Weight Loss Journey : குண்டுப்பெண்ணே கேலி; மலையேற முடியாமல் அவதி; நடிகை வித்யூலேகா ராமன் எடை குறைப்பு பயணம்!
Weight Loss Journey : குண்டுப்பெண்ணே என்ற கேலி மற்றும் மலையேற முடியாமல் அவதி என நடிகை வித்யூலேகா ராமனின் எடை குறைப்பு பயணம் எப்படியென்று பாருங்கள்.
2022ம் ஆண்டு நடிகை வித்யூலேகா ராமன் சே ஸ்வாக் என்ற யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டியில் கூறியது என்னவென்று இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
வித்யூலேகா ராமன், காமெடி படங்கள் மற்றும் குணச்சித்தர வேடங்களிலும், முக்கிய கதாநாயகிகளாகவும் திரையில் தோன்றி நடித்து வருபவர். அவரின் உடல் எடையை குழந்தை முதலே அனைவரும் கேலி செய்வார்கள் என்று வருந்துகிறார். மீடியாவுக்கு வந்தவுடனும் அதே கேலி தொடர்ந்ததால் உடல் எடை குறைப்பு பயணத்தை துவக்கியதாக கூறுகிறார்
இவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்
ஒருமுறை மலையேறியபோது என்னால் விறுவிறுவென ஏறமுடியவில்லை, உடன் வந்தவர்கள் மற்றும் வயோதிகர்கள் என அனைவரும் ஏற நான் பட்ட சிரமம்தான், நான் உடல் எடையை குறைக்க காரணம்.
எப்போதும் அம்மா ஜிம் செல்ல அறிவுறுத்தும்போது தோன்றவில்லை. பின்னர்தான் நானே உணர்ந்தபோது உடல் எடையை குறைக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். உடலும், ஆரோக்கிமும்தான் பெரிய சொத்து, எனவே அது குறைந்தபோது எடுக்கப்பட்ட முடிவுதான், இந்த உடல் எடை குறைப்பு பயணம்.
உடலில் உள்ள கழிவுகளை அகற்ற ஆயுர்வேத சிகிச்சை முதலில் மேற்கொண்டேன். பின்னர் அரிசி, மாவு, வெள்ளை உணவுகளை தவிர்த்தேன். அரிசிக்கு பதில் சிறுதானியங்கள், குயினோவாவை தேர்ந்தெடுத்தேன். அரிசி சாதத்தை குறைத்து, காய்கறிகள் அல்லது இறைச்சியை அதிகம் எடுத்துக்கொண்டேன். அரிசியை குறைத்து பருப்பு வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொண்டேன்.
ரிவர்ஸ் ப்ளேட்டிங் முறை
உடல் எடை குறைப்பில் ரிவர்ஸ் ப்ளேட்டிங் என்பது, சாதத்தை குறைவாக வைத்து காய்கறிகளை அதிகம் வைப்பது, பொதுவாக சாதம் அதிகம் வைத்து, பொரியலை குறைப்பார்கள். ஆனால் இதுபோல் எடை குறைப்பதால் இந்த எடை குறைப்பு பயணம் வெற்றிகராமாக மாறியது.
ஆனால் வயிறை பட்டினி போட்டு உடல் எடையை குறைக்க முயற்சி செய்யக்கூடாது. இதுபோல் செய்யும்போது உங்களுக்கு வயிறும் நிறையும், உடல் எடையும் குறையாது. பட்டினி கிடந்தால், உங்கள் உடல் இழந்த எடையை மீண்டும் அதிகரித்துவிடும்.
அழகான வாசகங்கள்
10 நாளில் 10 கிலோ குறைப்பு போன்ற வாசங்களுக்கு மயங்காதீர்கள். சரிவிகித உணவு மற்றும் உடற்பயிற்சி செய்தாலே போதும். 10 மாதத்துக்கு 10 கிலோ எடையை குறைக்கலாம். அதுவும் உடலுக்கு நல்லது. 10 நாளில் குறைக்கும்போது, உங்கள் சருமம் சுருங்கும். உடல் குழம்பும். ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும். எனவே உடல் எடையை உடனடியாக குறைப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும்.
மார்ச் 2019ல் துவங்கிய எனது உடல் எடை குறைப்பு பயணம், 86 கிலோவில் இருந்து 2021ம் ஆண்டு செப்டம்ரில் எனது திருமணத்தின்போது, 66 கிலோவாக இருந்தது. இரண்டு ஆண்டில் இருபது கிலோ எடையை குறைத்தேன். அதுதான் ஆரோக்கியமான உடல் குறைப்பு பயணம்.
ஆரோக்கியமான உடல் எடை குறைப்பு
80 சதவீதம், 20 சதவீதம் உடற்பயிற்சி, இது இரண்டையும் முறையாக செய்யவேண்டும். என்னை குண்டு என்று கேலி செய்தபோது கூட, நான் உடல் எடையை குறைக்கவில்லை. நானே எனக்கு வேண்டும் என்று உணர்ந்தபோதும்தான், உடல் எடையை குறைத்தேன் அதுவும் சரியானதுதான்.
எனக்கு பிசிஓஎஸ் பிரச்னையும் இருந்தது, அதற்கும் மருத்துவர்கள் உடல் எடையை குறைக்கவேண்டும் என்று அறிவறுத்தினார்கள். உடல் எடை குறைய குறைய எனக்கு உற்சாகம் கிடைத்தது. எனது கணவரும் உடல் எடை குறைப்பு பயணத்தில் இருந்ததால், இந்த உடல் எடை குறைப்பு சாத்தியமானது. எனவே நீங்கள் நினைத்தால் உடல் எடையை குறைக்கலாம். ஒருமுறை குறைத்து அதை பராமரிப்பதும் சிரமம், அதற்கு உதவும் டயட்டை தேர்ந்தெடுத்து பலன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்