் எடையை குறைக்கவேண்டுமெனில், சுயகவனம் அதிக தேவை. எனவே ஒரு டைரி அல்லது மொபைல் ஆப், வைத்துக்கொண்டு, நீங்கள் ஒவ்வொரு முறை உணவு சாப்பிடும்போதும்இ அதை குறித்துவைத்துக்கொள்ளவேண்டும். உங்கள் உடலின் எடையை வாரத்தில் ஒருமுறை அளவிடவேண்டும். ஆன்லைனில் பிஎம்ஐ இன்டக்ஸ் என்ற ஒன்று இருக்கும், அதை பயன்படுத்தி எப்போதும், பாடி மாஸ் இன்டக்ஸ் காட்டும் அளவுகளை மதிப்பிடவேண்டும்.
வழக்கமான உடற்பயிற்சி
நீங்கள் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும்
உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுக்கும், வழக்கமான உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடல் பயிற்சியை அதிகரிப்பது, அதை சரியான முறையில் செய்வது இவையிரண்டும் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.
ஒரு மணி நேரம் மிதமான உடற்பயிற்சி தினமும் கட்டாயம் செய்யவேண்டும். வேகமான நடை சிறந்தது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் உங்களால் செய்ய முடியாவிட்டால் 150 நிமிடங்கள் ஒரு வாரத்துக்கு போதுமானது.
நீங்கள் வழக்கமான உடற்பயிற்சிகள் செய்யாதவராக இருந்தால், மெல்ல மெல்ல உங்களின் உடற்பயிற்சி அளவை அதிகரிக்க வேண்டும். பின்னர் அது அதிகரிக்கும். இந்த முறையை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் போதிய அளவு உடற்பயிற்சியை தினமும் செய்ய முடியும். உங்கள் அன்றாட வாழ்வின் அங்கமாக உடற்பயிற்சி மாறிவிடும்.
அதேபோல் நீங்கள் உடல் எடையை குறைப்பதில், நீங்கள் உண்ணும் உணவின் அளவை உறுதி செய்வதும் உங்களுக்கு மனதளவில் உதவும். அதோபோல் உங்கள் உடற்பயிற்சி அளவுகளையும் நீங்கள் பதிந்து வைக்கலாம். உங்கள் கலோரிகள் அளவை முறையாக பராமரிக்க உங்களுக்கு பல ஆப்களும் உதவும். எவ்வளவு அவர்கள் உணவு உண்ணவேண்டும், எத்தனை கலோரிகள் குறைக்க முடியும் என்பதை அவை துல்லியமாக காட்டிவிடும்.
புதிதாக உடற்பயிற்சிகள் செய்ய துவங்குபவர்கள்
நாயுடன் நடைபயிற்சி செய்யலாம்
படிகளில் ஏறலாம்
தோட்ட வேலைகள் செய்யலாம்
ஆடலாம்
வெளியில் விளையாடலாம்
பார்கிங்குக்கும், வீட்டுக்கும் அதிக தூரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்.
நீங்கள் ஏதேனும் உடற்பயிற்சியை கட்டாயம் துவக்கினால்தான் உங்களுக்கு நாள்பட்ட நோய்கள் ஏற்படாது.
நீங்கள் புதிதாக உடற்பயிற்சியை துவங்குகிறீர்கள் என்றால், உங்களுக்கு தேவைப்பட்டால் மருத்துவ அறிவுரைகள் எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு மருத்துவ அறிவுரை கட்டாயம் தேவை. மேலும் உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் அச்சத்தையும் சுகாதார அலுவலர்களின் உதவியுடன் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
பானங்களாக அருந்தும் கலோரிகள் அளவைக் குறைக்கலாம்
ஒரு நாளில் நீங்கள் இனிப்பான பானங்கள், மது மற்றும் சோடா மற்றும் தேநீர் ஆகியவற்றை பருகுவதன் மூலம், 100க்கும் மேற்பட்ட கலோரிகளை உட்கொள்கிறீர்கள். இவை வெறும் கலோரிகள் எனப்படும். இவை உடலுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கிறது. இவற்றால் உங்கள் உடலுக்கு எவ்வித ஊட்டச்சத்துக்களும் கிடைக்காது.
நீங்கள் உணவுகளுக்குப் பதில் ஸ்மூத்திகள் எடுப்பதற்கு பதில், நீங்கள் இனிப்பான தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம். அதில் ஆரஞ்ச் அல்லது எலுமிச்சையை சுவைக்காக சேர்த்துக்கொள்ளலாம். பசியை சாப்பிட்டு போக்கிக்கொள்ளலாம் அல்லது தண்ணீர் பருகியும் போக்கிக்கொள்ளலாம்.
உணவை அளந்து சாப்பிடுவது
நீங்கள் எந்த உணவையும் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. கலோரிகள் குறைவா காய்கறிகள் கூட உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். எனவே நீங்கள் உணவு உட்கொள்ளும் அளவை கணக்கிடுவது நல்லது. அதற்கு நீங்கள் நேரடியாக பாக்கெட்களில் இருந்து உணவை சாப்பிடக்கூடாது. அளவிடும் கருவிகள் மற்றும் எடைபோடும் இயந்திரத்தை பயன்படுத்தி அளவிட்டுக்கொள்ளவேண்டும். தேவைக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள்
உங்கள் அளவை நீங்கள் இப்படி அளவிடலாம்
கால்ஃப் பாலில் கால் கப்
டென்னிஸ் பாலின் அரை கப்
பேஸ் பாலின் ஒரு கப்
ஒரு கைப்பிடி
ஒரு டீஸ்பூன்
ஒரு டேபிள் ஸ்பூன்
ஒரு சிட்டிகை
ஒரு ஸ்லைஸ் ஆஃப் டிவிடி
இதுபோன்ற மேலும் பல குறிப்புக்களை அறிய இணைந்திருங்கள் ஹெச்.டி தமிழுடன்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்