Weight Loss Journey : லாக் டவுனில் தான் 7 கிலோ குறைத்த ரகசிய பானத்தை நடிகை சோனா நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்!
Weight Loss Journey : லாக் டவுனில் தான் 7 கிலோ குறைத்த ரகசிய பானத்தை நடிகை சோனா நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மேலும் அவர் மனதின் மகிழ்ச்சியே அழகைக் கூட்டும் மற்றும் எடையை குறைக்கும் என்பது நடிகை சோனாவின் அழகு ரகசியம் என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஐபிசி மங்கைக்கு 2021ம் ஆண்டு நடிகை சோனா கொடுத்த பேட்டியிலிருந்து, உடல் எடை குறைப்பு, சரும பராமரிப்பு, தலைமுடி பாதுகாப்பு குறித்து கூறியவை, அவர் கடைபிடிப்பதையும் தெரிவித்தார்.
சரும பராமரிப்பு
மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் உங்கள் உடல் ஒட்டுமொத்தமும் ஆரோக்கியமாக இருக்கும். பெரிய முக அமைப்புக் கொண்டவர்கள் தலைமுடியை இருபுறத்திலும் விட்டு முகத்தை பாதியளவு மறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். எனக்கு அதுபோல் இருப்பதால், இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும் ஒன்றாகும்.
முகத்தை கழுவி, வைட்டமின் சி சீரம் மட்டும் பயன்படுத்துவேன். ஐஸ் க்யூப்களை துணியில் போட்டு முகத்தில் மசாஜ் செய்தால் உங்கள் சருமம் நன்றாக இறுக்கமாகும். சருமத்தில் அதிகம் கிரீம்களை போட்டு பாதிப்பை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். ஃபேஷியலை தவிர்க்கவேண்டும். உங்களுக்கு ஒத்துப்போகும் மேக்அப் ப்ராடக்ட்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
சரும பராமரிப்பில் மேக்அப் முக்கிய பங்கு வகிக்கிறது. பணி நிமித்தமோ அல்லது நிகழ்ச்சிகளுக்காகவோ நீங்கள் மேக்அப்போட்டால் அதை களைக்கும்போது கவனம் தேவை. நீங்கள் பேபி எண்ணெய் மற்றும் டிஸ்யூ வைத்து முகத்தை சுத்தம் செய்து மேக்அப்பை களைக்கவேண்டும். நேரடியாக தண்ணீர் ஊற்றி களைத்தல் சருமம் பாதிக்கப்படும். தேவைப்படும்போது மட்டும் மேக்அப்பை குறைக்கவேண்டும்.
கூந்தல் பராமரிப்பு
மகிழ்ச்சியான இல்லாமல் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், முதலில் கொட்டுவது முடிதான். எனவே நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். வீட்டில் இருக்கும்போது, எண்ணெய் வைத்து இறுக்கமாக ஜடை போடாமல், லூசாகவே வைத்திருங்கள். பெண்கள் தலைமுடி உதிர்வைத் தடுக்க முடியாது. உங்களுக்கு பொடுகு இருந்தால், நீங்கள் உங்களின் சீப்பு மட்டும்தான் பயன்படுத்தவேண்டும்
உடல் எடை குறைப்பு
அதற்கு நான் கொரோனாவின் இரண்டாவது லாக்டவுனில் 7 கிலோ குறைத்தேன். அதற்கு நான் பயன்படுத்தியது டம்மி டிரிங்க் ஆகும். அதை செய்வது எப்படி என்றால், இது கேரள ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், நண்பர் மூலம் அறிமுகமான இந்த பானத்தை நீங்கள் தொடர்ந்து பருகிவந்தால், உங்கள் உடல் எடை மிக வேகமாகக் குறையும்.
தேவையான பொருட்கள்
சுக்குப் பொடி – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கருப்பு சீரகத் தூள் – ஒரு ஸ்பூன்
தண்ணீர் – ஒரு டம்ளர்
எலுமிச்சை பழச்சாறு – அரைப்பழத்தின் சாறு
செய்முறை
தண்ணீரை அடுப்பில் வைத்து, சுக்குப்பொடி, கருப்பு சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து சூடானவுடன் இறக்கிவிடவேண்டும் கொதிக்கவிடக்கூடாது. அதை வடிகட்டி, எலுமிச்சை பழத்தின் சாறை கலந்து இரவு உறங்கச் செல்லும் முன் பருகவேண்டும். இதை முதலில் ஒரு மாதம் தொடர்ந்து செய்ய வேண்டும். உடலில உள்ள கொழுப்பு குறைந்தவுடன், வாரத்தில் முன்று முறை பருகவேண்டும்.
நன்றாக சாப்பிட வேண்டும். ஒருவேளை உணவு நன்றாக சாப்பிடவேண்டும். இரவு 7.30 மணிக்கு மேல் சாப்பிடும் அனைத்தும் உடலுக்கு தேவையில்லாததுதான். முடிந்தவரை மாலை 7 மணிக்கு முன் இரவு உணவை முடித்துவிடவேண்டும்.
மனஅழுத்தம்
கோவம் அதிகமானால், அந்த இடத்தை விட்டு நான் அகன்றுவிடுவேன். கோவத்தை காட்டினால், உறவை இழக்க நேரிடும். அடுத்தவர்கள் பார்ப்பார்கள். மன்னிப்பு கேட்டாலும் நான் கொட்டிய வார்த்தைகளை திரும்ப பெற முடியாது. குடும்ப பிரச்னைகள் என்றால், நான் யாரையும் சந்திக்க மாட்டேன். எழுத ஆரம்பிப்பது அல்லது வீடியோக்கள் எடுத்து பதிவேற்றுவது என செய்து கோவத்தை குறைத்து, மனஅழுத்தத்தை குறைத்துக்கொள்கிறேன். நான் விலாகில் எழுதுவேன். நேர்மறையாகத்தான் எழுதுவேன். எந்த சூழலிலும் நேர்மறை எண்ணங்களை கொண்டிருங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்